வடகுரங்காடுதுறை

 வடகுரங்காடுதுறை (தரிசனநாள்25.5.2024)




தஞ்சாவூர் மாவட்டதில் அமைந்துள்ள, ஞானசம்மந்தரால் தேவாரபாடல் பெற்ற தலமாகும்.

ஜடாமகுடநாயகி சமேத தயாநிதீஷ்வரர் என்ற பெயரில் மகேசன் அருள்பாலிக்கிறார்.






வடகுரங்காடுதுறை பெயர்காரணம்.

வாலி சிவபெருமானை வழிபட்ட தலம். அதன் காரணமாக இப்பெயர் பெற்றது. அனுமனும் இத்தல ஈசனை வழிபட்டதாக அறியப்படுகிறது.







குலைவணங்கீசர்.

ஒரு கர்பிணி பெண் இந்த கோவில் வாசல் வழியாக பயணிக்கிறார். அந்த சமயம் மிகுந்த தண்ணிPர் தாகம் ஏற்படுகிறது. ஈசனை பிரார்தனை செய்கிறார். உடனே அருகில் இருந்த தென்னை மரம் வளைந்து இந்த பெண்ணிற்கு இளநீர் தருகிறது. இதன் காரணமாகவே இத்தல இறைவன் குலைவணங்கீசர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இந்த பெண்ணின் உருவம் இந்த கோவில் தூணில் செதுக்கப்பட்டுள்ளது. 

சிட்டுகுருவி

ஒரு சிட்டு குருவி இத்தல ஈசனை வழிபட்டு மோட்சம் அடைகிறது.

பிறசன்னதிகள்.

 நடராஜர், சிவகாமி, லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், சண்டிகேஷ்வரர் என்று பல தெய்வங்கள் நமக்கு அருள்புரிகின்றனர்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...