திருப்புடைமருதூர். (1min read)

 திருப்புடைமருதூர்.(தரிசனநாள்-5.6.2022).

திருநெல்வேலியில் இருந்தது 28.கி.மீ.தொலைவில் உள்ளது. கோமதியம்மன் உடனுறை நாறும் பூநாதர் ஆலையம்.இது  தட்சிணகாசியாகும்.

காசிக்குஒப்பானது மூன்று இடங்கள்.


1.உத்ரகாசி- மல்லிகார்சுனம்- கர்னூல் மாவட்டம்- ஸ்ரீசைலம்- ஆந்திரமாநிலம்.

2.மத்தியகாசி-மத்யார்சுனம்-தஞ்சை மாவட்டம்-திருவிடைமருதூர்- தமிழ்நாடு.

3.தட்சிணகாசி-புடார்சுனம்-திருநெல்வேலி மாவட்டம்,திருப்புடைமருதூர்- தமிழ்நாடு.

கோவில்சிறப்பு. 

தலையில் கோடாரி வெட்டுண்ட தடயத்துடன் சாய்ந்தநிலை லிங்கம். மார்பில் மானின் மீது பாய்ந்த அம்பு என்ற லிங்க திருமேனியுடன் சிவ பொருமான் காட்சி தருகிறார். இறைவனுக்கு சந்தன தைலம் மட்டுமே பூசப்படுகிறது;. கோமதியம்மன் நீரில் இருந்து எடுக்கப்பட்ட ருத்ராஷ்ச, மேனியுடையவளாக காட்சி தருகிறார். கோவிலுக்குள் 50 மேற்பட்ட தூண்கள் உள்ளன. அவையனைத்தும் நுணுக்கமாக கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

கருவூர் சித்தர். 

கருவூர்சித்தர் சிவனை வழிப்பட தாமிரபணி வட


கரைக்கு வந்த போது வெள்ளப்  பெருக்கெடுத்து ஒடியது ஆறு. தென்கரையில் மருதபூவிற்கு இடையில் இருக்கும், நாறும் பூநாதரே உன்னை வழிபட எனக்கு அருள்வாயாக என்று, வாய்விட்டு வேண்டிய சித்தரின் குரலை, தலையசைத்து கேட்டதினாலேயே லிங்கம் சற்று சாயந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

தலவரலாறு.


தேவர்கள் காசிக்கு ஒப்பான தலத்தை வேண்ட ஈசன் பிரம்மதண்டத்தை பூமியில் இடும்படி கூறுகிறார். பிரம்மதண்டம் பூமியில் தாமிரபரணியாற்றங்கரையில் திருபுடைமருதூரில் வந்து அமைந்தது.

பிரும்மாண்ட கோவில் வந்த வாலாறு.

வீரமார்தாண்ட மன்னர், மருதமரவனத்திற்கு, வேட்டையாட வந்தார். மான் ஒன்றை அம்பு கொண்டு, வீழ்த்தினார். அந்த மான் அருகில் உள்ள மரபொந்தில் ஒளிந்துக் கொண்டது. மானை பிடிக்க மரத்தை வெட்ட ரத்தம் பீறிட்டது. மான் உருவில் வந்தது ஈசனே என்று அறிந்து, இங்கே கோவில் கட்டினார்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...