கம்போடியா (பயணநாட்கள்- 28.2. மற்றும் 1,2, 3.2025)
முன்னுரை
27.2.2025 இரவு 10 மணிக்கு தாய்லாந்திலிருந்து கம்போடியா வந்தடைந்தோம். அங்கோர்வாட் தான் இங்கு பிரதான சுற்றுலா தலம். கம்போடியா தலைநகரம் பினோம்பெனி (Phnom Penh). ஆனால் சைம்ரீப் (Siem Reap) என்ற விமானநிலையமே அங்கோர்வாட் கோவிலுக்கு அருகாமை என்பதால், நாங்கள் சைம்ரீப் விமானநிலையத்தை அடைந்தோம்.
விசா.
இந்த விசா என்பது முன்று வகையில் செயல்படுகிறது. 1. நட்புநாடு, மற்றும் சுற்றுலாதுறை வளர்சியை அடிப்படையாக கொண்டு விசா கட்டணம் இல்லாமல் செயல்படுவது. 2. நாட்டிற்கு சென்றவுடன் விமானநிலையத்திலேயே விசா கட்டணம் செலுத்தும் முறை. 3. வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பே அந்தநாட்டின் அனுமதி என்று விசா கட்டணம் செலுத்தி விசா வாங்கி கொள்வது, என்று மூன்று முறைகள் இந்த விசாவில் கடைபிடிக்கப்பபடுகிறது. இதில் இரண்டாவது முறையான விமானநிலையத்திலேயே விசா கட்டணம் செலுத்தும் முறை கம்போடியாவில் கடைபிடிக்ப்படுகிறது. விசா கட்டணமாக இவர்கள் எங்களிடம் இருந்து அமெரிக்க டாலரையே பெற்றனர். நம்நாட்டிற்கும் கம்போடியாவிற்;கும் ஒன்றரை மணி நேரம் வித்யாசம். தட்பவெட்பநிலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்நாட்டு பணத்தின் பெயர் ரீல்ஸ். ஆனால் இங்கு இந்திய ரூபாய், அமெரிக்கடாலர் இரண்டையும் ஏற்றுக்கொள்கின்றனர். வியாபாரிகள் இந்தியர்களை பார்த்த உடன் பொருளின் விலையை இந்திய ரூபாய் மதிப்பை உடனே சொல்கின்றனர். கி.பி. 600- ல் பல்லவர்கள் கம்போடியாவிலும் ஆட்சி செய்ததன் காரணமாகவும் இருக்கலாம். தமிழ்நாட்டு உணவு இங்கும் கிடைக்கிறது. இந்த நாட்டில் இடதுபுறமாக வாகனத்தை இயக்குகின்றனர்.
கியர் மாற்றம்.
நம்பல்லவர்கள் கட்டிய ஏரி. (28.2.2025) நாள்-1.
பல்லவ மன்னன் சூரியவர்மனால் 11 நூற்றாண்டில், வெட்டப்பட்டது இந்த ஏரி. தற்சமயம் (west mebon) மெபன் கோவில் என்று இந்த இடம் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பலகையில் இந்திய பல்லவ மன்னர் சூரிய வர்மன் கட்டினார் என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று இந்தியனான எனக்கு தோன்றியது.
சைம்ரீப் நகர பகுதியில் அமைந்துள்ள புத்த மடாலயங்கள்.
இரவுநேர விளக்கு அலங்காரம் - சைம்ரீப் நகரம், கம்கோடியா.
நாங்கள் சாப்பிட்ட இந்திய உணவகம்.
நான்கு பயணியர் தாய்லாந்தலலிருந்து சென்னை திரும்பினர், சுமார் 10 பயணியர் கம்போடியாவில் எங்களுடன் இணைந்தனர். இவர்களின் வருகையில் சில சிரமங்கள் காரணமாக நாங்கள் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கம்போடியா சைம்ரீப் மார்கெட் சென்றோம்
சைம்ரீப் மார்கெட்
. கடல் உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த நாடு விருந்தளிக்கிறது. சகபயணியர் பலர் இந்த உணவு உட்கொள்ளும் வாய்பை பயன் படுத்திக்கொண்டனர்.
மார்கெட் புகைப்படங்கள் மற்றும் கானொளிகள்
SIEM REAP CITY TOUR.
![]() |
Combodia Currency |
![]() |
Our Combodia Tourist Guide. |
ஆயிரம்லிங்கங்கள் (1.3.3025) நாள்-2.
“ஜெயவர்மன் நோரோடோம் பூங்கா” என்று இந்த இடத்திற்கு பெயரிட்டுள்ளனர். (பெருமையாக உள்ளது). ஜெயவர்மன் மற்றும் அவரின் மகன் இருவருமாக இந்த ஆற்றின் கரைபகுதியில் ஆயிரம் லிங்கங்களை கல்லில் உருவாக்கியுள்ளனர். ஆற்று நீர் லிங்கத்தின் மீது விழுந்தபின்னரே (அபிஷேகம்) மக்கள் பயன்பாட்டிற்கும், அங்கோர்வாட் பெருமாள் திருமஞ்சனத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர்.
ஆயிரம்லிங்கம் புகைப்படும்
பள்ளிகொண்டபெருமாளின் சிற்பம்.
புத்தமடாலயம்
2005 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவில்.
புனோம்குலன் அருவி
நம்வூரில் உள்ளது போல் ஒரு சாதாரண அருவி. சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
மிதக்கும் கிராமம்.
“டோன்லே சாப் ஏரி” (Tonle Sap Lake)என்ற ஏரி இந்த நாட்டின் மையபகுதியில் உள்ளது. 1977 –ஆம் ஆண்டு முதன் யுனெஸ்கோ பாரம்பரியமாக போற்றப்படுகிறது. 2500-1600 கி.மீ பரப்பளவும், 30 முதல் 35 அடிவரை ஆழம் உள்ளது. முதலைகள் இந்த நீர்நிலையில்உள்ளது . இதில் உத்தேசமாக 5000 மிதக்கும் வீடுகள் உள்ளன. இது ஒரு கிராமம் போன்றே இயங்குகிறது. அதிகமாக வரும் நீர் மெகாங்(Mehong) (மெகாங் ஆறு பற்றி வியட்நாம், நாட்டின் சுற்றுலாவில் விரிவான தகவல்கள் வெளியிடுவேன்)என்ற ஆற்றில் கலக்கிறது. நீர் குறையும் நாட்களில் இவர்கள் நிலப்பகுதியில் வந்து வசிக்கின்றனர். மருத்துவமனை, பள்ளிக்கூடம் அனைத்தும், இந்த மிதக்கும் கிராமத்தில் உள்ளது.
அங்கோர்வாட் (2.3.2025 –நாள் -3) ( ANKORWAT TEMPLE NO1)
உலக அளவிலான சுற்றுலாதலம். ஆண்டிற்கு குறைந்தது 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். 12ஆம் நூற்றாண்டில், இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட ஒரு பெருமாள் கோவில். இந்த மன்னனின் காலத்திற்கு பிறகு புத்த மடாலயமாக மாறியது. கம்போடியா நாட்டின் தேசிய கொடியில் இந்த அங்கோர்வாட் ஒரு அங்கமாக உள்ளது. 5கி.மீ. க்கு மேல் அகழியால் சூழப்பட்டது இந்த அங்கோர்வாட்.
மேரு மலையை குறிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 1992 முதல் உலக பாரம்பரிய சின்னமாக போற்றப்படுகிறது. இந்திய ரூபாய்க்கு ஆடை விற்றதால் நான் இங்கு ஒரு ஆடைவாங்கிகொண்டேன்.
பயணஅனுபவம்
வெய்யலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. நம்நாட்டில் உள்ள அஜந்தா எல்லோரா குகை போன்று இங்கும் 31 கோவில்கள் உள்ளன. அனைத்து இடங்களையும் சுற்றிபார்க குறைந்தது 5 முதல் ஏழு நாட்கள் ஆகும். ஒருநாள் சுற்றுலாவிற்க்கு 37 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் ஒருவார கட்டணம் சற்று குறைவுதான். முக்கியமான 4 கோவில்கள் மட்டுமே நாங்கள்சென்றோம். நம் புகைப்படத்துடன் கூடிய நுழைவுகட்டண சீட்டு கொடுக்கின்றனர். கம்போடியா மக்களில் பெரும்பாண்மையினர். கலாச்சார உடையுடன்தான் இக்கோவிலுக்கு வழிபட வருகின்றனர்.
கலாச்சார உடையணிந்த தம்பதிகளுடன் நாங்கள்.
புத்த மதத்தில் தலைதொப்பியுடன் கற்பகிரகம் நுழைவதை மரியாதை குறைவாக நினைக்கின்றனர். தொப்பியை கழட்டிய பிறகே அனுமதிக்கின்றனர்.
கோவில் சிற்பங்கள் மற்றும் கோவில் தூய்மையில் உள்ள சட்ட கட்டுபாடுகளை கடைபிடிப்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.
Ankor wat TemPle (NO2)
மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கும் இந்த கோவில் நம்நாட்டுடனான கூட்டு முயற்சியில் புனரமைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். இங்கு இந்திய ரூபாயில் ஆடைவிற்றதான்காரணமாக 500ரூ கொடுத்து ஆடைவாங்கினேன்.
Ankor Wat Temple (no.3)
மேலே இருக்கும் இரண்டு கானொளிகளும், அங்கோர்வாட் கோவில் தொகுப்பில், ஒரு கோவில் வாயிலில் இரண்டு பக்கமும் உள்ள சிலைகள். இவை பாற்கடலை, வாசுகி பாம்பை மத்தாக கொண்டு கடையும் காட்சி, சிலைகளை நன்கு உற்று கவனித்தால், ஒரு பக்கம் தேவர்கள் மற்றொரு பக்கம் அசுரர்கள் உள்ளது தெரியும். இந்த அங்கோர்வாட் பெருமாள் கோவில் தான் என்பதற்க்கு பல ஆதாரங்கள் உள்ளன. பிரதான சிலைகள் மட்மே புத்தராக மாற்றப்பட்டுள்ளது. சுவரில் உள்ள ராமாயண மற்றும் மகாபாரத காட்சிகள், தூண்கள் பெருமாள் கோவில் என்ற உண்மையை பறைசாற்றுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலைவிட பழமையானது என்பர்.
![]() |
Glob trotter on his bike. |
கம்போடியா ஏர்லைன்ஸ்மார்ச் 2 ஆம் தேதி இரவு நாங்கள் கம்போடியாவில் இருந்து வியட்நாம் என்ற நாட்டிற்கு பயணித்தோம்.
கம்போடியா ஏர்லைன்ஸ்
விமான இருக்கைகள் மற்றும் கால்வைக்கும் பகுதிகள் அனைத்தும் நன்றாக(தாராளமாக) இருந்தது.
No comments:
Post a Comment