கல்பாதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

 கல்பாதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

அமைவிடம்.








கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காட்டில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில்அமைந்துள்ள ஒரு சிவன் கோவிலாகும்.

வரலாறு

கொல்லங்கோடு என்ற இடத்தில் லெஷ்மி என்பவர் வசித்து வந்தார். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதசுவாமி கோயில் போன்று ஒரு சிவன் கோவில்கட்ட விருப்பபட்டு;, காசியாத்திரை முடித்து காசியில் இருந்து பாணலிங்கத்தை கொண்டுவந்தார் கோவில் கட்டுவதற்காக. நீர் நிலை எங்கெல்லாம் உள்ளதோ அந்த இடத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுவந்தார். இந்த நிலையில் கல்பாதிக்கு வந்த உடன் நிலா ஆற்றங்கரையில் நீராடி சிவவழிபாடு செய்தபின்  பாணலிங்கத்தை அவரால் இந்தயிடத்தைவிட்டு அகற்றமுடியாமல் போனது. இறைவனின் ஆணைப்படி இந்த கல்பாதியிலேயே கோவில் கட்ட முடிவுசெய்தார்.  “இட்டி கோம்பி அச்சன்” என்ற அரசரை சந்தித்து, தன் விருப்பத்தைபற்றியும், பாணலிங்கத்தின் நிலைபற்றியும் கூறினார். அரசன் கோவில் கட்டுமானத்திற்கான நிலத்தையும், ஆட்களையும் வேலைக்கு பணிக்கிறார். அம்மையாரும், தான் சேமித்துவைத்திருந்த தங்க காசுகளை மன்னனிடம் தருகிறார். காசியில் இருந்து,  கொண்டுவரப்பட்ட லிங்கம் என்பதால், விஸ்வநாதர் என்ற  பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.

ஆலயஅமைப்பு

தெற்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள நுழைவாயிலில் 18படிகள் கீழ்இறங்கி கோவிலுக்கு வரும்படியான அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், விசாலாட்சி அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மகாகணபதி, தட்சிணாமூர்தி, கங்காதரன், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், நடராஜர், சூரியன், சந்திரன் என்ற பல சன்னதிகளும், நவகிரகங்கள் அவரவர் துணைவிகளுடன் வீற்றிருக்கின்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது கும்பகோண மகாமகம் போன்று ஒரு திருவிழாவும்,  ஐப்பசி மாத கடைசியில், தேர்திருவிழாவும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தில் பாதி புண்ணியம் கிடைக்குமாம். அதனால் “காசியில் பாதி கல்பாதி” என்று இந்த ஊர் அழைக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...