கீழப்பழுவூர் - (தரிசனநாள் 26.5.2024)
அரியலூர், திருவையாறு சாலையில் அமைந்துள்ளது. அரியலூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து வடக்கே 20 கி;மீ தொலைவிலும், அமைந்துள்ள, தேவாரபாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.
ஸ்தலபுராணம்.
கைலாயத்தில் பார்வதி, விளையாட்டாக சிவன் கண்களை பொத்தினார். சூரியன் மற்றும் சந்திரனாக திகழ்ந்த இரண்டு கண்களும் பொத்தியமையால், உலகமே இருண்டு ஒளியிழந்தது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பம் காரணமாக பூலோகத்தில் சென்று தவம் செய்து பின் என்னை வந்தடைவாயாக என்று கட்டளையிட்டார். பூலோகம் வந்த அம்பிகை பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து, பின், யோகவனத்திற்கு வந்து புற்றுமண்னால் சிவலிங்கம் செய்து வழிபட்டார். இந்த யோகவனமே கீழப்பழுவூர்.
ஆலந்துறையார், அருந்தவநாயகி.
சுயம்புமூர்தியான இறைவன், வடமூலநாதர் என்றும், ஆலந்துறையார் என்றும் பக்தர்களால் வணங்கப்படுகிறார். பழு என்றால் ஆலமரம். ஆலமரம் தலவிருட்சம,; மிக பிரம்மாண்டமாக உள்ளது. இதன் காரணமாக, ஆலந்துறையார் என்ற போற்றப்படுகிறார். சிவனை நோக்கி தவம் செய்தமையால் அருந்தவநாயகி என்று பக்தர்களால் போற்றப்படுகிறார்.
பிறதகவல்கள்.
ஒருவாயிலுடன், மூன்றுநிலை ராஜகோபுரத்தை கொண்டது. புற்று லிங்கமாதலால், அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. பரசுராமர் பூஜ்pத்து சாமவிமோசனம் பெற்ற தலம். பங்குனி மாதம் 18 ஆம் தேதியன்று சூரியகதிர் இறைன்மீது விழுகிறது.
திருப்புகழ்பாட பெற்ற தலம்.
வள்ளலார் சுவாமிகள் நற்கருணைவாய்க்கும் பழுவூர் மரகதமே என்று போற்றுகிறார். ஞானசம்மந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம்.
No comments:
Post a Comment