பத்ரிநாத் (ஸ்ரீபத்ரி நாராயணன்.) (sep2022)
பத்ரிநாத் என்பது பஞ்சபத்ரி என்று ஐந்து ஷேத்திரங்களை குறிப்பிடுகிறது. விஷால் பத்ரியையே நாம் பத்ரிநாத் என்று அழைக்கிறோம்.
1.விஷால்பத்ரி.
2.ஆதிபத்ரி.
3.விருத்தபத்ரி.
4.பவிஷ்யபத்ரி.
5.யோகதியான்பத்ரி.
1.விஷால்பத்ரி.
108 திவ்யஷேத்ரங்களில் ஒன்றான இந்தபத்ரிநாத் பிரதான பத்ரிநாத் ஆகும். இமயமலை கடும் பனிபொழிவு காரணமாக 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். பனிபொழிவுகாலத்தில் அருகில் உள்ள ஜோஷிமட் என்ற இடத்தில் பெருமாளை வைத்து பூஜிக்கின்றனர்.
2.ஆதிபத்ரி.
கர்ணபிரயாகையில் இருந்து ராணிகேத் மார்கத்தில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆதிபத்ரி கோவில் 6 முதல் 12 ஆம் நூற்றாண்டுவரை பல அந்நிய சக்திகளால் பாதிப்புகளுக்குயுள்ளாகின. ரிஷி நாராயணன் அவர்களால் உருவாக்கப்பட்ட கோவில் குப்தர்களால் புனரமைப்பு செய்யப்பட்டது. 2000 ஆண்டுகள் பழமையானது. பஞ்சபாண்டவர் மற்றும் ஆதிசங்கரர்; வழிபட்ட ஆலையம்.
350 சதுரமீட்டர் பரப்பளவில் 14 சிறிய கோவில்களை கொண்டது. அதில் பிரதான மூலவர் ஆதிநாராயணர்.
விருத்தபத்ரி.
பிரதான சாலையில் இருந்து முறையாக இல்லாத பாதையில் 2கி.மீ. பயணம் செய்து இந்த நாராயணனை தரிசிக்க வேண்டும். இந்த வழி புகைபடத்தை உங்களுடன் பகிர்கின்றேன். அலகநந்தாவின் அழகான இந்த பள்ளத்தாகில் நாரதமுனிவருக்கு ஸ்ரீமன் நாராயணன் காட்சி கொடுத்த இடம். நாரதரால் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு, ஆதிசங்கரரால் பூஜிக்கப்பட்ட இடம் என்று வரலாறு கூறுகிறது.
பவிஷ்யபத்ரி.
நாங்கள் இங்கு செல்லவில்லை. கடினமான இடம் என்றும், சக பயணனிகளில் பலர், ஆர்வம் இன்மையாலும். பலர் மிக சோர்வாக இருந்ததாலும். நாங்கள் இந்த பெருமாளை தரிசனம் செய்யவில்லை. 5அடி உயரம் உள்ள ஒரு கருப்புபாராங்கல்லில், பெருமாளின் உருவம் தானாக தோன்றி வருகிறது என்றும், பெருமாள் உருவம் முழுமையாக தெரியும் காலத்தில், பத்ரிநாராயணனை தரிசிக்கமுடியாது என்றும், இந்த பவிஷ்யபத்ரியே பத்ரிநாத் கோவிலாக மக்கள் தரிசிப்பர் என்று கூறப்படுகிறது.
யோகபத்ரி.
இதுவே யோகபத்ரி என்று அழைக்கப்படுகிறது. கர்ணனன் பிறப்பு, பாண்டவர்கள் பிறப்பு, குந்தி,பாண்டு திருமணம் என்று பல வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடம் என்று கூறப்படுகிறது. சாலையில் இருநது 200 படிகள் கிழே இறங்கவேண்டும். வாசுதேவராக ஒருசன்னதியும், சாளகிராம மூரத்;தி வெங்கலச்சிலையிலும் உள்ளது. மகாபாரத கதாபாத்திரம், பாண்டு அவர்களால் நிர்மானிக்கப்பட்ட கோவிலாகும்.
பயணஅனுபவம்.
அற்புதமான வானிலை காரணமாக தரிசனம் சிறப்புற்றது. (தரிசனநாள் செப்டம்பர் 28-2022).


பத்ரிநாத் (விஷால் பத்ரி) தரிசனம்-10.10.2024.
இந்த முறை நாங்கள் இரவே பத்ரிநாத் சென்று தங்கிவிட்டோம். குளிர் மிக அதிகமாக இருந்தது. அதிகாலை 5 மணிக்கே நாங்கள் கோவில் சென்றுவிட்டோம். மிக குறைவான பக்தர்களுக்கு மத்தியில் பெருமாளின் திருமஞ்சன தரிசனம் கிடைத்தது.
விருத்தபத்ரி தரிசனமும் கிடைக்கப்பெற்றோம்.
3 கி.மீட்டர் மலையேற்றம் உள்ள பவிஷ்யபத்திரியையும் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணமும் உதிக்கப்பெற்றோம்.
நீலகண்டபர்வதம். (பர்வதம்-மலை)
கைலாஷ் மலை ஒரு தேவாரவைப்புத்தலம், இதுபோன்றே, நீலகண்ட மலையும் ஒரு வைப்புதலம் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அறிந்திருக்கவில்லை. அதனால் இரவே பத்ரிநாத்தில் தங்கி காலை சூரியோதத்தில் மலையை தரிசிக்க வேண்டும்; என்பதற்காகவும் அதிகாலையே நாராயணரை தரிசனம் செய்தோம். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியோதயம் சரியாக இல்லை. நல்ல உதயத்தில் சூரியனின் ஒளிகதிர்கள் மலையின் மீதுப்பட்டு தங்கநிறமாக (பென்னார்மேனியனாக) ஜொலிக்கும். சூரியோதத்திற்காக நானும் என்கணவரும் ஒன்றறை மணி நேரம் காத்திருந்தோம். இந்த தரிசனம் மிக அபூர்வமான ஒன்றாகும்.