வைக்கம் மகாதேவர். (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

 வைக்கம் மகாதேவர். (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

கேரளமாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது.








தலபுராணம்

காரா அரக்கன் மோட்சம் வேண்டி  கடும் தவம் புரிந்தான். சிவபெருமான் அவன் முன் தோன்றி, மூன்றுலிங்கத்தை அவனுக்கு அளித்தார். இரண்டுகைகளில் இரண்டுலிங்கத்தையும், கழுத்து பகுதியில் ஒன்றை தாங்கியும் எடுத்து சென்றான். இந்த இடத்தை கடக்கும் சமயம் லிங்கம் இந்த இடத்தை விட்டு நகர்தமுடியாமல் போனது. இது சிவனின் விருப்பம் என்பதை உணர்ந்து, இந்த மூன்று (வைக்கம், ஏற்றமானூர், காடாதேத்தி) இடத்திலேயே பிரதிஷ்டை செய்தான் இவ்வாறு காரா அசுரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதே இந்த மூன்று கோவில்களும். வியாக்ரகபாதகரிடம் ஒப்படைத்தான் அசுரன் அவனின் மோட்சத்திற்கு பிறகு. இந்த மகாதேவர் காலையில் தட்சிணாமூர்தியாகவும், (ஞானத்தையும், அறிவை வழங்கியும்), மதியம், கிரீடமூர்தியாகவும், தடைநீக்கி வெற்றிபெறசெய்தும், மாலையில் சக்தி பஞ்சாட்சரியாக, சிவகுடும்பமாக, உலகஇன்பத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார். பரசுராமர் வழிபட்டதலம்.

கைலாயவலம்.

வைக்கம், எட்டமானூர் (ஏற்றுமானூர்), கடுந்துருத்தி (காடாந்தேத்தி) இந்த மூன்று சிவன் கோவிலையும், உச்சி பூஜைக்கு முன் தரிசனம் செய்தால், கைலாயத்தை வலம் வந்த பலன் உண்டாகும் என்று எங்களின் Tour Guide தெரிவித்தார். நாங்கள் 2019 ஆம் ஆண்டும் இந்த மூன்று கோவிலையும் தரிசித்து, பேறுபெற்றோம்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...