நவகைலாயம் சேரன்மகாதேவி. (இரண்டாவது தலம்-தரிசனநாள்-5.6.2022)
உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒன்பது மலர்களை மிதக்கவிட்டு இவை ஒதுங்கும் கரைகளில் அமைக்கப்பட்ட கோவில்களே நவகைலாயம் எனப்படும். திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ.,தொலைவில் உள்ளது.
ஸ்ரீ அம்மைநாதர் வரலாறு.
நவகைலாயத்தில் இரண்டாவது தலம், (சந்திரன் தலம்) சேரன்மகாதேவியில் அமைந்துள்ள இந்த கோவிலாகும். சுயநலமில்லாத இரண்டு சகோதரிகள் அரிசி குத்தி பிழைத்துவந்தனர். கிடைத்த சொற்பவருமானத்தில் பலருக்கும் உணவு அளித்து வந்தனர். அதில் உணவு உன்ன வந்த ஒரு முதியவர் அவர்களின் விருப்பத்திற்கு உதவுவதாக சொன்னவுடன், அவர்கள் சிவபெருமானுக்கு (உரோசம முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்திற்கு) கோவில் கட்டும் விருப்பத்தை கூற அந்த முதியவர் அதற்கான பொருள் உதவியை வழங்கினார் என்பது வரலாறு.
உலக்கையை வைத்து நெல் குத்துவது போன்ற உருவம் கோவில் தூணில் காட்சி அளிக்கிறது.
ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், கோசடையவர்மன், சுந்தர சோழன் இவற்களால் அந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டு, கட்டுமான பனியில் நன்கு வளச்சியடைந்தது. ஒவ்வொரு இடமும் சோழர்கால பாணியை பிரதிபலக்கிறது.
வியாசர் தீர்த கட்டம், திருவேணி சங்கமம், என்றும், இந்த ஆற்றங்கரை புனிதத்துவமும், சிறந்த மருத்துவ குணமும் கொண்டது, என்ற சிறப்பு பெற்றது.
40பேர் பணியாற்றிய இக்கோவிலில் தற்பொழுது நான் ஒருவன் மட்டுமே பணியாற்றுகிறேன் என்று அர்சகர் கூறினார். கோவில் பராமரிப்பு மிகவும் கவலையை அளிக்கிறது.
No comments:
Post a Comment