அலகாபாத்.
அலகாபாத் என்ற ஊரில், கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் இடமே திருவேணிசங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
பிரயாக்ராஜ் பெயர்மாற்றம்.
பிரயாக் அல்லது பிரயாகை என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தை மன்னர் அக்பர் நகரமாக உருவாக்கி இலாகாபாத் என்று பெயரிட்டார். பின்னர் ஷாஜகான் காலத்தில் அலகாபாத் என்று அமைக்கப்பட்டது. உத்திரபிரதேச முதலமைச்சர் யோகிஆதித்தியனாத் அவர்களால் மீண்டும் பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கும்பமேளா.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் திருவேணிசங்கமத்தில் நீராடுவார்கள். உஜ்ஐ;யினி, ஹரித்வார், நாசிக், என்று பல இடங்களில் கும்பமேளாநடைபெற்றாலும், பிரயாக்தாஜ் மேளாவே புகழ் பெற்று விளங்குகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார விழாவிற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
திருவேணிசங்கமம் சிறப்பு.
பாற்கடல் கடையும்போது கிடைத்த அமிர்தத்தில் சிறிதளவு இங்கு விழுந்துவிட்டதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக இங்கு நீராடினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. (பார்வையுற்றநாள்- 16.9.2022)
நாங்கள் பார்த இடங்களின் புகைப்படம் மற்றும் காணொளி.
ஆஞ்சனேயர் கோவில்.
திரிவேணிசங்கமம்.
காஞ்சிமடம்.
ஆனந்தபவனம்.
பரத்வாஜ் ஆசிரமம்.
No comments:
Post a Comment