வடக்குநாதர் கோவில் (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)
அமைவிடம்
கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டம் திருச்சூர் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோவில். பலாயிரமாண்டுகள் பழமைவாய்ந்தது இந்த கோவில். மலையாள வரலாற்று ஆசிரியர் வி.வி.கே. வலதம் என்பவர் புத்தம், சமணம், வைஷ்ணவம் இவற்றின் பாதிப்பை இக்கோவில் அமைப்பு கொண்டுள்ளது என்று தெரிவிக்கிறார்.
ஆதிசங்கரரை அருளிய வடக்குநாதர்.
சிவகுரு ஆரியாம்பாள் என்ற தம்பதிகளுக்கு நீண்டநாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இவர்கள் திருச்சூர் வடக்குநாதரை வேண்டி அவரின் அருளால் அவர்களுக்கு குழந்தையாகவும், நமக்கு ஆதிசங்கரர் என்ற மகானையும், அருள்புரிந்தார். குழந்தைவரம் கேட்கும் பிரார்தனை இந்த கோவிலில் அதிகமாக உள்ளது.
நான்கு பெரிய கோபுரங்களுடன், நான்கு வாயில்களை கொண்டது, இந்த வடக்குநாதர் கோவில். இக்கோவிலில், இறைவன் பிரும்மாண்டமாக நெய்யாலான லிங்கமாக அருள்புரிகிறார். இக்கோவிலில் நந்தி சற்றே விலகியுள்ளது. பிரதோஷ காலத்தில் மட்டும் சிவன் மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் அருள்பாலிக்கிறார். சிவன் மேற்கு நோக்கியும், சிவன் சன்னதி பின்புறம் பார்வதி சன்னதியுமுள்ளது. ராமர், சங்கரநாராயணனர், கணபதி,
இவர்களின் சன்னதி ஆதிசங்கரரரால் தோற்றுவிக்கப்பட்டது. பூரம் திருவிழா மிகவும் புகழ்வாய்ததாக உள்ளது.
No comments:
Post a Comment