குன்னத்தூர். ராகுதலம். (தரிசனநாள்-5.6.2022).
நவகைலாயத்தில் நான்காவது இடமான இந்த குன்னத்தூர், திருநெல்வேலியில் இருந்து 10கி.மீ. தொலைவில் உள்ள கீழ் வேங்கடநாதபுரம் என்னும் கிராமத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இறைவன் ஸ்ரீகோதபரமேஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன், என்ற பெயரில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார் ஈசன்.
கோவில் உருவான வரலாறு.
நவகைலாயத்தை உருவாக்கியவர் உரோச மகரிஷி. இவர் அகத்திய முனிவரின் முதல் சீடரும், பிரம்மனின் பேரனும் ஆவார். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து இருந்த இந்த கோவில், இயற்கை சீற்றத்தால் அழிந்தது. இந்த இடம் சங்கானி என்று அழைக்கப்பட்டது. குன்னத்தூரை ஆண்ட குறுநில மன்னர், சங்கானி என்ற இடத்திற்கு அருகில் இருந்த பொத்தையில், (பொத்தை பொருள்- சிறுமலை, கற்பாறை, கரிகாடு.) ஒரு அரிய வகை மரத்தை வளர்த்து வந்தார். இந்த மரத்தில் ஒரே ஒரு பூ தான்பூக்கும். இந்த பூ காயாகி பின் கனி கொடுக்கும் இதை சாப்பிட்டால், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கம் என்பதால், மன்னர் இந்த மரத்தை மிக கவனமாக பாதுகாத்து வந்தார். இந்த இடம் வழியாக குடத்தில் நீருடன் சென்ற பெண்னின் குடத்தில், இந்த அரியவகை மரத்தின் பழம் விழுந்து விட்டது. அந்த பெண்னும் அது தெரியாமல், வீட்டில் குடத்தை வைத்து விட்டார். அரண்மனை ஆட்கள் இந்த பெண் வீட்டில் பழம் இருந்ததை கண்டு பிடிக்க, அந்தபெண் தான் பழத்தை திருடவில்லை என்று கூறியும், அவள் கற்பவதி என்ற தெரிந்தும் மரணதண்டனை அளித்தமையால், அந்த பெண் இந்த ஊரில் பெண் மற்றும் பசுவை தவிற வேறு யாரும் உயிர் வாழக்கூடாது என்று சாபமிட்டமையால், பசுக்கள் மட்டுமே இருந்தன. உரோச முனிவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தின் மேல் இந்த பசுக்கள் பால் சொரிந்ததை அறிந்த பாண்டிய அரசன், இந்த கோவிலை கட்டினார்.
கோவிலின் சிறப்பு.
அபிஷேக நேரத்தில் சிவலிங்கத்தில் ஒரு நாகம் இருப்பது போன்று காட்சி தெரிகிறது. பசுமையாக இயற்கை எழிலுடன் கோவில் உள்ளது. பிராகாரத்தில் எடுத்த இரண்டு புகைப்படத்தை இணைத்துள்ளேன்.
No comments:
Post a Comment