வரகூர், வெங்கடேசபெருமாள்
ஸ்ரீகுல தேவதாப்யோ நம:
அமைவிடம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில், திருப்பூந்துருத்தில் இருந்து 7கி.மீ. தொலைவில் வரகூர் பாதை என்ற இடத்தில் , “வரகூர் வெங்கடேசபெருமாள்” என்று ஒரு வளைவு யிருக்கும். அதனுள் ஒரு கி.மீ.பயணித்து கோவிலை சென்றடையலாம். திருச்சி கல்லணை வழியாகவும் இத்தலத்தையடையலாம்.
வரகூர் பெயர்காரணம்.
பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்தவூர், நாராயணதீர்தருக்கு அருளளித்து வரகூர் என்றானது. பெருமாள் வராகமாக (பன்றியாக) வந்து இவருக்கு வழிகாட்டி இத்தலத்தை வழிபட செய்து அருள்பாலித்தார். வராகம் அருளிய ஊர் வரகூர் என்றானது.
நாராயணதீர்தர்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர், இசை மற்றும் நாட்டியம் இரண்டையும் நன்கு கற்று கைதேர்ந்தவராக விளங்கினார். இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டு அனைவருக்கும் “ஸ்ரீமத்பாகவதம்” போதித்துவந்தார். தீராதவயிற்றுவலிகாரணமாக தன்துயர் கூற திருப்பதி ஏழுலையானை தரிசிக்க வந்தவருக்கு, பூபதிராஜபுரம் சென்று வெங்கடேசபெருமாளை தரிசனம் செய் உன்னுடைய வயிற்றுவலி தீரும் என்று அசரீரி கூறியது. நடுக்காவேரி வரை வந்த அவருக்கு வழிதெரியாமல் உடல் சோர்வுடன் இறைவனை வழிபட்ட நிலையில், நாளைகாலை உன்முன் ஒரு பன்றி(வராகம்) தோன்றும் அது உனக்கு பூபதிராஜபுரத்திற்கு செல்ல உதவும் என்று மீண்டும் அசரீரி கூறியது. பன்றியின் பின்னே பயணித நாரயணதீர்தர், கோவிலைகண்டு, பெருமாள் சன்னதிக்குள் நுழைந்த உடனே அவரின் நோய் தீர்ந்தது.
நாரணதீர்த்த தரங்கிணி
இந்த வரகூரிலேயே தங்கி நாராயணதீர்த்தர் “தரங்கிணி” என்ற பாடலை வடித்தார். மிகவும் பிரபலமான இந்த பாடல் தொகுப்பை இக்கோவிலில் மட்டுமல்லாமல், பெரிய பாடகர்கள் இசைகச்சேரியிலும் தரங்கிணி பாடலை பாடி வருகின்றனர்.
உறியடிஉற்சவம்.
கிருஷ்ணஜெயந்தி சமயம் மிக சிறப்பாக இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. பல கிருஷ்ணர் கோவிலில் இந்த உறியடி கொண்டாடினாலும், இக் கோவில் வழுக்குமரம் ஏறுதல் மிக விமர்சையாக உள்ளது. 30அடி உயரமும்,1 அடி விட்டமும் உள்ள ஒரு உருளை வடிலான மிக வழுவழுப்பான கம்பம், ஒரு மாதத்திற்க்கு முன்பாக தயாரார் செய்வர். (புளியங்கொட்டை நன்கு அரைத்து இந்த கம்பத்தில் தடவுவர்) எளிதில் ஏறமுடியாமல் இருக்க) இதன் உச்சியில் முருக்கு, சீடை கட்டி வைப்பர். நல்ல உயரத்தில் உள்ள வழுவழுப்பான மரம் என்பதால் மிக கடினமாக இருக்கும். வழுக்க மரத்தில் ஏறும் சமயம் நீரை வேகமாக ஏறுபவர்கள் மேல் ஊற்றுவர். இரவு 10 மணிக்கு தொடங்கினால், விடியற்காலை 6மணிக்கு ஏறி முருக்கை எடுப்பர். பின் இந்த முருக்கு பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
வெண்ணைதாழியலங்காரம்.
ஊறியடி உற்சவம் அன்று காலை பெருமாள் வெண்ணைதாழி அலங்காரத்தில் வீதியுலா வருவார். கோவிலில் இருந்து கடுங்கலாற்றுகரை வரை சென்று, அங்குள்ள மண்டபத்தில் தங்கி மீண்டும் கோவிலுக்கு வருவார் பெருமாள். வெண்ணை பானையை இடுப்பில் வைத்து வரும் அழகை காணகண்கோடி வேண்டும் என்பர். ஆனால் புண்ணியம் செய்தோருக்கு மட்டுமே தரிசனம் கிடைக்கிறது. உற்சவம் அன்று கடுங்கலாற்று கரையில் இருந்து, கோவில் வரை அங்கபிரசட்சனம் செய்கின்றனர் பக்தர்கள்.
குலதெய்வ சிறப்பு.
இக்கோவிலை குலதெய்வமாக கொண்டவர்கள் பல இடங்களிலும் பரவி உள்ளனர். உறியடிக்கு கட்டாயம் தரிசனம் செய்ய குடும்பத்திற்கு ஒருவராவது வந்துவிடுகின்றனர். குலதெய்வமாக கொண்டவர்களில் ஒருவர் கூட வைணவர்கள் கிடையாது. உறியடி உற்சவம் அன்று வைணவர்கள் போல் அனைவரும் நெற்றியில் திருமன் தரிகின்றனர்.
முர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது என்பர் அதுபோன்று இக்கோவில் மிக சிறியதாக இருந்தாலும் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்தபெருமாளே எங்களது குலதெய்வமாகும் பாக்கியம் பெற்றேன். என் அத்தையின் ஊர் மற்றும் குலதெய்வமும் இக்கோவிலாகும். அதன் காரணமாக சிறுவயது முதலே தரிசனம் செய்ய துவங்கி விட்டேன். எங்கள் குலதெய்வமானதால் என்னுடைய தரிசனம் தொடந்துகொண்டே இருக்கும்.
வரகூர் உறியடி உத்ஸவத்தில் (27.8.2024) தீவட்டிகளின் ஒளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேசபெருமாள் ஒய்யாரமாக ஆடி அசைந்து வரும் காட்சி. உறியடியோ கோவிந்தோ…வேங்கட்ரமணா கோவிந்தா.. கோவிந்தா..
No comments:
Post a Comment