வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர்.

 வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர். (தரிசனம்-15.2.2025)


அமைவிடம்

 வேலூர் நகரத்தின் மையப்பபகுதியில் இந்த கோட்டை மற்றும் கோவில் அமைந்துள்ளது. 

கோட்டை.

ஒரே நுழைவாயிலையும், கோட்டையை சுற்றி அகழியும் அமைந்துள்ளது. 136 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ள இந்த கோட்டை, தற்சமயம் சில மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை உள்ளடக்கியுள்ளது.






ஜலகண்டேஸ்வரர்

 ஏழு நிலை ராஜகோபுரத்துடன்  அமைந்த மிக பிரம்மான்டமான கோவில். கோவிலில் நுழைந்தவுடன் குளமும், பெரிய மண்டபமும் நம்மை வரவேற்கிறது. வலம்புரி விநாயகரை தரிசனம் செய்து விட்டு சென்றால், உட்பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், பிள்ளையார், சப்த கன்னிகைகள், வீரபத்திரர் ஆகியோர்களை தரிசிக்கலாம். வள்ளி தேவசேனா சமேதா சுப்ரமனியர், வைஷ்ணவி, துர்கை, லெட்மி, காலபைரவர், லிங்கோத்பவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத விஷ்ணு, நால்வர், நடராஜர், என்ற பல சன்னதிகள் உள்ளன. 

சுவரகண்டேஸ்வரர் 

அகிலாண்டேஸ்வரி சமேத சுரகண்டேஸ்வரர் என்று அழைக்கப்பட்டு வந்த இறைவன் பின்நாட்களில், ஜலகண்டேஸ்வரர் என்ற பக்தர்களால் அழைக்கப்படலானார்.









முக்கியகுறிப்பு

இத்தலம் பற்றிய பலசிறப்பு மற்றும் ஆச்சரியமூட்டும் செய்திகளை என் நட்பு வட்ட மூலம் அறியப்பெற்றேன். இதன் நம்பக தன்மையை உறுதி செய்தபின், இந்த பக்கத்தை மேம்படுத்துகிறேன்.     


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...