மகாதேவன் மலை (தரிசனம் - 16.2.2025)
அமைவிடம்
தமிழ்நாடு, வேலூர் மாவட்டம் கீழ்வழிதுணையான்குப்பம் என்ற ஊரை அடுத்த காங்குப்பம் என்ற கிராமத்தில், 75.09 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலாகும்.
வரலாறு
சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. சுயம்புவாக இருந்த லிங்கத்தின் பாணத்துடன் ஆவுடையாரை பொருத்தியதாக தலபுராணம் கூறுகிறது. பின்னர்; விநாயகர், முருகர், நின்றகோலத்தில் திருமால் என்று பிற சன்னதிகள் கட்டப்பட்டன.
தற்போதைய நிலை.
“மகானந்த சித்தர்” என்பவரால் தற்சமயம் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சித்தரை பற்றி பல தகவல்கள் சொல்லப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இவரை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இவரின் புகைபடத்தை இந்த பதிவில் போடுகிறேன். மிக சிறியதான இந்த கோவில் தற்சமயம் மிகபிரம்மான்டமாக உருவெடுத்துள்ளது. நான் எடுத்த புகைப்படமும், கானொளியும் பார்த்து இதை உணர்வீர்கள்.
பிற வசதிகள்
நாள்முழுவதும் தரிசனம் செய்யலாம். அன்னதானம் உள்ளது. நாங்கள் இங்குதான் சாப்பிட்டோம். வாகன நிறுத்த இடம் உள்ளது. மலைமேல் வாகனம் ஓட்டுவது மிக எளிதாக உள்ளது.
“மகானந்த சித்தர்” |
புதிகாக கட்டப்படும் கோவில்கள் மற்றும் குளம் மிக சிறப்பாக உள்ளது. பின்னாளில் சிறந்த ஆன்மீக சுற்றுலாதலமாகும் என்பதை அடிப்படையாக கொண்டு கட்டுமானம் மிக சிறப்பாக நன்கு திட்டமிட்டு செயல்வடிவம் பெற்று வருகிறது.
No comments:
Post a Comment