வடபழனி பழனியாண்டவர் கோவில். (தரிசன நாள் 11.5.2022).
சென்னை மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையம், 1920-ல் புதுபிக்கப்பட்டு, ராஐகோபுரம் கட்டப்பட்டது. கோடம்பாக்கம் அருகில் உள்ளதால் திரைப்பட துறையினரின் வருகையும் ஆதரவும் அதிகம் உள்ளது. அதிகப்படியான திருமணங்கள் நடக்ககூடிய கோவிலாகவும் திகழ்கிறது.
வரலாறு.
அண்ணாச்சாமி நாயக்கர் என்பவர் பழனி முருகனின் படத்தை வைத்து கூரை கொட்டகையுடன் 1890 ஆம் ஆண்டு மிக எளிமையாக கோவில் கட்டினார். அவருக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக திருத்தணி, திருப்பேரூர் முருகனை வழிப்பட்டு வந்தார். முருகனுக்கு காணிக்கையாக அவருடைய நாக்கை அறுத்து அற்பணித்தார். இத்தகைய நிகழ்வுக்கு “பாவாடம்” என்று பெயர். தெய்வீக சக்தி பெருகி மக்களுக்கு “அருள்வாக்கு” கூறலானார். இவரின் காலத்திற்க்கு பிறகு ரத்தினசாமி தம்பிரான் என்பவரின் கனவில் தோன்றி “பாவாடம்”; செய்துகொண்டு மக்களுக்கு அருள்வாக்கு அருளுமாறு பணித்தார். ரத்தினசாமி தம்பிரானின் சீடர், செங்குந்தர் தம்பிரான். இவர்காலகட்டத்தில் தான் இக்கோவில் கர்பக்கிரஹம், உட்பிரகாரம், கருங்கல் மண்டபம் போன்றவை கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் நெற்குன்றம் போகும் வழியில் இந்த 3 சித்தர்களுக்கும் ஆலையம் உள்ளது.
கோவிலின் அமைப்பு.
மூலவர் பழனி முருகன் நின்ற கோலம், வரசித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சண்முகர், சொக்கநாதர், மீனாட்சி, அருணகிரிநாதர், இவர்களுக்கு தனி சன்னதியும். 40.8 மீட்டர் உயர கோபுரத்துடன் திகழ்கிறது.
கும்பாபிஷேகம்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்க்கு, பிறகு, 2020-ல் “பாலாலயம`'"; செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, 24.1.2022 அன்று மிக சிறப்பாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
No comments:
Post a Comment