ரத்னகிரி (தரிசனம்-16.2.2025)
அமைவிடம்
தமிழ்நாடு, ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்மின்னல் என்ற இடத்தில் உள்ளது.
புராண வரலாறு
14 ஆம் நூற்றாண்டு கோவில். திருப்புகழ் பாடல் பெற்ற தலம். தவம் இருந்து அனைத்து சக்திகளையும் பெற்ற ஒரு அசுரன், தேவர்களை துன்புறுத்லானான். அவனிடம் இருந்து தப்பிக்க தேவேந்திரன் பல இடங்களுக்கு சென்றான். ஒருசமயம் இந்த ரத்தினகிரிமலையை அடைந்தான். அசுரன் துரத்திவருவதை பார்த்து முருக பெருமான் அவரின் வாகனமான மயிலில் ஏற்றி சென்று தேவேந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்தார். அன்றுமுதல் துன்பத்தில்லிருந்து முருகபெருமான் காக்கும் இடமாக இந்த தலம் சிறப்புற்று விளங்குகிறது.
புதிய வரலாறு
“பாலமுருகனடிமைசுவாமி” என்பவரால் 1980 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்து. மிக சிறப்பான கோவில்குளம் ஒன்று அறுங்கோனவடிவில் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு
பாலமுருகனடிமைசுவாமி
கீழ்மின்னல் என்ற ஊரில், கந்தசாமி சிங்காரம்மாள் என்ற தம்பதிக்கு 1941 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் இளமைகால பெயர் தட்சிணாமூர்த்தி. இவர் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இருந்து, தழிழகஅரசு மின்வாரியத்தில் பணிபுரிந்துவந்தார். 1968 ல் ஞானம் பெற்று, மௌனத்தை கடைபிடித்து, தன்னை பாலமுருகனடிமைசுவாமி என்று அறிவித்துக்கொண்டார். 1968 ஆம் ஆண்டு முதல் இக்கோவில் வளரச்;சி மட்டுமே வாழ்கையாக வாழந்துவருவதாக தெரிகிறது.
குறிப்பு
இவரை பற்றி கூடுதலாக அறிய விரும்புவர்கள், ரவிசங்கர் பாபா வின் YouTube பாருங்கள். அவரைபற்றிய தகவல்கள் மற்றும் யோகிராம் (விசிறிசாமியார் திருவண்ணாமலை) இவர்களை பற்றியும் அறியலாம். விக்கிபீடியாவிலும் அதிக தகவல்கள் உள்ளது.
பாலமுருகனடிமைசுவாமிகள்
No comments:
Post a Comment