திருமழபாடி (தரிசனநாள் -26.5.2024)
அமைவிடம்
திருமானூர்- லால்குடி சாலையிலுள்ளது.
சுந்தராம்பிகை உடனுறை வைத்யநாதசுவாமி. அப்பர், ஞானசம்மந்தர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்ற தலம்.
சுந்தரமூர்திசுவாமிகள்.
சுந்தரர் நன்னிலம், திருவாஞ்சியம், ஆடுதுறை, நாகேஸ்வரம், கண்டியூர், திருவலாம்பொழில் போன்ற திருதலங்களுக்கு சென்று வழிபட்டுவிட்டு, ஓய்வெடுத்த சமயம் ஈசன் கனவில் தோன்றி “மழபாடிக்கு வர மறந்தாயோ” என்று வினவினார். உடனே வட கரையை அடைந்து, திருமழபாடி ஈசனை தரிசனம் செய்தார்.
“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே!
என்று மனஉருக பாடினார்.
நந்திகேஸ்வரர் திருமணம்.
பங்குனி மாதம் புனர்பூசம் நட்சத்திரம் அன்று நந்திதேவருக்கு திருமணவைபவம் நடைபெருகிறது. “நந்தி திருமணம் பார்தால் முந்தி திருமணம் நடக்கும்” என்று ஒரு பழமொழியும் உள்ளது. இதன் காரணமாக திருமணவயதில் இருக்கும் ஆண்களும், பெண்களும் அன்றைய தினம் வழிபாட்டிற்;கு வருகின்றனர்.
பெயர் காரணம்.
மார்கண்டேய மகரிஷி வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில், மழுவேந்திய கோலத்தில் இத்தலத்தில் காட்சி கொடுப்பதால், மழபாடி என்ற பெயர் பெற்றது.
தலபுராணம்.
சிலாதமுனிவர் என்பவர் திருவையாற்றில், வசித்துவந்தார். குழந்தை வரம் கேட்டு சிவனை வழிபடலானார். இறைவனின் கட்டளைப்படி
புத்திரகாமேஷ்டியாகம் செய்ய நிலத்தை உழுத சமயம் ஒரு பெட்டிகிடைத்தது. இறைவனின் ஆணைபடி பெட்டியில் உள்ள குழந்தையை ஏற்றுக்கொண்டார். பெட்டியில் இருந்த குழந்தை 3 கண்கள், 4தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் காட்சி கொடுத்தது. இதை கண்டு வியந்த முனிவர் பெட்டியை மீண்டும் திறந்து குழந்தையை எடுக்கும் சமயம் அந்த குழந்தை சாதாரணமாக காட்சி கொடுத்தது. “ஜபேசர்” என்று பெயர்வைத்து வளத்துவந்தார். இறைவன் இந்த குழந்தைக்கு 16 ஆண்டுகாலம்தான் வாழ்நாள் என்பதையும் அறிவுறுத்திருந்தார். 14 ஆண்டுகாலம் கழிந்த உடன் ஜபேசர் பெற்றோரின் மனவருத்தத்திற்கு காரணம் அறிந்து, திருவையாற்று “அயனஅரி” என்ற தீர்த்தத்தில் ஒற்றைகாலில் தவம் செய்ய துவங்கினார். நீரில் இருக்கும் மீன்களுக்கு கால் கொஞ்சம் கொஞ்சமாக உணவாகின. இதனை ஜபேசர் பொருட்படுத்தவில்லை. மகேஸன், காட்சி கொடுத்து, ஜபேசனின் காலை குணப்படுத்தி சுயசாம்பிகை என்ற பெண்னுடன் திருமழபாடியில் திருமணம் முடித்து வைத்தார்.
மனைவியுடன் மகேசனை பூஜித்த ஜபேசர், சிவகணங்களின் தலமைப்பதவியை பெற்று, கைலாயத்தில் முன்காவல் உரிமை உடைய நந்திதேவரானார் .
No comments:
Post a Comment