தாம்பரம் சாணிடோரியம் காசநோய் மருத்துவமனை (அ) நெஞ்சகநோய் மருத்துவமனை. (24.4.2024)
வரலாறு
1928 ஆம் ஆண்டு ஆரோன் சவரி முத்து என்ற இங்கிலாந்து மருத்துவர் 250 ஏக்கர் நிலப்பரப்பில் 12 படுக்கைகளுடன் காசநோய் மருத்துவ மனையை உருவாக்கினார்.
இவர் மகாத்மா காந்தியுடன் நல்ல நட்பில் இருந்தார். அதன் காரணமாக 1920 முதல் இந்தியாவில் அதிக காலம் தங்கி பணிசெய்து வந்தார். காசநோயாளிகளுக்கு ஒரு சுகாதார நிலையமும் ஏற்படுத்தினார். மீண்டும் இங்கிலாந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், 1937 மார்ச் மாதம் சென்னை அரசுக்கு இந்த மருத்துவமனையை விற்றுவிட்டார். கணிதமேதை ராமானுஜம் இந்த மருத்துவமனையில், காசநோய் நோயாளியாக இருந்து சிகிச்சை எடுத்து கொண்டார் என்பது கூடுதல் தகவல்.
1947 ஆம் ஆண்டு விடுதலைக்கு பிறகு நோயாளிகளுக்கு ஒரு புனர்வாழ்வு குடியிருப்பும் 17.14 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டது. 1980 ஆம் ஆண்டு முதல் காசநோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது காரணமாக, 1986 முதல் நெஞ்சகநோய் மருத்துவமனைணாக உருவாகியது. 1993 ஆம் ஆண்டுமுதல் எச்.ஐ.வி.,எய்ட்ஸ், காசநோய் ஆராய்சி மையமாகவும் மேம்படுத்தப்பட்டது.
நான் இங்கு சென்றதன் காரணம்.
நானும் என் கணவரும் இந்த ஆண்டு (2024) அமர்நாத் யாத்திரை செல்ல, முடிவெடுத்து, மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக இந்த மருத்துவமணையை அனுகிணோம். அரசு மருத்துவ அதிகாரியிடம் மட்டுமே சான்றிதழ் பெற வேண்டும், என்பதற்காகவும், எங்கள் வீட்டிற்கு மிக அருகாமையில் இருந்தமையாலும் இங்கு சென்றோம். மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சென்று, பல பரிதோனைகளுக்கு பிறகு சான்றிதழ் பெற்று திரும்பினோம்.
இன்றைய தேவை
நிலைய மருத்துவரிடம் இருந்து சான்றிதழில் கையொப்பம் பெரும் சமயம் அவரிடம் நாங்கள் மருத்துவ சோதனையின் சமயம் எதிகொண்ட சிக்கல்களை தெரிவித்தோம். (2022 ஆம் ஆண்டுமுதல் அமர்நாத் யாத்திரிகர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது) அவரும் நடைமுறை சவால்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். 15 ஆண்டுகளாக பணிதேவையாளர்கள் நிரப்பபடாமல் உள்ளதாகவும். தற்காலிக (அ) பகுதி நேர பணியாளர்களை கொண்டு வேலைகள் நடை பெறுவதாகவும், மருத்துவமனைக்கு பல தேவைகள் உள்ளது என்றும் கொடையாளர்கள் இருந்தால் தெரிவிக்கவும் என்று தெரிவித்தார். இந்த அரசு மருத்துவமனைக்கு கொடை குடுக்க விருப்பம்உள்ளவர்கள், Google இவரின் கைபேசி என்னை பெற்று Whatsapp-ல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு பின் அவரை தொடர்பு கொண்டு, வழங்கலாம் என்றும் எங்களிடம் தெரிவித்தார்.
இந்த மூன்று நாட்களும் நான் மருத்துவமனையில் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து, மருத்துவமனைபற்றிய அடிப்படை செய்திகளுடன் இந்த blog-வடிவமைத்துள்ளேன்.
No comments:
Post a Comment