திருவஞ்சிக்களம் (கேரளயாத்திரை 8.2.2024–15.2.2024)
தலபுராணம்.
சேரமான் என்ற அரசர் தினமும் சிவபூஜை செய்வார். இவர் பூஜையை ஏற்றுகொள்ளும் விதமாக சிதம்பர நடராஜரின் சிலம்பொலி இவருக்கு கேட்டகச்செய்வார் சிவன். இதன்பிறகே சேரமான் உணவருந்துவார். இவ்வாறு செல்கையில் ஒருநாள் இறைவனின் சிலம்பொலி சேரமானுக்கு கேட்கவில்லை. உடனே அவர் மனம் வருந்தி அழுது தன்னை மாய்த்துக்கொள்ள முயல்கிறார். இறைவன் அவரை தடுத்து, காலதாமதத்திற்கான காரணத்தை கூறுகிறார். சுந்தரரின் பாட்டில் மயங்கி உன்னை மறந்துவிட்டேன், என்று கூறுகிறார். சேரமான் சுந்தரரை பற்றி அறிந்து கொண்டு அவருடன் நட்பு கொள்கிறார். நட்பின் காரணமாக சுந்தரர் திருவஞ்சிக்களம் வந்து இறைவனை வழிபட்டுவிட்டு, சேரமான் நண்பரையும் பார்கிறார். சுந்தரர் தழிழகத்திலுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டுவிட்டு , மீண்டும் திருவங்சிக்களம் சென்று பூவுலக வாழ்வை, அகற்ற “தலைக்கு தலைமாலை” என்ற பதிகம் பாடுகிறார். சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி, வெள்ளையானையில் சுந்தரரை அழைத்துவர செய்கிறார். சுந்தரர் உடனே நண்பன் சேரமானை நினைக்கிறார். சேரமானும், வெள்ளை குதிரையில் கைலாயம் கிளம்புகிறார். கைலாயம் செல்ல பயன் படுத்திய யானை, குதிரை நின்ற மேடை உள்ளது. சுந்தரர் எழுதிய பதிகம் “ஞானவுலா” என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நாயனாருக்கும், ஆடி சுவாதி அன்று குருபூஜை கொண்டாடப்படுகிறது. கேரளமாநிலத்தில் உள்ள ஒரே திருமுறை பாடல்பெற்ற தலம் இந்த திருவஞ்சிக்களம்.