கட்டில் துர்கா பரமேஸ்வரி

 கட்டில் துர்கா பரமேஸ்வரி  (தரிசனநாள்-21.1.24)

தலவரலாறு.






பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் ஜாபாலி என்ற முனிவர், இறைவனை எண்ணி தவம் மேற்கொண்டார். இந்திரன், காமதேனு பசுவின் மகளான நந்தினியை, பூலோகம் சென்று மக்களுக்கு உதவுமாறு கட்டளையிடுகிறார்.  பாவிகள் நிறைந்த புலோகத்திற்கு செல்ல விருப்பமில்லாமல் உமையை வணங்குகிறார் நந்தினி. உமை பசுவாக செல்லாமல், நதியாக செல்லுமாறு அறிவுரை கூறுகிறார். “நேத்திரவதி” என்ற ஆறு இன்றளவும் இங்கு ஓடிக்கொண்டிருக்கிறது. அருணாசுரன் என்ற அசுரன் மக்களுக்கு பலவகையிலும் துன்பம் கொடுத்து வந்தான். இதன் காரணமாக முனிவர்கள் அம்பிகையை வேண்டினர். அம்பிகை பூலோகம்வர, அம்பிகையின் அழகில் மயங்கி, லோகமாதாவையே துரத்துகிறான் அசுரன். நேத்ரவதி ஆற்றின் கல்லில் பதுங்கி பின், வண்டு உருவம் கொண்டு அசுரனை அழிக்கிறார் என்பதே இத்தல வரலாறு. உக்ரமாக இருந்த துர்காவை முனிவர்கள் இளநீர் அபிஷேகம் செய்து குளிர்விக்கின்றனர். அம்பிகை துர்காபரமேஸ்வரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள்.

ஆற்றின் சலசலப்பு சத்தம் கேட்டுக்கொண்டே உள்ளது. கர்பகிரஹம், மற்றும் குங்குமம் ஈரமாகவேயுள்ளது.

உச்சிலி மகாலெஷ்மி.

அமைவிடம். 





கர்நாடகா மாநிலம்,  உடுப்பி மாவட்டம், உச்சிலா என்ற கடற்கரை நகரத்தில் அமைக்ப்பட்டுள்ளது. 

1957 ஆம் ஆண்டு மகாலெஷ்மி பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் உள்ளேயும் வெளிபுறத்திலும் கிரானைட் கல் கொண்டு கட்டப்பட்டடுள்ளது. உடுப்பி கிருஷ்ணர் கோவில் பூஜை முறைகள் பின்பற்றப்படுகிறதாம். ஆழகான, மரலேலைபாட்டுடன், அரசர் கால கோவிலுக்கு இணையான உள்ளது.

மங்களாதேவி கோவில்






கர்நாடகா மாநிலம் மங்களுரில் இருந்து மூன்று கி;.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த மங்களாதேவியின், பெயர் கொண்டுதான் இந்த ஊர் மங்களுர் என்று அழைக்கப்படுகிறது. 9ஆம் நூற்றாண்டில், குந்தவர்மனால் கட்டப்பட்ட கோவில்.  மஹாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் கட்டிய கோவில் என்றும் சொல்லப்படுகிறது.  




No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...