வள்ளிமலை

 வள்ளிமலை (தரிசனநாள்- 16.2.2025)

அமைவிடம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.

 வரலாறு

சமண தீர்தங்கரர் பசுவநாதருக்கு இங்கு சிலை, மற்றும் சமண படுக்கைகள் நிறைந்து இருந்தது. 9ஆம் நூற்றாண்டுவரை சமணபடுகைகளே இங்கு இருந்தன.



 கோவிலுக்கு மேலே 1கி.மீ. தொலைவில் ஒரு திருப்புகழ் ஆசிரமம் மற்றும் அதன் எதிர் பகுதி மற்றும் மலையின் மேல பகுதியில் சமணபடுக்கைகளும் உள்ளன. வள்ளியம்மை தினைபயிறை காக்கும் பணியை இந்த இடத்தில் செய்துவந்தார்.  முருகப்பெருமான் வள்ளியை மணக்கவிரும்பியவுடன். வள்ளியின் தந்தை நம்பிராஜன் திருத்தணியில் முருகனுக்கு வள்ளியை திருமணம் செய்துவித்தார். வள்ளியின் பிறந்த இடமான இங்கு வீற்றிருக்க நம்பிராஜனின் விருப்பத்தை நிறைவேற்ற, முருகபெருமான் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.











கோவில் சிறப்பு

மலையின் அடிவாரத்தில் ஒரு கோவிலும், சுமார் 300 படிகளுக்கு பின் ஒரு கோவிலும் உள்ளது. இரண்டு கோவில்களுமே மலையை குடைந்த குடைவரை கோவில்கள். இரண்டு இடத்திலும் வள்ளி தெய்வனையுடன் சுப்ரமணியசாமியாக இறைவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மலையடிவாரத்தில் வள்ளி அம்மனுக்கு தனி சன்னதியுள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.


 









 கிருபானந்தவாரியின் முயற்சியிலேயே கட்டப்பட்ட கோவிலாகும். 18 ஆம் நூற்றாண்டுக்குபிறகு கட்டப்பட்டதே இந்த கோவிலாகும்.







கிருபானந்தவாரியின் தோழர் மற்றும் அவர் விருப்பத்திற்கு மிகவும் உதவியவர். – அருணாசலபிள்ளை.





No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...