இல்லம் என்னும் நல்லம்.

 இல்லம் என்னும் நல்லம். (நாள்-24.5.2024).

 என்தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். எனக்கு மகிழ்வை தரும் இடமாக இருந்தது. இதன் காரணமாகவே "இல்லம் என்னும் நல்லம்" என்று தலைப்பிட்டேன். நல்லம்-நன்று (Good) என்று எனக்கு செல்ல தோன்றியது. 





எனது குழந்தைபருவ நினைவை கொண்டுவந்ததும் நன்று சொல்ல காரணமாக இருந்திருக்கலாம். இளையதலைமுறையினருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, காலத்தை காட்டும் கண்ணாடியாக இருந்ததும், காரணமாக இருக்கலாம். 







சதுரஅடியில் வீட்டை கணக்கிட்டு, அதுவும் பலஅடுக்குகளுக்குள், கூறை, நிலம், சுவர் எதுவுமே சொந்தமில்லாமல் சொந்த வீடு என்று சொல்லிகொண்டிருக்கும் மாயமான  இன்றைய சூழ்நிலைக்கிடையில், கடந்த காலத்தை நினைத்து ஆச்சரியத்தை உண்டு செய்து, மகிழ்வித்ததுகூட, நன்றாக இருந்திருக்கலாம்.






எந்த சூழ்நிலையிலும் என் கிராமம் என்வீடு, என் பழமை நினைவை விட மாட்டேன் என்ற என் தோழியின், உறுதி மற்றும், துணிவு மிக மிக நன்று. வீட்டின் புகைப்படங்கள், வீதியின் அழகு, காலைநேரத்தில் வீட்டின் கூறையை அழகு செய்யும்,  அழகு மயில். இவையணைத்தும், ஆசிரியர் பாணியில் “மிக்கநன்று” என்று சொல்லச்செய்து,  என் தோழிக்கும் உற்சாகத்தை ஊட்ட செய்தது  என்றுடைய நன்று……




  







No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...