மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி (தரிசனம் - 17.2.2025)
அமைவிடம்
தழிழ்நாடு, விழுப்புரம்மாவட்டம்; மேல்மலையனூரில் அமைந்துள்ளது இந்த அங்காளபரமேஸ்வரி கோவில்.
வாய்ப்பு
எங்களின் பெங்களுர் - புதுச்சேரி பயணத்தில், நாங்கள். செஞ்சி – திண்டிவனம் வழியாக பாண்டிவரும் வழிதடத்தில், மேல் மலையனூர் 18 கி.மீ. என்ற பலகையை பார்தவுடன். Google உதவியுடன் கோவில் நடை திறப்பு நேரத்தை அறிந்து கொண்டு, உடனே தரிசனம் செய்ய பயணித்தோம். நாங்கள் இருவருமே வாகனம் ஓட்ட தெரிந்து வைத்திருந்தது இதுபோன்ற நேரத்தில் எங்களுக்குமிக உதவியாகயிருந்தது. 20 ஆண்டுகள் புதுச்சேரியில் வாழ்ந்தும் நாங்கள் தரிசனம் செய்யாத கோவில். உடனே இந்த வாய்பை பயன்படுத்திகொண்டு. தரிசனம் செய்ய முடிவெடுத்தோம்.
கோவில் புராணம்.
நான்கு யுகங்களுக்கு மேலாக உலகையாளும் உமை இங்கு வீற்றிருக்கிறார். பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் ஏற்பட்ட சாபத்தை போக்க மேல் மலையனூர் நதிக்கரையில் 5து தலை நாகமாக மாறி தவமேற்கிறார். இருவரும் இங்கு சாபவிமோசனம் அடைந்தனர். அம்பிகை பாம்பாக புற்றில் இருப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
பெயர்காரணம்
சிவனின் அங்கத்தில் ஒருபாதியக உள்ள உமை என்பதால் அங்காளபரமேஸ்வரி (சிவனின் அங்கத்தை ஆளும் ஈஸ்வரி) என்ற பெயர் பெற்றால். (அர்தநாரீஸ்வரர் வடிவம்)
No comments:
Post a Comment