தாய்லாந்து (பயணம் நாட்கள்-24,25,26,27.2.2025)

 தாய்லாந்து (பயணம் நாட்கள்-24,25,26,27.2.2025)



முன்னுரை

23.2.25 அன்று இரவு சென்னையில் இருந்து  BANGKOK கிற்கு விஜயலெட்சுமி  Travels உடன் பயணித்தோம். 24 ஆம் தேதி காலை எங்களின் பயணத்தை தொடர்ந்தோம். நம் நாட்டிற்கும் தாய்லாந்து நாட்டிற்கும் ஒன்றரை மணிநேரம் வித்யாசம், நெட்வொர்க் ஆரம்பித்த உடன் நம் கைபேசியில் உள்ள நேரமும் மாறிவிடுகிறது. அருகிலேயே ஹோம் என்று நம்நாட்டின் நேரமும் காட்டுகிறது.  இவர்களின் பணம் “பாட்” என்று அழைக்கப்படுகிறது. ஒரு பாட் 2ரூபாய் 58 பைசா. அனைத்து இடங்களிலும் பாட் மட்டுமே பெறுகின்றனர்.  தட்பவெட்பநிலை நம்நாடு போன்று இருந்தது. 

விசா

இந்த விசா என்பது முன்று வகையில் செயல் படுகிறது. 1. நட்புநாடு, மற்றும் சுற்றுலாதுறை வளர்சியை அடிப்படையாக கொண்டு விசா கட்டணம் இல்லாமல் செயல்படுவது.  2. நாட்டிற்கு சென்றவுடன் விமானநிலையத்திலேயே விசா கட்டணம் செலுத்தும் முறை. (Arrival on Visa) 3. வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பே அந்தநாட்டின் அனுமதி என்று விசா கட்டணம் செலுத்தி விசா வாங்கி கொள்வது என்று மூன்று முறைகள் இந்த விசாவில் கடைபிடிக்கப்படுகிறது.  தாய்லாந்து நாட்டில் விசா கட்டணம் இல்லாமல் பயணிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. உணவு, நமது நாட்டு மக்கள் இங்கேயும் அதிகமாக உணவுகூடம் நடத்துகின்றனர். நம்நாட்டு உணவே குறிப்பாக தமிழ்நாட்டு உணவே நன்றாக கிடைக்கிறது.

பேங்காக்கில் இருந்து நாங்கள் பட்டாயா என்ற நகரத்திற்கு உடனே பயணித்தோம்.   

பட்டாயா பிக்புத்தா (24.2.2025) நாள் -1.











Our Thailand Tourist Guide.
























1977 ஆம் ஆண்டு இந்த கோவில் நிறுவப்பட்டது. இந்த புத்தர் 300 அடி உயரம் கொண்டவர். இந்த சிலை தங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாய நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் சிறந்த வழிபாட்டு தலமாக உள்ளது. 

பட்டாயா வியு பாயின்ட் 



சற்று மேடான மலைபகுதிக்கு சென்று இந்த நகரத்தின் அழகை நன்கு ரசிக்க முடிகிறது.









Thailand F.M.Station


ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இந்த 82 வயது பெண்மணி தனியாக பல நாடுகளுக்கும் பயணம் செய்கிறார். அவருடன் நான்பேசிபழகி ஒரு சுயபுகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அல்காசார் நடன நிகழ்ச்சி








இந்த நடன நிகழ்சி அனைவரையும் மிகவும் கவரும் வண்ணம் ஒலி ஒளி அமைப்பு, ஆடை நேர்த்தி, அரங்க அமைப்பு, நடனத்திற்கு ஏற்றார் போல் அடிக்கடி அரங்க அமைப்பை மாற்றுவது என்று மிக கலைநயத்துடன் உள்ள நிகழ்ச்சி. முத்தாய்பாக இங்கு நடனம் ஆடுபவர்கள் அனைவரும் திருநங்கைகள்.





Pattaya evening Market

கோரல்  Island (25.2.2025) நாள்-2.




























இந்த தீவில் பலவிதமான நீர் கேளிக்கைள் இருந்தன. இந்த விளையாட்டுகளில்; நாங்கள் பங்கேற்றும், தீவை சுற்றி பார்த்தும் மகிழ்ந்தோம்.

நானும் என்கணவரும் செய்த  Parasailing





நான் பங்கு பெற்ற  Snorkelling








மிக தைரியம் உள்ளவர்களே இந்த விளையாட்டில் ஈடு படலாம். நான் ஆர்வ கோளாராக செயல்பட்டு விட்டதாக எனக்கு தோன்றியது. நான் பதிவிட்ட புகைபடத்தில் என்னுடைய பயம் முகத்தில் நன்கு பிரதிபலிக்கும்.

இந்த இடமே உலகம்சுற்றும்வாலிபன் படத்தில் உள்ள பான்சாயி பாடலில் கடைசி பகுதி இடம்பெரும் இடம்.








பயணஅனுபவம்.

சிறிய கப்பலில் பயணம் செய்வது குறிப்பாக ஏறி இறங்குவது சற்று கடினமாகதான் இருந்தது. தீவில் இறங்கும் போது சற்று சமாளிக்கலாம். மீண்டும் சிறிய கப்பலில் ஏறுவது மிக கடினமாக இருந்தது. சிறிய கப்பல் கரை வரை வரமுயாத காரணத்தால். கடலில் 20 அடி சென்று தான் ஏறவேண்டும். அந்த சமயம் அலை 5 அடி உயரத்தில் இருப்பதால் மிக கடினமாக இருந்தது கப்பலில் ஏறுவது. என் கணவர் உட்பட 5 பயணிகளின் கைபேசி தண்ணீரில் நனைந்து செயல்பாட்டை இழந்தது. என் கணவரின் கைபேசி சென்னைக்கு வந்து 1000ரூ செலவழித்த பின்பே செயல்பாட்டிற்கு வந்தது. சக பெண்பயணி ஒருவரின் பாஸ்போட் நனைந்து கம்போடியா நாட்டிற்;கு பயணிக்கும் போது சற்று கடினத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

தாய் மசாஜ்

Masseuse (Massage Therapist)

ம் மனதில் தவறாக புரிந்து கொண்ட பல சொற்களில் “மசாஜ்” என்பதும் ஒன்று. இந்த நாட்டில் செய்யப்படும், மசாஜ் ஒரு சிறந்த மருத்துவ சிகிச்சை.  இந்த சிகிச்சை ஒரே நாளில் எந்த பலனையும் கொடுக்காது, இருந்தாலும் எங்களில் பலரும், நானும் என் கணவரும் இந்த சிகிச்சை செய்து கொண்டோம்.

டைகர்பார்க் மற்றும் குருஸ்  (CRUISE) இரவுச்சாப்பாடு  (26.2.2025) நாள்-3. 

டைகர்பார்க்













புலிகள் காட்சி படுத்தும் இடம். இங்கு உள்ள சிறப்பு என்ன வென்றால் சாராதணமாக மற்ற இடங்கள்போல் அல்லாமல் நாம் புலிக்கு அருகில் சென்று , அதனுடன் புகைபடம் எடுத்துக்கொள்ளலாம். சிறிய புலிகளுக்கு நம்கையாலேயே உணவு கொடுக்கலாம். நுழைவுக்கட்டம், மற்றும், நான் குறிபிட்ட ஒவ்வொரு சிறப்பு அம்சங்களுக்கும்  தனி தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.




சிவராத்திரி சிறப்பு வழிபாடு.













அன்றைய தினம் சிவராத்திரி என்பதால், அனைவரின் மனதிலும் சிவன் விஸ்வரூபம் எடுத்திருந்தார். பட்டாயாவில் இருந்து சற்று ஊரை தாண்டி ஒரு கிராமத்தில் இருந்த சிவன்கோவிலுக்கு சென்று சிவவழிபாடு செய்தது அனைத்து பயணியற்களுக்கும் மட்டற்ற மகிழச்சி அளித்தது.

 குரூஸ் (CRUISE)இரவுஉணவு.
































பேங்காக்கில் ஒரு மாலின் பின்புறம் ஒரு ஏரி போன்ற ஒரு நீர் நிலை உள்ளது. இதில் குரூஸ்ல் இரவு உணவு சாப்பிடுவது, தாய்லாந்து நாட்டின் சிறந்த சுற்றுலா அங்கமாக உள்ளது.

Bangkok  நகரம் சுற்றுலா. (27.2.2025) நாள்-4 

















மிகவளர்ந்த நகரங்களில் ஒன்று. இரண்டு புத்தர் கோவில்களுக்கு மட்டும் அழைத்து சென்றது, எனக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. (அவர்கள் அட்டவனையில் இருந்ததும் இவ்வளவுதான்)

தங்கபுத்தர்.














13 ஆம் நூற்றாண்டு காலத்து புத்தர் என்ற நம்பப்படுகிறது. தங்கத்தில் செய்யபட்ட இந்த சிலையின் பாதுகாப்பிற்காக பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். “வாட்ட்ரைமிட”; என்ற இடத்தில் இருந்து பாங்காக்கிற்கு இந்த சிலை கொண்டடுவரப்பட்டு, பிரதிஷ்டை செய்யும் சமயத்தில் கீழே விழுந்தது, அந்த சமயமே இந்த சிலையின் உண்மையான மதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1935 ஆம் ஆண்டு அதாவது பல நூற்றாண்டுகள் இதன் மதிப்பு அறியபடாமலேயே வழிபட்டு வந்துள்ளனர், தாய்லாந்து மக்கள்.






எங்களது தாய்லாந்து நாட்டு கைடு ஒவ்வொருமுறையும் பயணிகளை அவர்களது மொழியில் கணக்கிடுவது கேட்பதற்கு குயிலின் கீதமாக ஒலித்தது.

மார்புல் புத்தா

இத்தாலியில் இருந்து மார்புல் கொண்டுவரப்பட்டு செய்யப்பட்ட சிலை.












இந்ரா மார்கெட்




இங்கு பயணியர் குறிப்பாக பெண்கள் அதிகமாக சென்றனர். நானும் சென்று எனக்கு ஆடைவாங்கிக்கொண்டேன். அன்று மாலை நாங்கள் பயணித்து இரவு கம்போடியா சென்றடைந்தோம். 















Boarded flight from Thailand to Combodia


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...