வியட்நாம் (பயணநாட்கள் 3,4,5.3.2025)

 வியட்நாம் (பயணநாட்கள் 3,4,5.3.2025)

முன்னுரை

2 ஆம் தேதி இரவு நாங்கள் கம்கோடியவில் இருந்து வியட்நாம் சென்றடைந்தோம். வியட்நாமின் தலைநகரம் அனாய் (Hani)என்றாலும் நாங்கள் ஹோக்கி மன்சிட்டிக்கு (Ho Chi MInh City) சென்றோம். அனாய் மற்றும் ஹோக்கிமன் சிட்டி இரண்டுமே சிறந்த சுற்றுலாதலங்கள் என்றாலும், எங்களின் மூன்று நாள் பயனத்தில் ஒருநகரம் தான் பார்கமுடியும். இரண்டு நகரமும் 1500 கி.மீ. க்கு மேல் தொலைவுஉள்ளது. நம்ட்டிற்கும் வியட்நாமிற்கும் ஒன்றரைமணி நேரம் வித்யாசம். இந்நாட்டின் ரூபாயின் பெயர் “டாங்”. இங்கு டாங், டாலர், சில இடங்களில் ரூபாயும் வாங்கி கொள்கின்றனர். தழிழ்நாட்டு உணவே கிடைக்கின்றது. தழிழ்நாட்டு வானிலையே நிலவுகிறது. மிகவும் தேசபற்றுடன் மக்கள் இருக்கின்றனர். இடதுபறமாகவே வாகனங்களை இயக்குகின்றனர்.









விசா.

 இந்த விசா என்பது மூன்று வகையில் செயல்படுகிறது. 1. நட்புநாடு, மற்றும் சுற்றுலாதுறை வளர்சியை அடிப்படையாக கொண்டு விசா கட்டணம் இல்லாமல் செயல்படுவது.  2. நாட்டிற்கு சென்றவுடன் விமானநிலையத்திலேயே விசா கட்டணம் (Arrival on visa) செலுத்தும் முறை. 3. வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பே அந்தநாட்டின் அனுமதி என்று விசா கட்டணம் செலுத்தி விசா வாங்கி கொள்வது, என்று மூன்று முறைகள் இந்த விசாவில் கடைபிடிக்கப்பபடுகிறது. வியட்நாமில் இந்த மூன்றாவது முறையே கடைபிடிக்கப்படுகிறது.

சு சி தன்னல் (3.3.2025 – நாள்1) ( Chu Chi Tunnel)








































இந்த இடம் வியட்னநாமின், போர்காலத்தில் அமெரிக்கர்களால் தாக்கப்பட்ட இடம்.  வியட்நாம் மக்கள் எப்படி அமெரிக்கர்களை எதிர்கொண்டனர் என்பதை நாம் இங்கு காணலாம். உலக வரலாறில் பணபலம் மற்றும் படை பலம் எதுவும் இல்லாமல் மிகபெரிய வல்லரசான அமெரிக்காவை எப்படி ஓட ஓட விரட்டினர், என்ன யுக்திகளை பயனபடுத்தினர் என்பதை பறைசாற்றுதம் இடமே இந்த சு சி தன்னல். அவர்கள் ஏற்படுத்திய பாதள அறைகளையும், அவர்கள் பயன் படுத்திய யுக்திமுறைகளையும், காட்சிப்படுத்தி, ஒரு சிறந்த சுற்றுலாதலமாக இந்த இடத்தை மாற்றிவிட்டனர்.




















Vietnam Currency

Currency with  Ho Chi Minh  Picture

இந்த நகரம் சிறந்த வாணிபதலமாக விளங்குகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. மூன்று நாட்களும் போக்குவரத்து சற்று கடினமாவே இருந்தது. இரண்டுசக்கர வாகனங்கள் மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர். 

ஹோச்சிமன் சிட்டி டூர் (HO CHI MINH CITY)

1.அஞ்சலக கட்டிடம்.


















நகரத்தின் பகுதியில் உள்ளது இந்த கட்டிடம். இந்த கட்டிடம் பிரான்ஸ்நாட்டில் ஈபில் டவர் ( (Eiffel Tour) கட்டியவரே இந்த கட்டிடத்தையும் கட்டியுள்ளார் என்று இந்நாட்டு வழிகாட்டி எங்களிம் கூறினார். தற்சமயம் மால் போன்ற செயல்படுகிறது. பலரும் இன்றளவும் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அஞ்சலகம் மூலமாக வாழ்த்து அட்டைகள் அனுப்புகின்றனர்.

2. பிரான்ஸ் நகர அமைப்பு போன்று சில இடங்கள் உள்ளன

City Tour






The Great man Ho Chi Minh Statue















This Square looks like a France.















3. மாரியம்மன் கோவில்










500ரூ என்று தமிழில் சொல்லும் வியாபாரி.





நான் 100 கொடுத்து வாங்கிய தொப்பி. டாலர் என்றால், ஒருடாலர் 86ரூ மற்றும் 50 காசு. இவற்றின் மதிப்பு மாறிகொண்டே இருக்கும் இருந்தாலும் 87ரூ என்றாலும் நம்நாட்டின் கணக்குபடி 13ரூ கூட இருந்தாலும் நம் ரூபாய் கொடுத்து வாங்குவது எனக்கு பெருமையாக இருந்தது. என்கையில் டாலரும் இருந்தது.




4. மூங்கில் ஆடைகள் தயாரிப்பு மற்றும் வற்பனை நிலையம் சென்றோம்.









2000ரூக்கு  ஒரு ஆடை வாங்கினேன். ரூபாய் பெற்றுகொண்டதற்காகவே. அமெரிக்க டாலருக்கு இணையாக என்இந்திய ரூ கொடுப்பதில் மகிழ்ச்சி மற்றும் பெருமை.

மேகாங்க் ஆறு  (Mehong river)(4.3.2025 – நாள் 2)

1. போகும் வழியில் உள்ள புத்த ஆலயம் மற்றும் புத்தமத கல்லூரி































ஆற்றில் பயணம் செய்து பின் சில தீவுகளுக்கு சென்றோம்.

மேகாங்க் ஆறு அறிவோம்.




















இந்த ஆறு திபெத்தில் உற்பத்தியாகி, மியன்மார் (பழையபெயர்-பர்மா), லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, நாடுகள் வழியாக வந்து வியட்நாமில் கடலில் கலக்கிறது. கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாய்கிறது. உலகத்திலேயே 12வது நீளமான நதி, மற்றும் ஆசியாவின்  மூன்றாவது நீளமானநதி.  சுமார் 2700 மைல்கள்.

சில சிறிய தீவுகள்















































தீவில் நான் வந்த படகை ஓட்டி வந்த 75 வயது பெண்மணி.


war Memorials நினைவுச் சின்னங்கள் (5.3.2025 –நாள் 3)























மூன்றாம் நாள் சுற்றுலா எனக்கு மிக சிறப்பானதாக தெரியவில்லை.

புகைப்படங்கள்

பாராளுமன்ற அரண்மனை











இந்த அரன்மனை என்னை ஒன்றும் கவரவில்லை. 

நம் நாட்டு மைசூர், ஜெய்பூர், உதய்பூர். அரண்மனைகள் நினைவில் வந்ததால்.

வியட்நாம் கலைபொருட்கள் புகைப்படங்கள்.














வியட்நாம் ஹோசி மன் சிட்டி மார்கெட்.















we stand with Our Vietnam Guide



















நான்காம் தேதி இரவு ஹோசிமன் சிட்டியில் இருந்து டெல்லிக்கு பயணித்தோம். பின்னர் டெல்லியில் இருந்து சுபமாக சென்னை வந்தடைந்தோம்.



சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...