ஏற்றுமானூர். (கேரளயாத்திரை 8.2.24 – 15.2.24).
கேரளமாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயம் என்ற ஊரில் இருந்து, 12 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. “கரன்” என்ற அசுரனால் நிறுவப்பட்டதே இந்த சிவலிங்கம். சந்திர பாஸ்கரன் என்ற பாண்டிய மன்னன், இந்த ஆலய சிவனைவழிபட்டு அவரின் துன்ப நீங்கியதாக உணர்கிறார். இதன் காரணமாக இந்த ஆலயத்தை புனரமைப்பு செய்கிறார்.
கோவில் அமைப்பு.
ஏட்டமானூரப்பன் மற்றும் மகாதேவர் என்று இறைவன் அழைக்கப்படுகிறார். அம்மனுக்கு தனி சன்னதியில்லாமல், கருவறைக்கு பின் பகுதியிலேயே அம்மன் வீற்றிருக்கிறார். கணபதி, சாஸ்தா, தட்சணாமூர்திக்கு தனி தனியாக சன்னதிகள் உள்ளன. உலோகம் மற்றும் கல்லினால் ஆன இரண்டு நந்திகள் உள்ளன.
அணையாதீபம்
450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் விளக்கு. இந்த விளக்கு சார்ந்து இங்கு கூறப்படும் கதை. முதியவர் ஒருவர் கையில் தூக்கு விளக்குடன் தரிசனத்திற்காக வந்தார். மிகுந்த பசி காரணமாக யாராவது இந்த விளக்கை பெற்று கொண்டு, பணம் அளிக்குமாறு கேட்கிறார். ஒருவரும் முன்வராத காரணத்தினால் சிவபெருமானேவந்து அந்த விளக்கை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இந்த முதியவர் ஏந்திய விளக்கே இத்தனை ஆண்டுகள் தொடந்து எரிவதாக ஒரு கதை உள்ளது.
பொன்யானை
ஒருஅரசர் பாலா மரத்தினால்ஆன யானை செய்து இந்த கோவிலுக்கு அர்பணித்துள்ளார். மற்றொரு அரசர், அந்த யானைகளுக்கு, 13 கிலோ தங்கத்தினால் தகடு (கவசம்) செய்துள்ளார். “ஆறாட்டுவிழா” காலத்தில் இந்த யானையின் மீது இறைவன் அலங்கரித்து உலாவருகிறார்.
கைலாயவலம்
வைக்கம், எட்டமானூர் (ஏற்றுமானூர்), கடுந்துருத்தி (காடாந்தேத்தி) இந்த மூன்று சிவன் கோவிலையும், உச்சி பூஜைக்கு முன் தரிசனம் செய்தால், கைலாயத்தை வலம் வந்த பலன் உண்டாகும் என்று எங்களின் Tour Guide தெரிவித்தார். நாங்கள் 2019 ஆம் ஆண்டும் இந்த மூன்று கோவிலையும் தரிசித்து, பேறுபெற்றோம்.
No comments:
Post a Comment