பாபநாசம் நவகைலாயத்தின் முதல்கோவில் (தரிசனநாள்-5.6.2022)
ஊர் சிறப்பு.
பாபநாசநாதர் கோவில், எதிரில் தாமிரபரணியாறு, மலைக்கு சென்றால். வனம் (காடு), அருவி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அகத்தியர் கோவில், சொரிமுத்துய்யனார் கோவில், எதிரேகண்கவர் ஆறு, அணை, என்று இயற்கை எழிலும், பொழுதுபோக்கு பூங்கா, இதன்வழியாகத்தான், புகழ்பெற்ற மாஞ்சோலை, குதிரை வெட்டி செல்லவேண்டும். இவ்வளவு சிறப்பு, சுற்றிப்பார்க்க ஒருநாள் போதுமானதாக இருக்காது.
ஆலைய வரலாறு.
கைலாயமலையில் நடைபெற்ற சிவபார்வதி திருமணத்தை காணமுடியாத அகத்தியர் இறைவனை வேண்ட, இறைவன் அகத்தியருக்கும் அவர் மனைவி லோபமுத்திரைக்கும் திருமணகோலத்துடன் காட்சி அளித்த இடம்.
கோவில் அமைப்பு.
7நிலை ராஜகோபுரம்,கருங்கல் சுற்றுச்சுவர். உலகம்மை மேற்கு நோக்யுள்ளாள். கருவறை சுற்றி விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, நவ கிரகம், துர்கை உள்ளனர். நடராஜர் ஆனந்ததாண்டவ கோலத்தில் உள்ளார். காலம் சரியாக கணக்கிட முடியவிலை என்று கூறப்படுகிறது. வீரப்பநாயகரால் (கி;பி; 1609 முதல் 1623) யாகசாலை, கொடிமரம், நடராஜமண்டபம், கட்டப்பட்டது. இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.
மலை பகுதி.
நாங்கள் ஜுன் மாதம் சென்றதால் வறட்சியாக காணப்பட்டது.
No comments:
Post a Comment