மைலாப்பூர் பெருமாள் கோவில்கள்.

 மைலாப்பூர் பெருமாள் கோவில்கள். (தரிசனநாள்-25.12.2023).

மாதவப்பெருமாள் கோவில்.





ஆதிகாலத்தில் மைலாப்பூர் மயூரபுரி என்று  அழைக்கப்பட்டது. பிரம்மாண்ட புராணம் மற்றும் மயூரபுராணத்தில், 5 பகுதிகளில் (இடங்களில்) இந்த கோவில் பற்றிய சிறப்பு கூறப்பட்டுள்ளது. 

காசியப்ப முனிவர் உட்பட பல முனிவர்கள், கலிதோஷம் நீங்க, வேண்டுதல் செய்ய, இடத்தை பரிந்துரைக்குமாறு ஸ்ரீமன்நாராயணனை வேண்டினர். அதற்கு நாராயணன் மயூரபுரி என்ற இடத்தில் உள்ள புஷ்கரணிக்கு அருகில் அமைந்துள்ள, ப்ருகு முனிவர் ஆசிரமத்தை பரிந்துரை செய்தார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமிர்தவல்லி தாயார் பிருகு முனிவருக்கு மகளாக இந்த இடத்தில் வளர்ந்துவந்த சமயத்தில், ஸ்ரீமன் நாராயணர் மாதவ மூர்த்தியாக வந்து, இந்த தலத்தில் தாயாரை காண்கிறார். பிருகு முனிவர் மாதவ பெருமாளை ஆதரித்து அமிர்தவல்லியை மணக்க வேண்டுகிறார். பங்குனி உத்திரத்திரத்தன்று மணமுடித்து கல்யாணபெருமாளாக காட்சி தருகிறார், மாதவபெருமாள். இந்த மயூரபுரி, பேயாழ்வார் அவதாரதலம் என்றும் இந்த இரண்டு மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆயுதங்களில் ஒன்றான “நந்தகம்” மே பேயாழ்வாரின் அம்சம் என்றும், “குருபரம்பராப்ரபாவம்” என்ற நூல், இந்த கோவில் கிணற்றில் தான் பேயாழ்வார் அவதரித்தார் என்று தெரிவிக்கிறது. இந்த நூலில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. தாயாரின் சன்னதியில் பேயாழ்வாரின் புடைப்பு சிற்பங்கள் அமைந்துள்ளன.

ஆதிகேசவபெருமாள் கோவில். 





இத்தல தாயார் மயூரவல்லி, 5நிலை ராஜகோபுரத்துடன், உள்ள இந்தகோவிலில்,   பெருமாள் நின்ற திருமேனியுடன், அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு மிக அருகிலேயே இரண்டு பெருமாள் கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் (நான்கு கோவில்களும்) பாலாலயம் செய்யப்பட்டிருந்தது. கேசவ பெருமாள் கோவிலுக்கும் மாதவ பெருமாள் கோவிலுக்கும் குறைந்தது 1 கி;மீ; தொலைவுவிருக்கும். இந்த இரண்டு கோவில்களின் புராணங்கள், ஒன்றுக்ஒன்று,அதிக தொடர்புடையதாக உள்ளன.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...