மேலக்கடம்பூர்

 மேலக்கடம்பூர் (தரிசனநாள்-24.5.2024).


அமைவிடம்

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே அமைந்துள்ளது.  புராதணபெயர் திருகடம்பூர் என்பதாகும்.

வரலாறு

திருபார்கடலை கடைந்து அமுதம் எடுத்த தேவர்கள் விநாயகரை துதிக்க மறந்தனர். விநாயகர் அமிர்தத்தை  எடுத்துகொண்டு கடம்பவனம் வழியாக செல்கிறார். அமிர்தம் சற்று அந்த இடத்தில் விழுந்துவிடுகிறது. இந்த அமிர்தமே சுயம்புலிங்கமாகிறது. இதன் காரணமாகவே இத்தல சிவன் அமிர்தகடேஷ்வரர் என்ற அழைக்கப்படுகிறார்.





ஜோதிமின்னம்மை

காலையில் சரஸ்வதியாகவும், மதியம் வெள்ளை யானையுடன் கூடிய லெஷ்மியாகவும், மாலை சூலாயிதத்துடன் கூடிய துர்கையாகவும் அருள்பாலிப்பதால் ஜோதிமின்னம்மை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

ஒளி தரிசனம்.

வருடத்தில் ஐப்பசி மாதம் மூன்று நாட்கள், சூரிய  ஒளி லிங்கத்தின் மீது விழுந்து நமக்கு சூரிய ஒளி தரிசனத்தையும், அன்னாபிஷேகம் அன்று சந்திரன் ஒளி பட்டு சந்திர ஒளி தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. 






கோவில் சிறப்பு.

குதிரை பூட்டிய ரதம் போன்று கோவில் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலாம் ராஜேந்திரன் வங்கப்போரில் வெற்றி சின்னமாக கொண்டுவந்த பஞ்சலோக ரிஷப தாண்டவமூர்த்தி சிலை நம் தரிசனத்திற்காகவுள்ளது.


நடராஜர் சிவகாம சுந்தரி கல்லிலான மூர்திகளாகவே தரிசனம் தருகின்றனர்.

சோழர் காலத்தில் ஒரு பெரிய நகரமாக இந்த கடம்பூர் விளங்கியதால் வரலாற்று சிறப்பு மிக்க ஊராக திகழ்ந்தது.

கழுகுவாகனத்தில் சனிபகவான்.


தசரதமகாராஜன் சனிபகவானுக்கு காகத்தை வாகனமாக கொடுத்தரராம். அதற்;கு முன்பு சனிபகவானுக்கு கழுகே வாகனமாக இருந்தாம். இதை அடிப்படையாக கொண்டே  ராமாயணகாலத்திற்;கு முற்பட்ட கோவில் என்று அறியப்படுகிறது.

தேவார பாடல் பெற்ற தலமாகவும், திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...