விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் (தரிசனம் - 15.2.2025)
அமைவிடம்.
தமிழ்நாடு, வேலூரில் இருந்து 12 கி.மீ தொலைவில், விருஞ்சிபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
வாய்ப்பு
கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று மிகவும் பிரயர்தனம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று. நாங்கள் பெங்களுரில் இருந்து, புதுச்சேரிக்கு செல்லும் வாய்பை பயன் படுத்தி, வேலுரில் தங்கி பல தெய்வ திருத்தலங்களை தரிசனம் செய்தோம். இதில் முதன்மையானது இந்த சிவபெருமான் ஆலயம்.
கோவில் வரலாறு
திருவண்ணாமலையில் அடி முடி கானமுடியாத பிரம்மா, விரிஞ்சிபுர கோவில் அர்சகருக்கு மகனாக பிறக்கிறார். சிவசர்மன் என்ற பெயரில் உள்ள பிரம்மா, குழந்தை பருவத்திலேயே தந்தையை இழந்துவிடுகிறார். உறவினர்கள் இந்த சிவசர்மனுக்கு உபநயணம் செய்து விக்க மறுத்தது மட்டுமல்லாமல், இறைபணியையும் தாங்களே பெற விரும்புகின்றனர். கதியற்று இருக்கும் இவர்களுக்கு சிவபெருமான் முதியவர் வேடத்தில் வந்து இந்த பாலகனுக்கு உபநயணம் செய்துவித்து, சிவபூஜைக்கான திட்சயையும் செய்து வைக்கிறார். இக்கோவில் லிங்கம் மகாதிருமேனியாக உள்ளதால், இந்த பாலகனால் அபிஷேகம் செய்ய முடியவில்லை. சிறுவனின்பக்தியை ஏற்று சிவபெருமான் தன் லிங்க தீருமேனியை சற்று சாய்த்து அபிஷேகம் செய்ய உதவுகிறார். இந்த சிறப்பு நடந்தது கார்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை. இதன் காரணமாக இன்னாலில் இக்கோவில்சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
கோவில் சிறப்பு
13987 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மிக பெரிய கோவில். 110 அடி உயர கிழக்கு ராஐகோபுரமும், திரிவிஞ்சை, “மதில்அழகு” என்று போற்றப்படும் கோவிலாகவும் விளங்குகிறது. 5 பிராகாரம், இரண்டு அடுக்கு மாளிகை, திருகல்யான மண்டபம், நூற்றுகால் மண்டபம், மற்றும், சிற்ப கலைநயமிக்க தூண் மற்றும் சுவர்களுடன் வளங்குகிறது. சூரிய தீர்தம், பிரம்ம தீத்ததம், சிம்ம தீர்தம், என்று மூன்று தீர்தங்கள் உள்ளது. ஆதிசங்கரரரால் எந்தரம் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது இந்த சிம்மதீர்தத்தில். இந்த சிம்ம தீர்த்தததில் நீராடுவது மிக சிறப்பானதாக பக்தர்களால் கருதப்படுகிறது.
பாஸ்கராய அபிஷேகம்.
சுயம்பு மூர்தியாக, சாய்ந்த நிலையில் மகா லிங்கமாக உள்ள சிவபெருமான்மீது, பங்குனி மாதத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன.
தலவிருட்சம்.
பனை மரம் இத்தல மரமாக உள்ளது. இந்த மரத்தில் காய்கும் காய்கள் ஒரு வருடம் கருப்பு நிறத்திலும், மறு வருடம் வெள்ளை நிறத்திலும் காய்கும் அதிசய நிகழ்வு இங்கு நிகழ்கிறது.
அப்பயதீட்ஷதர் பிறந்த ஊர். அம்பிகை மரகதாம்பிகை.
No comments:
Post a Comment