திருப்பழனம் (தரிசனநாள்-25.5.2024).
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறுக்கு 3 கி.மீ; தொலைவில் அமைந்துள்ள தேவார திருத்தலமாகும்.
ஆபத்சகாயேஸ்வரர்
எமன் துரத்தி வருவதை உணர்ந்த ஒரு சிறுவன், இத்தல இறைவனை சரணஅடைந்தான். இச்சிறுவனை எமனிடம் இருந்து காத்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறரார்.
சப்தஸ்தானதலங்களில் ஒன்று.
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுதுறை, திருவேதிக்குடி, திருகண்டியூர், திருபூந்துருத்தி, திருநெய்தானம் என்ற இந்த ஏழு திருக்கோவிகளிலும், சித்திரை மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும், விசாக நட்சத்திரமன்று, திருவையாறு தல இறைவன் இறைவி, அய்யாரப்பன், மற்றும் அறம்வளர்த்தநாயகியும், ஒவ்வொரு சப்தஸ்தானதல இறைவனை எதிர்கொண்டழைப்பர். பின் இந்த ஏழுமூர்திகளும், திருவையாற்றில் எழுந்தருளுவார்கள்;, இந்த நிகழ்வே சப்தஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment