பாத்திரம் துலக்கும் இயந்திரம். (Dishwasher)



 பாத்திரம் துலக்கும் இயந்திரம். (Dishwasher)

பல இயந்திரங்களை நான் வாழ்கையில்; பயன்படுத்தினாலும், புதிதாக பாத்திரம் துலக்கும் இயந்திரத்தை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். பயன்பாட்டின் அனுபவமே இந்த Blog. 

Usual Dialogue






எந்த இயந்திரத்தை நாம் பயன்படுத்தாரம்பித்தாலும், நாம் பயன் படுத்தும் பழய முறைதான் சிறந்தது என்ற எண்ணம் நம் அனைவரிடமும் உண்டு. 

உதாரணமாக வாஷிங்மிஷின்- கையால் துவைப்பதுதான் அருமை.

மிக்சி- அம்மி போல் சட்னி சுவையாக இல்லை. இவ்வாறு அனைத்து புதுமையையும் ஏற்க முடியாமல் குறைகூறுவதே வழக்கமாகி விட்டது நமக்கு. ஆனால் பயன்பாட்டில் குறைவைக்கமாட்டோம்.

முதலில் நிறையை பார்போம்.





எண்ணெய் பாத்திரங்கள். டீ வடிகட்டி, காய்சீவி, கத்தி, தோல்சீவி , கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள், இவைகள் துலக்க மிகவும் சிறந்தது. 

குளிர் பிரதேசத்தில் வசிப்பர்களுக்கும், டிட்டர்ஜெண்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கும் வரப்பிரசாதம். பெரிய அளவில் ஒரே மாதிரியான பொருட்கள் துலக்க சிறந்தது. (குறிப்பாக உணவகம், தங்கும்விடுதி, கோவில் தர்மசாலா இவைகளுக்கு).

பாத்திரம் அடுக்கும் முறை.



பாத்திரங்களை வகையாக பிரித்து அடுக்க வேண்டும். இயந்திரத்திலேயே தனி தனி இடங்களாக அமைத்திருப்பார்கள். பாத்திரம் அடுக்க மிகவும் பொறுமை அவசியம். பால் பாத்திரம், டீபோட்ட பாத்திரம், இவ்வாறு கடினமாக சமைத்த பாத்திரங்களை சுத்தம் செய்ய இயந்திரம் மிகவும் கஷ்டப்படும். எல்லாபாத்திங்களுக்கும் ஒரே அளவு திறனைதான்  அதனால்  கொடுக்கமுடியும். ஆழ்ந்து சமைத்த பாத்திரங்கள், மற்றும்  சில பாத்திரங்களை சற்று கையால் கிளீன் செய்த பிறகு தான் மஷினில் போட வேண்டும். சற்று கவனம் செலுத்தி போட்டால் தான் நன்றாக துலக்கி கொடுக்கும். மிக சிறிய பாத்திரங்கள் அடுக்குவதும் கடினம் தான்.  இயந்திரத்தில் இரண்டு தளம் அமைத்திருப்பார்கள். இவற்றிற்கு கீழே விசிறி இருக்கும். நாம் அடுக்கும் பாத்திரங்கள், விசிறியில் அடிபடாதவாறு அடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து பாத்திரங்களும் தலைகீழாக கவிழ்த்துதான் அடுக்க வேண்டும். ஒன்றுக்குள் ஒன்றும் அடுக்ககூடாது. கரண்டியைகூட கவிழ்த்துதான் வைக்க வேண்டும்.

எப்படி துலக்குகிறது. (நான்  புரிந்துகொண்டது)

தண்ணீரை நன்கு சூடுபடுத்தி உள்ளிருக்கும் விசிறியை பயன்படுத்தி அனைத்து பாத்திரங்களையும் சுத்தப்படுத்துகிறது. இதற்கு மூன்றுவகையாக துலக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1. ஓவ்வொருமுறையும் பயன் டுத்தும் டிட்டர்ஜென்ட் பௌடர். 2. பத்துமுறை பயன்; பாட்டிற்க்ஒருமுறை, Rinse aid , மற்றும் Rocksalt. என்று பயன்படுத்த வேண்டும். Washing Mechine போன்றே, சீக்கிரம் துலக்க, ஆழ்ந்து துலக்க, கடினமாக துலக்க என்று பல விருப்பதேர்வு (option) உள்ளது. நாம் பாத்திரங்களின் தேவை மற்றும், நேரத்திற்கு ஏற்றார் போல் நம் விருப்பபடி துலக்கும் முறையை தேர்வுசெய்து கொள்ளலாம். 

என் பாட்டியின் ஆலோசனை எனக்கு எப்படி உதவியது? 

பால் மற்றும் தயிர் பாத்திரங்களை அப்படியே தேய்க போடகூடாது என்று எப்பொழுதும் கூறுவார். அவர் சொல்லும் காரணம் உணவு தெய்வம் போன்றது (உணவுக்கு மதிப்பளிக்க வேண்டும்) இந்த சிறிய அளவு உணவு கூட வீணடிப்பு  செய்ய கூடாது என்பதே இதன் நோக்கம். அதனால் இந்த பாத்திரங்களின் அடியில் சற்று நீர் ஊற்றி அதை குழப்பி மோருடன் கலக்கும் பழக்கத்தை கட்டாயப்பாடமாக கொண்டிருந்தேன். இது எனக்கு Dishwasher பயன்படுத்தும் சமயம் உதவுகிறது. இதே போன்று பொரியல் செய்யும் கடாய், குழம்பு சாம்பார் வைக்கும் கடாய், கூட்டு பாத்திரம் இவற்றில் சற்று சாதம் சேர்த்து அதை சாப்பிடும் பழக்கமும் என்னிடம் இருந்தது. இந்தபழக்கத்தால் பாராட்டும் பெற்றிருக்கிறேன், கேலிக்கும் ஆளாகியுள்ளேன்.  ஆனால் இந்த பழக்கம் இப்பொழுது எனக்கே உதவியாக உள்ளது. 

யார் விரும்புவர் (என் கனிப்பு)

அலுவலகம், வீடு, வியாபாரம் என்று, மிகவும் பரபரப்பாக உள்ளவர்கள். தற்கால பெண்கள். 20, 30 ஆண்டுகள் முழுநேரம் வீட்டைமட்டுமே பராமரிப்பவர்கள் இதை விரும்பமாட்டார்கள். சில பெண்களுக்கு பாத்திரம் துலக்கபிடிக்காது, அருவருப்பு படுபவர்களாககூட இருப்பார்கள். இப்படி பட்டவர்கள் எத்தனைவயதினரானாலும் இதை விரும்பலாம். ஆனால் உணவு கழிவு இல்லாமல்தான் இயந்திரத்தில் போடவேண்டும். சிங் சுத்தம் செய்வது எப்படி இருந்தாலும்  மாறாது.


சரியாக துலக்காத டீ பாத்திரம்

No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...