மேல்வேங்கடநாதபுரம், கீழ் வேங்கடநாதபுரம், (தரிசன நாள் -ஜுன்-5.2022).

 மேல்வேங்கடநாதபுரம், கீழ் வேங்கடநாதபுரம், (தரிசன நாள் -ஜுன்-5.2022).

ங்கடநாதபுரம்.


திருநெல்வேலியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பெயர் மேல வேங்கடநாதபுரம்.. இந்த தலம் தென் திருப்பதி என்றும், திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்குவதற்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிய நேர்தியை (வேண்டுதல்) இந்த பெருமாளுக்கு செய்கின்றனர்.

தலவரலாறு.


மகரிஷி வியாசர் தாமிரபரணி ஆற்றங்கரையில் தவம் மேற்கொண்டார். ஒரு கோடி மலர்களால் பூஜித்த இடம். இந்த ஸ்ரீநிவாச தீர்த்த கட்டத்தில் , ஸ்ரீநிவாசர், ஸ்ரீதேவி,பூதேவியுடன் மகரிஷிக்கு காட்சி அளித்த இடம். மகாவிஷ்ணு, இவரின் தவத்தில், மகிழ்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இவ்விடத்தில் இருந்து மக்களுக்கு அருள்பாலிப்பதாக கூறினார். 700 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடப்ப நாயகர் என்ற மன்னரால் கட்டப்பட்டது, இந்த கோவில். இந்த மன்னருக்கு குழந்தை வரம் தந்தமையால், திருவோணம் அன்று பால்பாயசம் செய்து நிவேதனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 

கீழ் வேங்கடநாதபுரம்.


இந்த கோவில் ஸ்ரீநிவாசர் கோவிலுக்கு  மிக அருகிலேயே அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள், பிருகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். வலக்கரத்தில் சக்கரமும், தனரேகையுடனும், இடக்கரத்தில், சங்குடனும், கதாயுதத்துடனும் நமக்கு அருள் பாலிக்கிறார். வாழவைக்கும் பெருமாள் என்றும், பக்தர்களால் போற்றப்படுகிறார். கீழ் திருப்பதி என்றும், தென் காஞ்சி என்றும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...