சிறுவாபுரி. (தரிசனநாள்-17.6.2024)
அமைவிடம்
சென்னை கும்முடிபூண்டி வழித்தடத்தில்(சென்னை –கல்கத்தா நெடுஞ்சாலையில்), திருவள்ளுர் மாவட்டத்தில், சின்னபேடு என்ற பகுதியில்அமைந்துள்ளது. பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்தும் இந்த தலம் செல்லலாம். இந்த பகுதி சிறுவாபுரி என்றும்அழைக்கப்படுகிறது.
நான்கரைஅடி உயரத்தில், நின்ற கோலத்தில் பாலசுப்ரமணிய சுவாமி நமக்குஅருள்பாலிக்கிறார்.
தலபுராணம்.
லவனும் குசனும் ராமருடன் போரிட்ட இடம் இந்த சின்னப்பேடு என்று அருணகிரிநாதரின் இத்தல திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இறைவன் முருகன் மீது பக்தி கொண்ட முருகம்மை என்ற பெண் தியானத்தில் இருந்த சமயம், இவரின் கணவன் இவர் மீது கோபம் கொண்டு இவரின் கையை வெட்டினார், முருகன் அருளால் மீண்டும் கை கிடைக்கப்பெற்றதாக ஒரு வரலாறும் உள்ளது இக்கோவிலுக்கு. இத்தலத்தில் அருணகிரிநாதர் 4 திருப்புகழ் பாடியுள்ளார்.
1.அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற…வருளாலே.
மற்ற திருப்புகழ்களை என்னால் கண்டறிய முடியவில்லை.
பிற சிறப்புகள்
ஐந்து நிலை ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரத்தை தொடர்ந்து மரகதகல்லில் செய்யப்பட்ட மயில், விநாயகர் சன்னதி, ஆதிசுப்ரமணியர் சன்னதி, துலாபாரம் கொடுக்கும் தராசு, முடிகாணிக்கை குடுக்க தனியிடம், சண்டிகேஸ்வரர் சன்னதி.
எங்கள் அனுபவம்.
(9.4.2024) இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலுங்கு வருடப்பிறப்பு அன்று சென்றோம் செவ்வாய்கிழமையாதலால், கூட்டம் மிக அதிகம். தேசிய நெடுஞ்சாலையிலேயே கோவிலுக்கு செல்ல ஒரு பெரிய வளைவு வைத்துள்ளார்கள். இது சேவை சாலையில் உள்ளது. செவ்வாய்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் இந்த சேவைசாலையுடன், பொது வாகனம், சுயவாகனம் அனைத்தையும் நிறுத்திவிடுகின்றனர். இதன் பிறகு அனைவருமே 3 கி;மீ; தொலைவுக்கு அரசு மினி பேருந்தில் தான் செல்ல வேண்டும். பின் ஒரு கி.மீ. நடந்து கோவிலை அடையவேண்டும். இரண்டுசக்கரவாகனம் செல்ல அனுமதி இருக்கிறது. கார் நிறுத்துவதும் மிக அருகில் நிறுத்த முடியாது, காரை நிறுத்திவிட்டு குறைந்தது 500 மீ நடந்து மினி பஸ்சை பிடிக்கவேண்டும். அப்படி சென்றும் மிகுந்த கூட்டம் காரணமாக, நாங்கள் இறைவனைவழிபடாமலேயே திரும்பினோம். சிறுவாபுரியில் இருக்கும் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டு திரும்பினோம்.
17.6.2024- மீண்டும் தரிசனம்.
கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும், தரிசனம் செய்ய ஒருமணிநேரம் ஆயிற்று. பாலசுப்பிரமணியசுவாமியை 10 அடிதூரத்தில் நின்றுதான் தரிசனம் செய்ய முடிந்தது. முருகனுக்கு வலது பக்கம் உள்ள அண்ணாமலை, உண்ணாமுலை அம்மன் சன்னதியும், வள்ளியும் முருகபெருமானும், கைகோர்த்துநிற்கும் சன்னதியும். பணம் குடுத்து செல்லும் சிறப்புவழியினருக்கே தரிசனம் கிடைக்கிறது.
வரிசையில் நின்று தர்மதரிசனம் செய்பவர்களை இடதுபுறமாக அனுப்பிவிடுதவதால், மீண்டும் பணம் கொடுத்தவர்களுக்கே இறைவனை வலம் வர முடிகிறது. வலமாக செல்ல முடியாமல்
இடமாக(அப்பிரதட்ஷனமாக) சென்றால் தான் விநாயகர் மற்றும் ஆதிமுருகனையும் வழிபட முடிகிறது.
வழிபாட்டு நேரம் அறிந்துகொள்ளுங்கள்.
செவ்வாய்கிழமை – அதிகாலை 4 மணிமுதல்- இரவு 9 மணிவரை –தொடர்தரிசனம்.
ஞாயிற்றுகிழமை – அதிகாலை 6 மணிமுதல் - இரவு 9 மணிவரையும்.
;ஏனையநாட்களில் (காலை 6- முதல்12.30 வரை, மாலை 4.30 -8 வரை) மற்ற கோவில் நேரம் போன்றே காலையும் மாலையும் வழிபாட்டிற்காக கோவில் திறந்திருக்கும்.)