திருப்பாற்கடல்

 திருப்பாற்கடல் (தரிசனநாள்-3.2.2024)






அமைவிடம்.





சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில், காவேரிபாக்கம் என்ற இடத்தில் இருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

புராணவரலாறு.

புண்டரீக மகரிஷி என்பவர், யாத்திரை செல்லும் நேரத்தில் இறைவழிபாட்டிற்காக இந்த திருபாற்கடலில் உள்ள கோவிலுக்கு, செல்கிறார்  சிவபெருமானை பார்த்தவுடன், உடனே திரும்பிவிடுகிறார். இதைகண்ட ஒருமுதியவர் ஏன்  திரும்பிவிட்டீரகள்? என்று கேட்டவுடன், பெருமாள் கோவில் எங்குள்ளது என்று எதிர் கேள்வி கேட்கிறார்.. உடனே அந்த முதியவர், உள்ளே வந்து நன்றாக பாருங்கள், பிரசன்ன வேங்கடேசர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்று கூறுகிறார்.   ஆவுடையார்மீது நின்ற கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். “ஹரியும், சிவனும் ஒன்று” என்பதை அறிவிப்பதே இக்கோவிலின் புராணம். இக்கோவிலில் சொர்கவாசல் என்று தனி வாசல் இல்லாமல் வைகுண்ட ஏகாதசி அன்றும் இந்த மூலவரையே தரிசனம் செய்கிறோம். இதனால் நித்திய சொர்கவாசல்  என்று முலவர் சன்னதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.






அத்தி ரெங்கநாதர் 

இரட்டை கோவில் போன்று இந்த ரெங்கநாதர் கோவில், பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. கிடந்த கோல பெருமாளையும் தரிசிக்க முடிகிறது. 

திருப்பாற்கடல் என்ற பெயர் கொண்டுள்ளதால், “107-வது திவ்ய தேசமான திருப்பாற்கடல்” என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. 106 திவ்யதேசங்களையும் மனித உடல்கொண்டு தரிசிக்கமுடியும். திருப்பாற்கடலும், வைகுண்டமும் இவ்வுலகியியல் வாழ்கை முடிந்தபிறகு நம் உயர்வான செயலே, வைகுண்ட பதவியடைய செய்யும் என்பதும் நமது நம்பிக்கை. 12 ஆழ்வார்களும் திருபாற்கடலைமங்களாசாசனம் (பாடியுள்ளனர்) செய்துள்ளனர்.   







 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...