ஆனந்ததாண்டவபுரம். (தரிசனநாள்-24.5.2024)
பெயர்காரணம்
இங்கு வாழ்ந்து வந்த ஆனந்த முனிவர் என்பவர் தினமும் காலையில், சேதுவில் நீராடி, சிதம்பர நடராஜர் தரிசனம் செய்து, பின் மகேந்ர பர்வதம் சென்று சிவயோகத்தில் மூழ்கி, பின் இரவு இருப்பிடம் திரும்புவார். இயற்கை சீற்றத்தின் காரணமாக ஆருத்ராதரிசனமன்று நடராஜதரிசனம் கிடைக்காத நேரத்தில் மனமுருக பிராரத்;தனை செய்ததில் இறைவன் இத்தலத்தில், அவரின் ஆனந்ததாண்டவகாட்சியை ஆனந்த முனிவருக்கு அருளினார். நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய இடமாதலால் இப்பெயர்பெற்றது இந்த ஷேத்ரம். இக்கோவிலில் நடராஜரின் குஞ்சிதபாதம், திருமுகத்திற்கு நேராக தனது இடது பாதத்தை சாய்வில்லாமல், சரிபாதியாக நடுவில் தூக்கி நிறுத்திய நேர்தியுடன் தரிசனம் தருகிறார்.
பஞ்சவடீஸ்வரர்.
பஞ்சவடி என்றால் மயிர்கற்றினால்ஆன பூணூல். கருமயிர்கற்றினால் பூணூல் அணிந்திருப்பதால் இப்பெயர் பெற்றார்.
மானக்கஞ்சாறநாயனார்.
இந்த நாயனார் அவதரித்து பேருபெற்ற தலம் இந்த ஆனந்ததாண்டவபுரம். மானகஞ்சாறநாயனாரும், அவரது துணைவியாரும் பிள்ளைவரம் வேண்டினர் ஈசனிடம். இறைவனருளால் புண்ணியவர்தினி பிறந்து திருமண வயதை அடைந்தாள். சிவ பக்தனான மானகஞ்சாறர், ஏயர்கோன் என்ற சிவபக்தனுக்கு அவரின் மகளை மணம் பேசி முடித்தார். இவரே பின்னாளில் ஏயர்கோன் களிகாமநாயனார் ஆனார். புண்ணியவர்தினியின் திருமணசமயம் ஈசன் இவரின் பக்தியை உலகுக்கு பறைசாற்ற நினைத்து திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்தார். சிவனடியாரை பார்த்தவுடன் மானக்கஞ்சாரர் குடும்ப சகிதமாக அடியாரை விழுந்து வணங்கினார். அப்பொழுது புண்ணியவர்தினியின் நீண்ட கூந்தல் கீழே விழுந்து புரண்டது. சிவனடியார் வேடத்தில் வந்த ஈஸ்வரன் மங்கையின் கூந்தல் எனக்கு பூணூலுக்கு உகந்ததாக இருக்கும் என்று கூறியதுதான் தாமதம், மானக்கஞ்சாரனார் உடனே மணக்கோலத்தில் இருக்கும் பெண்ணின் கூந்தலை அடியுடன் அரிந்து கொடுத்தார். இவரின் பக்தியை கண்டு ஈஸ்வரன் அம்பிகையுடன் பசுபதீஸ்வராக ரிஷபவாகனத்தில் காட்சி கொடுத்தார். மணமகனான ஏயர்கோனும் மனைவியின் கூந்தலை பற்றி நினையாமல் தனக்கு சிவபெரு
மானின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று வருந்தினார்.
இரண்டுஅம்பாள்.
பரத்வாஜ முனிவரின் வேண்டுதலுக்கு இணங்கி திருமணகோலத்தில் கல்யாணசுந்தரியோடும், சற்று பெரிய நங்கையாக பெரியநாயகியுடன் ஈசன் உடனுறைகிறார்.
ஜடாநாதர்
சுயம்புமூர்திகள்
இறைவன், இறைவி, விநாயகர், துர்கை என்று அனைவருமே சுயம்பு மூர்திகளாக உள்ளனர்.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, மண்டலாபிஷேகத்திற்குள் இறைவனை தரிசனம் செய்யும் பேறு பெற்றோம்.
No comments:
Post a Comment