சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

ஷண்மதம்.

 நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக 

 இறைவனை வழிபட்டு வந்தனர்.

1.கணாபத்யம் - விநாயகர் வழிபாடு.

2.கௌமாரம் - முருகன் வழிபாடு

3.சௌரம் - சூரியன் வழிபாடு

4.சாக்தம் - அம்மன் வழிபாடு

5. சைவம் - சிவன் வழிபாடு

6. வைணவம் - பெருமாள் வழிபாடு.

என்று ஆறு பிரிவுகள் இருந்தனர். ஆதிசங்கரரே இவற்றை ஒன்றிணைத்து இந்த ஜகத்திற்கே குருவாக விளங்குகிறார். சைவ ஆலயங்கள் என்பது சிவன் கோவிலை குறிக்கறது. தற்காலத்தில் எந்த பிரிவுயில்லாமல், அவரவர் விருப்பதற்கிணங்க இறைவனை வழிபடுகின்றனர். 

நாங்கள் “சிவாலயங்களுக்கு சென்று வழிபடுதலே பிரதானம்” என்று செயல்படுவதால்,  இந்த கோவிலின் வகைகள் மற்றும் அதன் சிறப்பகளை எழுத வேண்டும் என்ற எண்ணமே இந்த வலைபதிவுக்கான காரணம்.

சிவன்கோவில் வகைகள். ( நான் அறிந்தது மட்டுமே)

1.பஞ்சபூததலங்கள்

2பஞ்சசபை தலங்கள்

3. சப்தவிடதலங்கள்.

4.சப்தஸ்தானதலங்கள்

5. ஜோதிர்லிங்க தலங்கள்

6. அட்டவீரட்டான தலங்கள்.

7. நவகிரகதலங்கள்

8. நவகைலாயதலங்கள்

9. ஷடாரண்ய தலங்கள்

10 .பஞ்சராமதலங்கள்

11. பஞ்சாரண்யதலங்கள்

12. பஞ்சகேதார் தலங்கள்

13. பஞ்ச கைலாஷ்தலங்கள்.

14. தேவாரதிருத்தலங்கள்

15. தேவாரவைப்புத்தலங்கள்

16. நவபுலியூர் தலங்கள்.

17. மாடக்கோவில்வகைகள்.

18. திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு தலங்கள்.

19. நாயன்மார் தலங்கள். (அவதார முக்திதலங்கள்

20. மாகாளகோவில்கள்.

 21. திரிலிங்க தேசம்.

22. நவநந்தி தலங்கள்.

23. பஞ்சலிங்கேஷ்வர தலங்கள் (ஐந்து கருவரைகளில் ஐந்து லிங்கங்கள்)

24. பரசுராமமர் உருவாக்கிய 108 சிவாலயங்கள்.

25. பல்லுயிர் வழிபாட்டுத்தலங்கள்

பஞ்சபூததலங்கள்.

இயற்கையான காற்று, ஆகாயம், நிலம் நீர், நெருப்பு இவையே பஞ்சபூதங்கள் என்று குறிப்பிடுவோம். இதன் அடிப்படையிலேயே மனிதஉடல் இயங்குகிறது. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்- நிலத்துக்கு அதிபதியாகவும், நீர்- திவானைக்கா ஜம்புகேஸ்வரர், நெருப்பு – அருணாச்சலேஸ்வரர் திருவண்ணாமலை, காற்று-காளகஸ்தி காளகஸ்தீஸ்வரர், ஆகாயம்-சிதம்பர நடராஜர் கோவிலாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. இதுவே பிரதான பஞ்சபூததலங்கள். ஆனால் பகுதிக்கு பகுதி இவ்வகையான தலங்கள் உள்ளன. உதாரணம் - திருநெல்வேலி, சென்னை பகுதியில் பஞ்சபூததலங்கள் உள்ளது.

பஞ்சசபை தலங்கள்.


சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜர் நடனமாடிய தலங்களே பஞ்சசபை தலங்கள் அழைக்கப்படுகின்றன. (பஞ்ச-ஐந்து)

 1.சிதம்பரம்- கனகசபை, 2. மதுரை- வெள்ளியம்பதி 3. திருநெல்வேலி- தாமிரசபை, 4. திருவாலங்காடு – ரத்தினசபை, 5.திருக்குற்றாலம் -சித்திரசபை 

சப்தவிடதலங்கள்.



பொருள் - சப்த என்றால் ஏழு, விடங்ககர் - என்றால் உளியால் செய்யப்படாத மூர்த்தி. இந்திரனிடமிருந்து முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு மூர்திகள். அவை திருவாரூர், திருநள்ளாறு, திருமறைக்காடு (நாகப்பட்டனம்), திருவாய்மூர், திருக்காறாயில், திருநாகைகோகரணம், திருக்கோளிலி. என்பதாகும். இவையனைத்தும், முசுகுந்த சக்கரவர்தி  பிரதிஸ்டை செய்யப்பட்ட கோவில்களே சப்தவிடதலங்கள் என்று  அழைக்கப்படுகின்றனர். இறைவனின் பெயர்கள் மற்றும் அவர் ஆடும்; ஆடலில் வகைகள்,

திருவாரூர் -வீதிவிடங்கர் - அஜபாதநடனம் (மூச்சை உள்ளேயும் வெளியேயும்யிழுத்தல்)

திருநள்ளாறு – நாகவிடங்ககர்  - உன்மத்த நடனம் -(பித்தர் ஆடுவது  போன்று)

நாகைகோகரணம் - சுந்தரவிடங்கர் - தரங்கநடனம் (கடல் அலை எழுவதுபோன்று)

திருக்காறாயில் - ஆதிவிடங்கர் - குக்குடநடம் (கோழிபோல் ஆடுவது)

திருகோளிலி – அவனிவிடங்கர் - பிருங்க நடனம் - வண்டு மற்றும் மலர் போல் ஆடுவது.

திருவாய்மூர் -நீலவிடங்கர் - கமலநடனம் (தாமரை மலர் அசைவு போன்ற நடனம்)

வேதாரண்யம் - புவனிவிடங்கன் - ஹம்சபாதநடனம்( அன்னம் போன்ற அசைவு) 

சப்தஸ்தானதலங்கள்.


திருவையாறு சப்தஸ்தானம்; என்பது நாம் அறிந்ததே, அதே போன்று, சக்கரப்பள்ளி, (இந்த சக்கரப்பள்ளி சப்தஸ்தான தலங்கள் சப்தமங்கை தலங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தமங்கைதலங்கள் என்ற பெயரில் வலைபதிவும் வெளியிட்டுள்ளேன்.) மயிலாடுதுறை, கும்பகோணம், திருநீலக்குடி, திருநல்லூர், கஞ்சனூர்,  என்று பல இடங்களில் நடைபெறுகிறது. சப்தஸ்தானம் என்றால் ஏழுவூர்கள் என்று பொருள். ஏழுவூர்கள் கூடி நடத்;தும் திருவிழாவே சப்தஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. (இவை தழிழ்நாட்டில் மட்டுமே)

ஜோதிர்லிங்கதலங்கள்.




ஜோதி வடிவாகயிருந்த ஈஸ்வரனை சாமனியர்கள் வழிபடுவது (அ) வணங்குவது சிரமாகயிருந்ததால் ஜோதிவடிவான இறைவன் பக்தர்களுக்காக லிங்கவடிவமாகமாறியயிடமே ஜோதரிலிங்க தலங்கள் என்ற கூறுவர்.

இந்த ஜோதிர்லிங்க தலங்கள் 12 என்று கணக்கிட்டாலும் ஆதிசங்கரர் அருளிய சுலோகத்தின் அடைப்படையில் பார்தால் 16க்கு மேற்பட்ட தலங்கள் நம் பாரதம் முழுவதும் பரவியுள்ளன.  முதலில் ஸ்லோகத்தைஅறிவோம்.  

த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்ஸோத்ரம். த்வாதச- என்றால் 12 என்று பொருள்.

சௌராட்ரே சோமநாதம்ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்

உஜ்ஜய்ன்யாம் மகாகளம் ஓம்காரம் அமலேஸ்வரம்

பரல்யாம் வைத்யநாதம்ச டாக்கின்யாம் பீரமசங்கரம்

சேதுபந்தேது இராமேசம் நாகேசம் தாருகாவனே

வாரணாஸ்யம்து விஷ்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே

ஹிமாலயேது கேதாரம் குஷ்மேஷம்ச சிவாலயே 

ஏதானி ஜோதிர்லிங்காணி சாயம்ப்ராத படேநரக 

சப்தஜென்ம க்ருதம்பாவம் ஸ்மரேணேன விநச்யதி

இந்த ஸ்லோகம் படித்தவுடனேயே நாம் ஜோதிர்லிங்க கோவில்களை நன்கு அறிய முடியும். நாகேசம் தாருகாவனே என்று குறிப்பிட்டயிடத்தில் மூன்று கோவில்களை குறிப்பிடுகின்றனர். மகாஷ்ட்ரா மாநிலத்தில் பரலி வைத்யநஜாத் கோவிலுக்கருகில் நாகநாத் என்ற சிவன்கோவிலையும், குஜராத் மாநிலத்திலுள்ள நாகேஷ்வர் கோவிலையும் குறிப்பிடுவர். அதேபோன்று பரலி வைத்யநாத் கோவிலையும், ஜார்கண்ட் மாநிலத்தில்ருள்ள பரலி பைத்யநாத் கோவிலையும் குறிப்பதாக கூறுவர். ( மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் வ என்ற எழுத்தை ப என்று உச்சரிப்பர் (வைத்யநாத்,(எ)பைத்யநாத்). தாருகாவனம் என்று பார்கும் போது உத்ரகாண்ட் மாநிலம் ஜாக்கேஷ்வர் தாமையும் குறிப்பிடுவர். 

ஜாக்கேஷ்வர்தாம், பரலி வைத்யநாதர், நாகநாத் மூன்று தலங்களுக்கும் தனி தனியாக வலைபதிவிட்டுள்ளேன்.

ஜோதிர்லிங்க தலங்கள்

1. சோமநாத் - குஜராத் (இரண்டு முறை தரிசன தடை)

2. மல்லிகார்ஜுனா  -ஸ்ரீசைலம் ஆந்திரா ( தரிசன முயற்சியே செய்யவில்லை)

3. மகாகாளேஸ்வர் - ம.பி.(தரிசன வலைபதிவு செய்துள்ளேன்.)

4. ஓம்காரேஸ்வரர் - ம.பி ( தரிசனம் செய்யவில்லை.)

5. கேதார்நாத் -உதரகாண்ட் ( தரிசன வலைபதிவுள்ளது)

6. பீமாசங்கர் - மகாராஷ்டிரா (ஒருமுறை முயன்று தோல்வி)

7. காசிவிஸ்வநாதர் -  உ.பி(மூன்றுமுறை தரிசனம் -வலைபதிவும் செய்துள்ளேன்.)

8. த்ரயம்பகேஸ்வர். -மகாராஷ்ரா ( தரிசனம் மற்றும் வலைதிவிட்டுள்ளேன்.

9. வைத்யநாத் - ஜார்கண்ட் (தரிசனம் செய்யவில்லை)

10. நாகேஸ்வர் -குஜராத் (இரண்டுமுறை தரிசனதடை)

11. ராமேஸ்வரம் - தமிழ்நாடு ( பலமுறை தரிசனம். வலைபதிவு செய்யவில்லை)

12. கிரிணேஷ்வர் (எ) கிருஷ்ணேஸ்வரர் (எ) குஷ்மேஷ்வர் -மகாராஷ்ரா ( தரிசனம் செய்து வலைபதிவிட்டுள்ளேன்.)

1.மத்தியபிரதேச – மமலேஸ்வர்

2. மகாராஷ்ரா பரலி  பைத்யநாத்

3.மகாராஷ்ட்ரா – நாகேஷ்வர். 

4. உத்ராகாண்ட்.- ஜாக்கேஷ்வர் என்ற  நான்கு தலங்களும் மக்களால் ஜோதிர்லிங்கங்களாக வணங்கப்படுகிறது.

அட்டவீரட்டான தலங்கள்




அஷ்டம் என்றால் எட்டு தமிழில் கூறுவதற்காக அட்ட என்று குறிப்பிட்டுள்ளேன். 1. திருகண்டியூர், 2.திருக்கோவலூர், 3.திருவதிகை, 4. திருப்பறியலூர், 5. திருவிற்குடி, 6. திருவழுவூர். 7.திருகுறுக்கை 8. திருக்கடையூர். என்ற எட்டுகோவில்கள் அட்டவீரட்டான தலங்கள்.

சிவபெருமானின் வீர செயல்கள் (வீரதிருவிளையாடல்கள் )  நடத்தியயிடங்கள் வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன். இந்தயிடங்களின் எண்ணிக்கை எட்டு.  (அஷ்டம்-எட்டு)

1. திருகண்டியூர் -  படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மனின் கர்வம் தீர்க பிரம்மனின் தலையை கொய்தயிடம். இறைவன் பிரம்மகணிடீஸ்வரர். (வலைபதிவிடவில்லை) பலமுறை தரிசனம் செய்தயிடம், திருவையாறு – அருகில்) (340 -வது திருமந்திரபாடல்)

2. திருகோவலூர் -உலகஉயிர்களை துன்புறுத்திய அந்தகன் என்ற அசுரனை வதைத்தயிடம். (திருவண்ணாமலை – அருகில் தரிசனம் இதுவரை செய்யாத ஆலயம், அந்தகாசரசம்ஹாரமூர்தி) (339 வது திருமத்திரபாடல் உள்ளது.)

3.திருவதிகை - முப்புரம் எரித்தயிடம்.  முப்புரம் என்பது மும்மலம் (ஆணவம், மாயை, கன்மம்) வீரட்டாணேஸ்வரர் இறைவன். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் அமைந்துள்ள தலம். 343 வது பாடல் திருமந்திரம். பல முறை தரிசனம் செய்த தலம். ஆனால் வலைபதிவுசெய்யவில்லை.

4.திருப்பறியலூர் - இறைவன் வீரட்டேஸ்வரர். தற்சமயம்யிந்தயிடம்  கீழ்பரசலூர் என்ற அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறைமாவட்டம் செம்பொனார் கோவில் அருகில் உள்ளது. 

5.திருவிற்குடி- சலந்தன் என்ற அசுரனை அழித்ததலம். நாகூர்- திருவாரூர் காலையில் விற்குடி என்றயிடத்தில் அமைந்துள்ள கோவில் நாங்கள் தரிசனம் செய்ததில்லை. 341 வது திருமந்திர பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

6.திருவழுவூர் - கயமுகாசுரனைக் கொன்று அவரின் யானை தோலை போர்திகொண்டயிடம். மயிலாடுதுறை -திருவாரூர் சாலையில் வழுவூர் என்றயிடத்தில் அமைந்துள்ளது. என்னுடையவலைபதிவும் உள்ளது, திருவழுவூர் என்ற பெயரில். இறைவன் வீரட்டாணேஸ்வரர்.

7. திருக்குறுகை - காமனை எரியித்தயிடம் . இறைவன் கொருக்கை வீரட்டேஸ்வரர். மயிலாடுதுறையியிலிருந்து மனல் மேடு செல்லும் பாதையில் அமைந்துள்ளது. 346வது திருமந்திரப்பாடலில் இத்தலம் பற்றிய குறிப்புள்ளது. என்னுடைய வலைபதிவும் உள்ளது. 

8. திருக்கடவூர் - மார்கண்டேயனுக்காக யமனை அழித்தயிடம். மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது. மிகவும் புகழ் பெற்றதலம். மனிதன் அவனின் ஆயுள்விருத்திக்காக 60வதாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும்யிடம். பலமுறை தரிசனம் செய்துள்ளேன். ஆனால் வலைபதிவிடவில்லையிதுவரை. 345வது திருமந்திரத்தில் இதற்கான சான்றுள்ளது.

நவக்கிரக தலங்கள்

தமிழ்நாட்டில் கும்பகோணத்தை சுற்றியுள்ள ஒன்பது கோவில்கள் நவகிரஹகோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. சூரியனார் கோவில் - சூரியனுக்கும், திங்களுர்- சந்திரனுக்கும், வைதீஸ்வரன் கோவில் - செவ்வாய்கும், திருவெண்காடு – புதனுக்கும்,  ஆலங்குடி  குருவுக்கும், கஞ்சனூர் - சுக்கிரனுக்கும், திருநள்ளாறு – சனிக்கும் உகந்ததாக கூறி, இத்தலங்கள் நவகிரதலங்கள் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பகுதிக்கு பகுதி இவ்வாறு நகவிரதலங்கள் உள்ளன். உதாரணமாக – காஞ்சிபுரத்தில் மட்டுமே நவகிரகதலங்கள் உள்ளன்.


 சென்னை நகரில் மட்டுமே நவகிரகதலங்கள் உள்ளன. 

நவகைலாய தலங்கள் 







திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள  ஒன்பது கோவில்கள் நவகைலாயதலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உரோச முனிவர் என்பவர் முக்தி அடைய சிவனை வேண்டுகிறார். ஓன்பது தாமரை மலர்கொண்டு பூஜித்தசமயம், இந்த மலர்கள் தாமிரபரணிஆற்றங்கரையில் ஒன்பதுயிடங்களில் ஒதுங்குகின்றன. அந்தயிடங்களில் கிடைத்த ஒன்பது சிவலிங்கங்களை கிடைத்தயிடத்திலேயே புஜிக்கிறார். அந்த இடங்களில் அமைந்த கோவில்களே நவகைலாயதலங்கள் ( இத்தலங்களும் நவகிரகத்தை அதிபதியாக கொண்டுள்ளதால் திருநெல்வேலி பகுதி நவகிரஹதலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) அவையாவன 

1.பாபநாசம் 2. சேரன்மாதேவி 3.கோடகநல்லுஸர் 4. குன்னத்தூர் 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7.தென்திருப்பேரை 8.ராஜபதி 9.சேர்ந்த பூ மங்கலம்.

இந்த ஒன்பது தலங்களின் பெயர்களில் தனி தனியாக என்னுடைய

தரிசனத்தை வலைபதிவிட்டுள்ளேன்.

ஷடாரண்ய ஷேத்திரங்கள்




தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட பகுதிகளான ஆற்காடு மற்றும் வாலாஜா பகுதிகளில் அமைந்துள்ள ஆறு சிவஸ்தலங்களே ஷடாரண்ய ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. 

ஷடாரண்ய ஷேத்திரம் என்றால் என்ன?

காஞ்சிபுரத்தில் சிவபார்வதி திருமணத்தின் சமயம், சப்தரிஷிகள் அவர்களின் தினசரி அனுஷ்டாணங்கள் செய்ய வனப்பகுதியை தேர்ந்தெடுத்து பாலாற்றின் கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டயிடங்களே ஷடாரண்ய ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது.

1.வேப்பூர் வசிஷ்ட முனிவர் வழிபட்ட தலம்

2.மேல்விஷாரம் வால்மீகி முனிவர் வழிபட்ட வால்மீகீஸ்வரர்.

3.புதுப்பாடி பரத்வாஜமுனிவர் வழிபட்ட பரத்வாஜேஸ்வரர.

4.கரை கௌதமமுனிவர் வழிபட்ட கௌதமேஸ்வரர்.

5.குடிமல்லூர்

6. வன்னிமேடு

அருகில் உள்ள அவரக்கரை என்ற தலத்தையும் சேர்த்து சப்த ரிஷிகள் வழிபட்டதலமாக போற்றுவர்.  நாங்கள் தரிசனம் செய்ய இறைவனை பிரார்தனை செய்கிறோம்.

பஞ்சராமஷேத்ரங்கள்

 




பெயரை கேட்டவுடன் நாம் ராமர் கோவில்கள் என்று நினைப்போம், ஆனால் ஆந்திரமாநிலத்தில் அமைந்துள்ள ஐந்து சிவஸ்தலங்களே பஞ்சராமஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்ராமஷேத்ரம் என்றால் என்ன?

முருகப்பெருமான் தாராசுரனை அழித்தசமயம், அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆத்மலிங்கம், ஐந்து துண்டுகளாக பூமியில் சிதறியயிடங்களே பஞ்ராமஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.

1.அமரராமம்

அமராவதியில் அமைந்துள்ள கோவில். கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது. இந்திரன் மற்றும் தேவர்கள் வழிபட்டதலம். (அமராவதி என்ற பெயரில் தரிசனவலைபதிவு செய்துள்ளேன்.) 

2.திராஷாராமம்

காக்கிநாடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பீமேஸ்வர். 18 மகா சக்திபீடங்களில் ஒன்றாக உள்ளது. ( தரிசனம் செய்யவில்லை.)

3. சோமாராமம்

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள சோமேஸ்வரசுவாமி ஆலயம். சந்திரன் வழிபட்ட தலம். பௌர்ணமி மற்றும் அம்மாவாசை காலங்களில் லிங்கத்தின் நிறம் மாறுபடும் தன்மை கொண்டது. (தரிசனம் செய்யவில்லை)

4.ஷீராராமம்

மேற்கு கோதாவரி மாவட்டம் பாலகொள்ளு என்றயிடத்தில் அமைந்துள்ள ஷீரராமலிங்கேஸ்வரர் ஆலயம். (ஷீரம் - பார்கடல்). இக்கோவில் கோபுரம் மிகவும் புகழ்பெற்றது. (தரிசனம் செய்யவில்லை)

5.குமாரராமம்

காக்கிநாடா மாவட்டம் சாமல்கோட்டா என்றயிடத்தில் குமார பீமேஸ்வரராக ஈசன் அருள்புரிகிறார். அமராவதியை தவிற பிற கோவில் தரிசனத்திற்காக காத்துகொண்டிருக்கிறோம். (தரிசனம் செய்யவில்லை)

பஞ்சாரண்யதலங்கள்



தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள காட்டு பகுதியில் அமைந்த கோவில்களே பஞ்சாரண்யதலங்கள் எனப்படும். (பஞ்ச என்றால் ஐந்து)(ஆரண்யம் என்றால் காடு) இந்த ஐந்து கோவில்களிலும் ஐந்துகால பூஜையில் தொடந்து தரிசனம் செய்தால்; முக்தியடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருஞானசம்பந்தர் திருத்தல பயணத்தின்போது முறைப்படியிந்த ஐந்து தலங்களிலும் வழிபட்டார் என்பது குறிப்பிடதக்கது.  அவையாவன

1. திருக்கருகாவூர் - முல்லைவனம் -அதிகாலை வழிபாட்டுநேரம்

2. அவலிவநல்லூர் - பாதிரிவனம் - காலைவழிபாடு

3. அரதைபெரும்பாழி – வன்னிவனம் - உச்சிகாலவழிபாடு

4. ஆலங்குடி – பூளைவனம் - மாலை வழிபாடு

5. திருகொள்ளம்புதுர் - வில்வவனம் - அர்த்தஜாமவழிபாடு என்று தொடந்து ஐந்து காலமும் வழிபட்டால் முக்தி கிடைக்கும். 

பஞ்சகேதார் தலங்கள்



;சார்தாம் தலங்களில் ஒன்றான கேதார்நாத் என்ற தலத்தை அனைவரும் அறிவர். இந்த கேதார்நாத் ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகவும், தேவாரதிருதலத்தில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த கேதார்நாத் கோவில்கள் ஐந்து உள்ளது என்பது தற்சமயம் சமூக வலைதளம் மூலமாக நாம் அறிகிறோம். உத்ராகாண்ட. மாநிலத்தில் அமைந்துள்ளன.

பஞ்சபாண்டவர்கள் கட்டியதேயிந்த ஐந்து கோவில்களும். பஞ்சபாண்டவர்கள் ஐவரும் சிவபெருமானை தேடி இமயமலைக்கு வந்தனர். இமயமலைமழுவதும் அவர் தரிசனத்திற்காக தேடி அலைந்து, ஐவரும் ஈசனின்  ஒரு அங்கத்தை மட்டும் கண்டு தரிசனம் செய்தனர். எங்கு  அவர்கள் தரிசனம் செய்தாகளோ அந்தயிடத்திலேயே அமைத்ததே இந்த ஐந்து திருத்தலங்கள். தலங்களின் பெயர்கள் அவர்கள் கண்ட ஈசனின் அங்கங்கள், மற்றும் கடல் மட்டத்திலிருந்து அந்த தலங்கள் அமைந்துள்ள உயரங்கள்

பஞ்சகேதார்.

1. கேதார்நாத் - (11755-அடி) சிவபெருமானின் முதுகு பகுதி.

2. மத்மகேஷ்வர் - (11450-அடி) சிவபெருமானின் வயிற்று பகுதி.

3. துங்கநாத் - (12073-அடி) சிவபெருமானின் கை மற்றும் தோள் 

4 .ருத்ரநாத் - (11800-அடி)  ஈஸ்வரனின் முகம்.

5. கல்பேஷ்வர் - (7217 –அடி) மகேஷ்வரனின் ஜடாமுடி.

இந்த ஐந்து தலங்களின் பெயர்களிலும் தனி தனியாக தரிசன வலைபதிவிட்டுள்ளேன். இமயமலையில் அமைந்துள்ள கார்திக்சுவாமி கோவில் (முருகன்) வலைபதிவும் உள்ளது.

பஞ்சகைலாயதலங்கள்.




கைலாஷ் மாணசரோவர் யாத்திரை ( ஈசனின்யிருப்பிடம் கைலாயமலை) நாம் அனைவரும் அறிந்ததே. இந்தயிடம் திபெத் நாட்டில் அமைந்துள்ளது. திபெத்நாடு தற்சமயம் சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் என்ற ஒரு மாநிலமாக சீனா நாட்டில் உள்ளது. மற்ற நான்கு கைலாயங்களும் நம் நாட்டிலேயே அமைந்துள்ளன. 

1.கைலாயம் மாணசரோவர் - சீனா

2. ஆதிசைலாயம் - உதரகாண்ட் மாநிலம்

3. ஸ்ரீகண்ட் மகாதேவ் - இமாச்சலபிரதேசம்

4. கின்னௌர் கைலாஷ் - இமாச்சலபிரதேசம்

5.மணிமகேஷ் கைலாஷ் - இமாச்சலபிரதேசம் 

ஆதிகைலாய யாத்திரை வலைபதிவு செய்துள்ளேன். 

ஹர ஹர மகாதேவா. 

தேவாரதிருத்தலங்கள்

தேவாரதிருத்தலங்கள் பார்பதற்கு முன் பன்னிருதிருமுறைகள் பற்றிய சிறுவிளக்கங்கள். பன்னிரு திருமுறைகள் என்பது சைவசமய பக்தி பாடல்கள் சிவபெருமான்மீதுயியற்றியது. 

பாடல்களின் பெயர்களும் எழுதியவர்களும்

1. திருஞானசம்பந்தர்  - திருக்கடைக்காப்பு

2. திருநாவுக்கரசர்          - தேவாரம்

3.   சுந்தரர்        - திருப்பாட்டு

4. மாணிக்கவாசகர்          - திருவாசகம்

5. திருச்சிற்றம்பலகோவை     - மாணிக்கவாசகர் 

6. திருவிசைப்பா            - திருமாளிகைதேவர், கருவூர்தேவர்

பூந்துருத்திநம்பி,  காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதலியார், புருஷோத்தமநம்பி, 

7. திருபல்லாண்டு           - சேந்தனார்

மேற்குறிப்பிட்ட பாடல்கள் வரை 1 முதல் 9 வரையுள்ள திருமுறைகள்

8. திருமந்திரம்             - திருமூலர்

திருமந்திரம் 10வது திருமுறை.

9. பிரபந்தம்  (11வது திருமுறை)   - காரைக்கால் அம்மையார், , ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான்பெருமாள் நாயனார், நக்கீரதேவநாயனார்,  கல்லாடதேவநாயனார், கபிலநாயனார், பரணதேவநாயனார், இளம்பெருமான் அடிகள், அதிராஅடிகள், பட்டிணத்துபிள்ளையார், நம்பியாண்டார்நம்பி. 

10. திருத்தொண்டர் புராணம்      - சேக்கிழார். 

(12வது திருமுறை)

இந்த பாடல்கள் ராஜராஜ சோழன் காலத்தில் சிதம்பரத்திலிருந்து எடுக்கப்பட்டு நம்பியாண்டார் நம்பிகள் முலம் தொகுக்கப்பட்டன.

நாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்மந்தர் இவர்கள் நேரடியாக பல திருத்தலங்களுக்கு சென்று சிவபெருமான் மீது பாடியுள்ள தலங்களே “தேவாரபாடல் பெற்ற தலங்கள்” என்றும், இந்த மூவரின் பாடல் தொகுப்புகளே “தேவாரபாடல்கள்” என்றும் தற்காலத்தில் அழைக்கப்படுகின்றன.  இவை மொத்தம் 276 சிவஸ்தலங்கள். 

தேவாரவைப்புத்தலம்

ஆலயத்திற்கு நேராக செல்லாமல்  குறிப்பாக ஒருதலத்தை மனதில் நிறுத்தி அத்தலஇறைவனை பாடும் தலங்களை வைப்புத்தலம் என்றுஅழைக்கன்றனர். ஆனால் இவ்வகையான தலங்கள் தேவாரத்திருத்தலங்களுடன் சேர்தவைதான்.

 உதாரணம் - ஸ்ரீலங்காவில் அமைந்துள்ள கோனேஸ்வரம், கேதீஸ்வரம். இந்த இரண்டு தேவாரதிருத்தலங்களும் ராவணன் பிரதிஷ்டை செய்த பஞ்சசிவஸ்தலங்களில் அடங்கும்

(இலங்கை சிவஸ்தலங்கள், முருகன்தலங்கள், விநாயகர் தலங்கள் புத்தமடாலயங்கள், மற்றும் சுற்றுலாதாலங்கள் என்ற தலைப்புகளில் என்னுடைய பயண வலைபதிவுள்ளது.) 

நவபுலியூர் தலங்கள்

வியாக்ரபாதகர் என்ற முனிவர் வழிபட்ட தலங்களே புலியூர்தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. (வியாக்ர – புலி) (பாதம்-கால்) தழிழில் புலிகால் சித்தர் என்று அழைக்கப்படுகிறார்.

அதிகாலையே மரங்களில் உள்ள பூக்களை பரித்து இறைவனுக்கு சமர்பணம் செய்ய வசதியாக புலிகால் வேண்டி பெற்றவர்.இவர் ஒன்பது சிவஸ்தலங்களை தரிசனம் செய்து, சிறுபுலியூர் என்ற என்ற திவ்யதேச பெருமனை வணங்கி முக்தி பெற்றார். (சிறுபுலியூர் வலைபதிவுள்ளது) ஒன்பது தலங்களின் திருபெயர்கள். இவருடன் பதஞச்லி முனிவரும் இறைவனை வழிபட்டு சென்றதாக அறியப்படுகிறது.

1. பெரும்பற்றப்புலியூர்

2. திருப்பாதிரிப்புலியுர்

3. எருக்கத்தம்புலியூர்

4. ஓமாம்புலியூர்

5. சிறுபுலியூர்

6. அத்திப்புலியூர்

7. தப்பளாம்புலியூர்

8. பெரும்புலியூர்

9. கானாட்டம்புலியூர் 

மாடக்கோவில்கள் (கோசெங்கோட் சோழன்)




மாடக்கோவில் என்பது மாடி போன்று இரண்டு மூன்று தளங்கள் கொண்டு கட்டுவது. முதல்மாடி இரண்டாவது மாடி என்று எட்டு மாடிகளை கொண்ட கோவில்கள் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப்பட்டன.

இந்தமாடக்கோவிலில், சிவன், பெருமாள், முருகன்., லெஷ்மி என்று அனைத்து தெய்வங்களுக்கும் கோவில்கள் உள்ளன. சைவ கோவில்களில் கோசெங்கோட் சோழன் கட்டிய சிவன்கோவிகள் பற்றி பார்கப்போகிறோம்.

நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இத்தகைய கோவில்கள் உள்ளன. சோழன் கட்டிய 70 கோவில்களில் தற்சமயம் 37 கோவில்களே எஞ்சியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்சமயம் இவ்வகையான கோவில்களை பாதுகாக்க பல ஆர்வலர்கள், மற்றும் பக்தர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். 

குறிப்புகள்.

நாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் 78 மாடக்கோவில்கள்யிருந்ததை பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார் அவரது பாசுரத்தில் “எழில் மாடம் எழுபது செய்து உலகாண்ட திருக்குலத்து வளச்சோழன்”  என்று பாடியுள்ளார்.

யானைபுகா கோவில் என்று மாடக்கோவில்கள் அழைப்பது ஏன்?

காவிரி சந்திர தீர்தத்தின் அருகில் ஒருநாவல்மரத்தடியில் இருந்த லிங்கத்தை ஒரு வெள்ளையானை தினமும் பூஜித்துவந்தது.  அந்தயிடம் திருஆனைக்கா என்று அழைக்கப்படலானது. இந்த அடர்ந்த காட்டில் மரசருகு லிங்கத்தின் மீது விழாமல்யிருக்க பக்திகொண்ட சிலந்தி ஒன்று அதன் எச்சில்வலையை கொண்டு தினமும் கூறை கட்டியது. இதுபிடிக்காமல் யானை அந்த சிலந்திவலையை தினமும் கலைத்தது, இதனால் கோபம் கொண்ட சிலந்தி யானையின் தும்பிக்கையில் புகுந்து குடைச்சல் கொடுத்தது. இதன் காரணமாக யானை அதனின் தும்பிக்கையை தரையில் ஓங்கி அடித்து இறந்தது. சிலந்தியும் இறந்தது. சிலந்தியே மறுபிறவியில் கோசெங்கோட்சோழனாக அவதரித்ததால் கட்டிய கோவில்களை, யானை செல்லமுடியாத மாடக்கோவிலாக கட்டினான் என்று  செவிவழிசெய்தியாக கூறுவர். இந்த செங்கோட்சோழன் சோழஅரசனாகவும், 63 நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்குகிறார். 

திருவிவைப்பா மற்றும் திருபல்லாண்டு தலம்.




இந்தயிரண்டும் ஒன்பதாம் திருமுறையில் வருகிறது. திருபல்லாண்டு என்பது சேந்தனார் அவர்கள் சிதம்பரத்தில் தேர் இழுக்கும் சமயம் பாடிய பாடல். நடராஜர,; மக்களுக்கு சேந்தனாரின் பக்தியை வெளிபடுத்தநினைத்து ஒரு திருவிளையாடல் செய்தார். மழையின் காரணமாக சிதம்பர தேரின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிகொண்டன. கடினமுயற்சி எடுத்தும், தேர்நகரவில்லை. இந்தநேரத்தில் சேந்தனார் பல்லாண்டு பாடி தேரை நகரசெய்தார் என்பதே இந்த திருவிளையாடல். நடந்த நேரம் ஆருத்ராதரிசனம்.

திருமாளிகைதேவர், கருவூர்தேவர்,பூந்துருத்தி நம்பி, காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதலியார், புருஷோத்தமநம்பி இவர்களின் பாடல் தொகுப்பே திருவிசைப்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் எழுதிய  ஈசன் தலங்களே திருவிசைப்பா தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.




எல்லாதலங்களையும் என்னால் அறியமுடியவில்லை. தஞ்ஜாவூர் பெரிய கோவிலும், கங்கைகொண்ட சோழபுர கோவிலும் திருவிசைப்பா தலங்களாகும்.

நாயன்மார் தலங்கள்

சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டு சிவனுக்கும், சிவனடியாகளுக்கும் தொண்டு செய்தவர்களே நாயன்மார்கள்.அவர்கள் பிறந்தயிடங்கள் மற்றும் முக்தியடைந்தயிடங்களே (தலங்களே) நாயன்மார் தலங்கள்.

1. திருநீலகண்டர் பிறப்பு – தில்லை முக்தி -தில்லைபுலீச்சரம்

2. இயற்பகையார் பிறப்பு – பல்லவனீச்சரம் - முக்தி – சாயாகாடு

3. ஆளையான்குடிமாறன் பிறப்பு - இளையான்குடி முக்தி – இளையான்குடி

4. மெய்பொருள் பிறப்பு – திருக்கோவலூர் முக்தி – திருக்கோவலூர் 

5. விறமிண்டர். புpறப்பு – செங்கண்ணூர் - முக்தி - ஆருர்

6. அமர்நீதி பிறப்பு – பழையாறை முக்தி திருநல்லூர்

7. எறிபத்தர் பிறப்பு - கரூர் முக்தி – கரூர்

8. ஏனரிநாதர் பிறப்பு - எய்தனூர் முக்தி – எய்தனூர்

9. கண்ணப்பர் பிறப்பு – உடுப்பூர் முக்தி – திருக்காளத்தி

10. குங்குலியகலயர் பிறப்பு – திருக்கடவூர் முக்தி – திருக்கடவூர்

11. மானக்கஞ்சாரர் - பிறப்பு – கஞ்சாறூர் முக்தி கஞ்சாறூர்

12.அறிவாள்தாயர் பிறப்பு - கண்டமங்கலம் முக்தி – தண்டலை.

13. ஆனாயர் பிறப்பு – திருமங்கலம் முக்தி – திருமங்கலம்.

14. மூர்த்தி பிறப்பு -  மதுரை முக்தி – மதுரை

15. முருகர் பிறப்பு – திருப்புகலூர் முக்தி – நல்லூர்பெருமணம்

16. உத்திரபசுபதி பிறப்பு – தலையூர் - முக்தி – தலையூர்

17. திருநாளைப்போவார் - பிறப்பு ஆதனூர் முக்தி – திருபுன்கூர்

18. திருக்குறிப்புத்தொண்டர் பிறக்கு – திருகச்சி முக்தி – திருக்கச்சி

19. சண்டி பிறப்பு – திருசேய்;ஞ்லூர் முக்தி – ஆப்பாடி

20. திருநாவுக்கரசர்  பிறப்ப – ஆமூர் முக்தி – திருப்புகலூர்

21. குலச்சிறை  பிறப்பு – மயமேற்குடி முக்தி – மதுரை

22. பெருமழலைக்குறும்பர் பிறப்பு – மிழலை முக்தி – ஆரூர்

23. பேயார்  பிறப்பு – காரைக்கால் முக்தி – கைலை.

24. அப்பூதி பிறப்பு – திங்களுர் முக்தி – திங்களுர் 

25. நீலநக்கர் பிறப்பு - சாத்தமங்கை முக்தி – நல்லூர்பெருமணம்

26. நமிநந்தி பிறப்பு – ஏமப்பேறூர் முக்தி - ஆரூர்

27. சம்மந்தர்காழி பிறப்பு -நல்லூர்பெருமணம் 

28. ஏயர்கோன் கலிகாமர் பிறப்ப – பெருமங்கலம் முக்தி – பெருமங்கலம்

29. திருமூலர் பிறப்பு – சாத்தனூர் முக்தி – பலயிடங்கள் சொல்லப்படுகின்றன.

30. தண்டி பிறப்பு – ஆருர் முக்தி – ஆருர்.

31. மூர்க்கர் பிறப்பு – வேற்காடு முக்தி – குடமூழக்கு

32. சோமாசிமாறர்  பிறப்பு – அம்பர் முக்தி – அம்பர்மாகாளம்

33.சாக்கியர் பிறப்பு – திருசக்கமங்கை முக்தி – திருசக்கமங்கை

34.சிறப்புலி பிறப்பு -  ஆக்கூர் முக்தி – ஆக்கூர்

35.சிறுத்தொண்டர்  பிறப்பு – திருசெங்காட்டங்குடி  முக்தி – திருச்செங்காட்டான்குடி

36. கழறிற்றறிவார்; பிறப்பு - கொடுங்கோளுர் முக்தி – பலதலங்கள் சொல்லப்படுகின்றன.

37. கணநாதர்  பிறப்பு – காழி முக்தி காழி

38. கூற்றுவர்  பிறப்பு - களப்பால் முக்தி – தில்லை

39. புகழ்சோழர் பிறப்பு – உறையூர் முக்தி - கரூர்

40. நரசிங்கமுனையரையர்  பிறப்பு -  திருநாவலூர், முக்தி – திருநாவலூர்

41. அதிபத்தர் பிறப்பு -  திருநாகை, முக்தி – திருநாகை

42. கலிக்கம்மர் பிறப்பு - பெண்ணாடகம் முக்தி - பெண்ணாடகம்

43. கலியர் பிறப்ப - ஒற்றியூர் முக்தி - ஒற்றியூர்

44. சத்தி பிறப்ப வரிஞ்சையூர் முக்தி – வரிஞ்சையூர்

45. ஐயடிகள்காடவர்கோன் பிறப்பு திருகச்சி முக்தி – பலதலங்கள் சொல்லப்படுகிறது.

46. கணம்புலர் பிறப்பு – பேளுர், முக்தி - தில்லைபுலிச்சரம்

47. காரி பிறப்பு - திருக்கடவூர் முக்தி - திருக்கடவூர்

48. நெடுமாறர் பிறப்பு – மதுரை முக்தி – மதுரை

49. வாயிலார் பிறப்பு –  திருமயிலை முக்தி - திருமயிலை 

50. முனையடுவார் பிறப்பு – நீடூர் முக்தி – நீடூர

51. கழர்சிங்கர்; பிறப்பு திருக்கச்சி முக்தி – பலதலங்கள் சொல்லப்படுகிறது.

52. இடங்கழி பிறப்பு -  கொடும்பாளுர், முக்தி – கொடும்பாளுர்

53. செருத்துணை பிறப்பு - கீழ்தஞ்சை முக்தி - ஆரூர்

54. புகழ்த்துணை பிறப்பு - அரிசிற்கரைப்புத்தூர்  முக்தி -  அரிசிற்கரைப்புத்தூர்

55. கோட்புலி  பிறப்பு - திருநாட்டியத்தான்குடி முக்தி - திருநாட்டியத்தான்குடி

56. பூசல் - பிறப்பு - திருநின்றவூர் முக்தி -திருநின்றவூர்

57. மானி பிறப்பு - பழையாறை முக்தி – மதுரை

58. நேசர் பிறப்பு - காம்பீலி முக்தி – அறியல்லை.

59. செங்கண்ணர் பிறப்பு -உறையூர் முக்தி – பலதலங்கள் சொல்லப்படுகிறது

60. திருநீலகண்டபானர் பிறப்பு - எருக்கத்தம்புலியூர் முக்திப ல தலங்கள் சொல்லப்படுகிறது.

61. சடையர் பிறப்பு - திருநாவலூர் முக்தி - திருநாவலூர்

62. இசைஞானி பிறப்ப - ஆரூர் முக்தி - திருநாவலூர்

63. ஆரூரர் பிறப்பு - திருநாவலூர் முக்தி - திவஞ்சிக்களம்

இவர்கள் பிறந்த தலங்களும் முக்தி பெற்ற தலங்களும். சிறப்படைகிறது. இதில் நாயன்மார்களில் சிலரின் முக்திதலங்கள் சரிவர அறியப்படவில்லை. நான் குறிப்பிட்டதிலும் சில மாற்றங்கள்யிருக்கலாம். நான் அறிந்ததை அடிப்படையாக கொண்டு தலங்களை குறிப்பிட்டுள்ளேன். 

மாகாளதலங்கள்

மூன்று தலங்கள் மகாகாளதலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1. மகாகாளம்.  (உஜ்ஜயின் மகாகாளேஸ்வர்)

2. அம்பர் மாகாளம் ( நன்னிலம் வட்டம் பேரளம் அருகில்)

3. இரும்பை மாகாளம் ( விழுப்புரம் மாவட்டம், புதுவை அருகில்)

4. இந்த மூன்று கோவில்களின் தரிசனத்தை இக்கோவில் பெயரில் வலைபதிவு செய்துள்ளேன். 

திரிலிங்க தேசம்

 காலேஷ்வரம் பீமேஸ்வரம், ஸ்ரீசைலம் என்று ஆந்திர மாநிலத்தில் உள்ள  மூன்று கோவில்களும் திரிலிங்க தேசம் என்று அழைக்கப்படுகிறது. ஆந்திரமாநிலம் முன்பு திரிலிங்க தேசம் என்று அழைக்கப்பட்டாக அறியப்படுகிறது.

நவநந்தி தலங்கள்.


நந்திகேஸ்வரரின் ஆவதார தலமான நந்தியால் என்றயிடத்தை சுற்றியுள்ள ஒன்பது தலங்கள் நவநந்தி தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மா, நாகம், கருடன், சூரியன், சந்திரன், இந்தரன், பஞ்சபாண்டவர்கள், மகாவிஷ்ணு, விநாயகர் இவர்களுக்கு சிவபெருமான் நந்திகேஸ்வரரருடன் சேர்ந்து அருள்புரிந்தயிடங்களே நவநந்தி தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆந்திரமாநிலத்தில் நந்தியால் என்றயிடத்தை சுற்றி சுமாராக 22 கி.மீ. தொலைவுக்குள் இந்த 9 தலங்களும் உள்ளன. நவநந்தி தரிசன வலைபதிவு வெளியிட்டுள்ளேன்.

பஞ்சலிங்கஷேத்ரங்கள்.

ஒரு கோவிலுக்கும் ஐந்து சிவலிங்க கர்பகிரகங்களை கொண்ட கோவில்கள் பஞ்சலிங்கஷேஸ்வரதலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள தலகாடடு என்றயிடத்திலுள்ள 1.அர்கேஸ்வரர் 2.பாதாளேஸ்வரர், 3.மரனேஸ்வரர், 4.மல்லிகார்சுளேஸ்வரர், 5.வைத்யநாதேஸ்வரர் பஞ்சலி;ங்கேஸ்வர தலம் என்று குறிப்பிடுகின்றனர்.

2. கர்நாடகா மாநிலம் பொம்மனஹல்லி என்றயிடத்திற்கருகில், பேகூர் என்றயிடத்தில்

1.நாகேஷ்வரா 2.காளிகடமேஷ்வரா 3.சோளேஷ்வரா 4.நகரேஷ்வரா 5.காரணேஸ்வரா என்று ஐந்து சன்னதிகளை கொண்ட கோவில் உள்ளது. பஞ்சலிங்கேஷ்வரா (எ)  நாகேஷ்வரா என்ற தலைபில் என்னுடைய தரிசன வலைபதிவுள்ளது.

பரசுராமர் உருவாக்கிய 108 சிவாலயங்கள்




நான் அறிந்தது.

ஜூன்மாதம் கேரளாவில் கொட்டியுர்ூமாகாதேவர் தரிசனத்திற்கு சென்றபோது, நாங்கள் வேறுசில கோவில்களையும் தரிசனம் செய்தோம், அந்ததசமயம் தளிபரம்பா ராஜேஸ்வரா கோவிலுக்கு சென்ற சமயம்தான் தெரிந்தது, பரசுராமர் கட்டிய 108 சிவாலயங்களில் ஒன்று என்று. இந்தசமயம் அறிந்ததே இந்த 108 சிவாலயங்கள். அதில் 10க்குமேற்பட்ட கோவில்களை நாங்கள தரிசனம் செய்திருப்போம். மற்றகோவில்கல்கள் தரிசனத்திறக்கு இறைவனிம் மனுகொடுத்துள்ளேன்.

பரசுராமர் கோவில் உருவாக்கிய வரலாறு

மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர். ஜமதக்னி மற்றும் ரேணுகாவின் இளயமகன்யிவர். கர்த்தாவரியா  அர்ஜூனன் மற்றும்  பிற சத்திரியர்களை கொன்ற பிறகு, பிராமணர்களுக்கு நன்கொடையாக கொடுக்க கோடரியை கொண்டு கடலிலிருந்து கேரளா பகுதியை மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அவர்மீட்ட நிலத்தை 64 கிராமங்களாக பிரித்தார். 32 கிராமங்கள் பெரும்புழா மற்றும் கோகர்ணாவுக்கு இடைபட்டவை. இங்கு துளுவமொழி பேசப்பட்டது. மீதமுள்ளயிடங்கள் 32 கிராமங்கள் பெரும்புழா மற்றும் கன்யாகுமரிக்குயிடைபட்ட கிராமங்களாக யிருந்தன. இங்கு மலையாள மொழி பேசப்பட்டது. இந்த 64 கிராமங்களில் வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்ட லிங்கங்களை கொண்டு 108 சிவாலயங்கள் உருவாக்கப்பட்டன. தற்கால நமது நாட்டின் மாநிலபிரிவின் படி 105 கோவில்கள் கேரளாவிலும், 2 கோவில்கள் கர்நாடகாவிலும், 1 கோவில் தழிழ்நாட்டிலும் அமைந்துள்ளன.

பல்லுயிர்கள் வழிபட்ட தலங்கள்




சிவபெருமனை மனிதர்கள் மட்டுமல்லாது பிறஉயிரிணங்களான விலங்கு,  பறவை மற்றும் பாம்பு என்று பல உயிர்களும் வணங்கிமுக்தியடைந்தது என்று நம் புராணங்கள் கூறுகிறது. அப்படிபட்ட தலங்களை பார்போம். 

1. குரங்கணில்முட்டம் - குரங்கு, அணில், முட்டம் என்றால் காகம் குரங்கு, அணில், மற்றும் காகம் சிவனை வழிபட்டதால் இத்தலபெயரே குரங்ணில்முட்டம். (தரிசனவலைபதிவிட்டுள்ளேன்.)

2. திருக்கச்சூர் - ஆமை (தரிசனவலைபதிவிட்டுள்ளேன்.)

3. திருஈங்கோய்மலை - ஈ

4. திவெறம்பூர் - எறும்பு (தரிசனவலைபதிவிட்டுள்ளேன்.)

5. திருச்சிறுகுடி -கருடன்

6. திருகழுக்குன்றம் -கழுகு

7. திருவலிவலம் - கருங்குருவி

8. திருவாணைக்கா – சிலந்தி

9. திருக்குரக்காவல் - குரங்கு

10. திருமறைக்காடு எலி

11. நன்னிலம் - தேனி (தரிசனவலைபதிவிட்டுள்ளேன்.)

12. திருநல்லூர் -வண்டு 

13. ஆவூர் - பசு

14. திருசிவபுரம் - பன்றி

15. திருநாறையூர் - நாரை

16. திருச்சிராப்பள்ளி ஜடாயு

17. திருபாம்புரம் - பாம்பு

18. திருதேவன்குடி – நண்டு

19. திருப்பாதிரிபுலியூர் முயல்

20. மயிலாடுதுறை – மயில்.

21. பெண்ணாடம் - வெள்ளையானை

22. திருகாளஹஸ்தி – கருப்புயானை

23. திருபனந்தாள் - ஜாம்பவான்

24. தில்லைஸ்தானம் - காமதேனு

25. மேல்பாதி – பூனை

26. ஆத்தூர் தவளை

27. தேவராயன்பேட்டை – மீன்

28. தேபெருமாநல்லூர் - நாகம்

29. திருமாளம் - வாசுகிபாம்பு 


அமர்நாத் என்ற பனிலிங்க கோவில்

ஒரு ஆண்டுக்கு 45 நாட்கள் மட்டுமே தரிசனம். ஜம்மு மாநிலத்தில் அமைந்துள்ளது. பனிகட்டி சிவன், பார்வதி மற்றும் விநாயகர் என்று மூன்று மூர்திகளும் பனியில் உருவாகி மறைகின்றனர். அமர்நாத் தரிசனவலைபதிவு செய்துள்ளேன்.

மேற்கூறிப்பிட்ட அனைத்து சிவதலங்களும் 99 சதவிகிதம் தேவாரபாடல்பற்ற தலங்களில் அடங்கிவிடும். நாங்கள் பல தலங்களை தரிசனம் செய்யவும், தலங்களின் சிறப்பை அறியவும் இவ்வாறு பலபகுதிகளாக பிரித்து தரிசனத்தை சிறப்பு செய்யவும், ஆர்வத்தை தொடரவும் நான் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன்.

1000 ஆண்டுகள் பழமையான கோவில்களையும் தரிசனம் செய்ய துவங்கியுள்ளோம்.


3 comments:

  1. Hello i have gone through the blog very very informative & impressing . you have to publish it then only useful for many people.with Best wishes & Regards

    ReplyDelete
  2. Hello I enjoyed your research & information about all the details, you must publish it & i must get the copy with best wishes & continue your research you ,All mIghty must Bless you & your husband All the best

    ReplyDelete

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...