கூழமந்தல் (தரிசனநாள் 28.5.2022). அமைவிடம்.
காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் வந்தவாசியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. கூழமந்தலில் இருந்து சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பழையாறை,(கும்பகோணத்தில் இருந்து 3 கி.மீ) கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர் மாவட்டம்) செல்ல, முதலாம் ராஜேந்திரன் காலத்தில் நெடுஞ்சாலை இருந்தது.
கங்கைகொண்ட சோழீஸ்வரர்.
சோழன், ஆசார்யர் சர்வசிவ பண்டிதர் ஆணையால் கூழமந்தலில் அற்புத கற்றலி(ஒற்றைகல் கோவில்-(Monolithic Architecture) ஒன்று உருவாக்கினார்.. கோவில் தெப்பக்குளத்தில் மிதப்பது போன்று கருங்கற்களால் இழைத்து கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீவிசாலாச்சி சமேத ஸ்ரீஉத்திர கங்கை கொண்டசோழீஸ்வரர், மேல் கூறை அல்லாத தூண்கள் கொண்ட, மண்டபம் முன் உள்ள, மிக அற்புதமானா நந்தியை பார்த்தவண்ணம் அருள்பாலிக்கிறார். கோவில் வெளி சுவற்றில் விநாயகர், துர்கை, போன்ற வேறுசில இறைவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. விமானம், அர்த்த மண்டபம், முகமண்டபம், இவற்றடன் கோவில் கட்டப்பட்டுள்ளது.1966 ஆண்டு முதல் புராதனச்சின்னமாக கருதி, தொல்லியல் துறை கட்டுப்பட்டின்கீழ் இயங்குகிறது.
பேசும் பெருமாள் கோவில்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேசும் பெருமாள் 12 அடி உயரத்தில், கருணையுடன், நம்முடன் பேசுவது போன்று, அருள்பாலிக்கிறார். இரண்டு கைகளில், சங்கு சக்கரமும், வலக்கையில் அருள்பாலிக்கும் வரதஸ்ம், இடக்கை தொடையில் பதித்தது போன்று காட்சி தருகிறார். இரண்டு தாயார்கள் கையில் தாமரை மலர் இருப்பது, சிறப்பாக உள்ளது. பெருமாளின் மகுடம், தாயாரின் அணிகலன்கள் என்று அழகிய வேலைபாட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ விஜயகண்ட கோபாலன் என்ற சோழ அரசன், நெல்லூரையும், காஞ்சிபுரத்தையும் தலைநகரமாக கொண்டு ஆண்ட காலத்தில் இந்த பெருமாளுடன் பேசியதற்க்கு ஆதாரமாக வாயிற்படி நிலைக்காலில் கல்வெட்டு பொறித்துள்ளார். காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்ற இந்த மன்னன், இந்த கோவிலுக்கு, பொருளும் நெல்லும் வழங்கியதாகவும், இந்த கோவில் பட்டாச்சாரியார், சூரியனும், சந்திரனும் உள்ளவரை(இவ்வுலகம் உள்ளவரை) நான் பெருமாளுக்கு விளக்கு ஏற்றுவேன் என்று கூறி அரசனிடம் பணம் பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது. முடிகாணிக்கை கொடுக்கும் வழக்கமும் அதற்கான இடமும் கோவில் அருகிலேயே உள்ளது.
No comments:
Post a Comment