ஓமாம்புலியூர். (தரிசனநாள் 24.5.2024)
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. திருஞானசம்மந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலமாகும்.
பிரணவவியாக்ரபுரீஸ்வரர்;
உலகநாயகிக்கு பிரணவமந்திரத்தை உபதேசம் செய்ய தலம். வியாக்ரபாதர் என்ற புலிகால் சித்தர் பூஜித்த தலமாதலால் இறைவன் இந்த பெயரை பெற்றார்.
வியாக்ரபாதர்
இவர் தில்லை நடராஜரின் திருநடனம் கானும் முன்பு பெரும்பற்றப்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர், தப்பாலம்புலியூர், ஆதிப்புலியூர், சிறுபுலியூர், கானாட்டம்புலியூர் என்ற ஷேத்திரங்களை தரிசனம் செய்தார். இதன் காரணமாகவே இந்த திருதலங்கள் நவபுலியூர் தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.
துயர்தீர்தநாதர்
சுதானந்தன் என்ற அரசன் தொழுநோய் ஏற்பட்டு மிகவும் துன்பபட்டான்.
இக்கோவில் குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றமையால், இறைவன் ஈசன் துயர்ததீர்த்த நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தட்சிணாமூர்த்தி
புஷ்பலதாம்பிகை என்ற பூங்கொடிநாயகிக்கு, பிரணவமந்திரத்தை உபதேசம் செய்தமையால், இறைவனுக்கும் , அம்பிகைக்கும் இடையில் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. தட்சிணாமூரத்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபமாக காட்சி தருகிறார். இதன் காரணமாக கோவிலில் நவகிரகங்கள் கிடையாது.
No comments:
Post a Comment