கார்திகை மாத நரசிம்மர் தரிசனம். Part - 1 (தரிசனநாள் - 24.11.2024)
முன்னுரை
பாலாறு வடகரை தென்கரை தலங்கள் சென்ற போது, சக பயணியர் ஒருவர் மூலம் 42 நரசிம்ம தலங்களை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த அனைத்து தலங்களும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அமைந்துள்ள கோவில்கள். இதில் அகோபிலமும் ஒன்று. இந்தகோவில்பற்றி அனைவரும் நன்கு அறிவர். ( “அகோபிலம்” - என்றுடைய தரிசன பிளாகும் உள்ளது). நாங்கள் இக்கோவில்களை தேடி சென்று தரிசனம் செய்ய முடிவெடுத்து முதல் கட்டமாக ஓசூரில் உள்ள நான்கு தலங்களை நேற்று தரிசனம் செய்தோம். மிகவும் புகழ் அடையாத சிறய கோவில்கள், தேடி சென்று தரிசனம் செய்வது சற்று கடினமாகதான் இருந்தது.(இருக்கும் என்பதும் நாங்கள் அறிந்ததே)
கார்திகை மாதம் நரசிம்மர் தரிசனத்திற்கு மிகவும் உகந்த மாதம். இதன் காரணமாக இன்று தொடங்கிய (24.11.2024),எங்களனின் நரசிங்கபெருமாள் தரிசனம், என்று முடிவடையும் என்பது எங்களுக்கே தெரியாது.
1. ராயக்கோட்டா லெஷ்மி நரசிம்மர்.
இந்த ஆலயம் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் சிறிய கோவில். இங்கு வீபூதி பிரசாதம் கொடுத்தது என்னை வியப்பில் ஆழ்தியது.
2. லெஷ்மி நரசிம்மர்.
ராயக்கோட்டா கோவிலில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள், நேதாஜி நகர் ராமர் கோவில் என்று கேட்டு செல்லவேண்டும். இந்த ராமர் கோவிலில், நரசிம்மர் ஒரு சன்னதியில்; நமக்கு அருள் பாலிக்கிறாரர். இக்கோவில் பட்டாச்சாரியார் பிற கோவில்களுக்குசெல்ல எங்களுக்கு வழிகாட்டினார்.
3. வராகநரசிம்மர்.
ஓசூர் டி.வி.எஸ். நகர் ஆஞ்சநேயர் கோவில் என்று கேட்டு செல்ல வேண்டும், இந்த நரசிம்மரை தரிசனம்செய்ய. இக்கோவிலில், ஆஞ்சநேயர், நரசிம்மர் சக்கரத்தாழ்வார் இவர்களுக்கு தனி தனி சன்னதிகள் இருந்தன.
4. மடிவாலம் நரசிம்மர்.
ஓசூரில் இருந்து 22கி.மீ. தொலைவில் மடிவாலநல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். மிகவும் சிறிய கிராமத்தில் இயற்கைசூழலில் அமைந்துள்ளது. நாங்கள் காலை 10.30 மணிக்கு சென்றதால் கோவில் மூடப்பட்டிருந்தது. 10 மணிக்கே நடை சாற்றிவிடுவார்கள் என்று கிராமத்துமக்கள் தெரிவித்து, பட்டாசாரியாரின் கைபேசி எண்ணையும் எங்களுக்கு கொடுத்தனர். மாலை 5மணிக்குதான் கோவில் திறப்பதாக அவர் தெரிவித்தார். “படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே” என்று 5, 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நாங்கள், எங்கள் சூழ்நிலை காரணமாக உடனே வீடு திரும்பினோம். மீண்டும் மடிவாலம் நரசிம்மரில் இருந்து துவங்குவோம் எங்களின் நரசிம்ம ஆலய தரிசனத்தை.
முடிவுரை.
1.தெலுங்கானா, மட்டப்பள்ளி, யோகநரசிம்மர்
2. தெலுங்கானா, வடபள்ளி, ஸ்ரீலெஷ்மி நரசிம்மர்.
3. ஆந்திரா, கேதாவரம், ஸ்ரீவஜ்ரநரசிம்மர்
4.ஆந்திரா, வேதாத்ரி ஸ்ரீயோகானந்தநரசிம்மர்
5.ஆந்திரா மங்களகிரி, ஸ்ரீபனகாலநரசிம்மர்.
இந்த பஞ்ச ஷேத்ரங்களும், கிருஷ்ணா நதிகரையோர மலை காடுகளில் அமைந்துள்ள, சுயம்பு நரசிம்ம ஷேத்ரங்கள். இவை நான் மேலே குறிப்பிட்டுள்ள 42 நரசிம்ம ஷேத்திரத்தில் கிடையாது. ( தமிழ்நாட்டில் நாங்கள் தரிசனம் செய்த பல நரசிம்மர் கோவில்கள்கூட, இந்த அட்டவணையில் இல்லை). நாங்கள் அகோபிலம் சென்ற போது இந்த பஞ்சநரசிம்ம ஷேத்ரங்களை, அறிந்தோம். 2023 டிசம்பர் மாதம் தரிசனத்திற்காக, இறைவனிடம் போட்ட விண்ணப்பம், இன்றுவரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.