மகாசிவராத்திரி, பட்படேஸ்வர் மகாதேவ் மந்திர்

 மகாசிவராத்திரி, பட்படேஸ்வர் மகாதேவ் மந்திர் (8.3.2024).


இந்த ஆண்டு (2024) சிவராத்திரியன்று நாங்கள் உதைபூரில் இருந்தோம். கடந்த (ஆண்டு2022) முறை டிசம்பர் மாதம் உதைபூரில் இருந்த பொழுது ஆருத்ராதரிசனம், அனுமத்ஜெயந்தி, மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற புனித நாட்களில் கோவில் வழிபாடு எங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்த சிறப்பு நாட்களை பற்றி இந்த ராஜஸ்தான் மாநில மக்கள், அறியவில்லை. வைகுண்ட ஏகாதசியன்று நானும் என்கணவரும் ஒரு கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தோம். கோவிலில் எங்களை தவிர யாருமே இல்லை அர்ச்சகர் உள்பட. ஆருத்ராதரிசனம் அன்று காலை மிகுந்த குளிர்காரணமாக (பகல்12மணி வரை 6,7டிகிரிதான் இருக்கும்) நான் மதியம் 12 மணிக்குதான் களி மற்றும் கூட்டு செய்து சிவபெருமானுக்கு நிவேதனம் செய்தேன். 500 மீட்டருக்கு ஒருசிவன் கோவில் இருந்தாலும். (நம் தமிழ்நாட்டில் பிள்;ளையார் கோவில் போன்று அங்கு எங்கும் ஈஸ்வரன் கோவில் காணப்படும்) அன்றைய தினம் எந்த சிறப்பும் கோவிலில் இல்லை. (ஆருத்ராதரிசனம் பற்றி ராஜஸ்தான் மக்கள் அறிந்திருக்கவில்லை). 






ஆனால் இந்த ஆண்டு சிவராத்திரியன்று அனைத்துசிவன் கோவில்களிலும் கோலாகல கொண்டாட்டமாக ஒலியும்  ஒளியும் மிக சிறப்பாக இருந்தது. என்னுடைய மகளின் வீட்டு உரிமையாளர்கள் பரிந்துறையின் பேரில், எங்கள் வீட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவில் ஆரவல்லி மலைக்கருகில் அமைந்துள்ள “பட்படேஸ்வர் மகாதேவ்” இந்த கோவிலுக்கு நாங்கள் நடந்து சென்று வழிபட்டோம். 

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அமரேஸ்வர் கோவிலுக்கும் சென்று வட இந்தியர்களின் முறைப்படி நாங்களே எங்கள் கையால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பூ சாற்றி தீபம் காட்டி வழிபட்டோம். வட இந்தியாவில் நம்வூர் போன்று இறைவனுக்கும் நம்மைபோன்ற பக்தர்களுக்கும் இடையில் அர்சகர்கள் இருப்பது இல்லை. உதாரணமாக பண்டரிபுரத்தில்,  சுதாமா கிருஷ்ணரை கட்டி மகிழ்ந்தவாறு, நாமும் பெருமாள் பண்டரிநாதனை கட்டி மகிழலாம்.

 பட்படேஸ்வர் மகாதேவ் மந்திர்.




நாங்கள் தரிசனம் செய்த மற்ற சிறிய சிவாலயங்கள்.












No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...