திருகோகர்ணம். ( Gokarna)

 திருகோகர்ணம். ( Gokarna) (தரிசனநாள்-21.1.2024)

அமைவிடம்.







கர்நாடகா மாநிலம்  உத்ரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தலம் கோகர்னா என்று அழைக்கப்படுகிறது. பெங்களுர் மற்றும்  மங்களுரில் இருந்து பேருந்து மற்றும் புகைவண்டி மூலம் பயணிக்கலாம். Hubballiயில் இருந்து பேருந்து வசதியுள்ளது.

புராணகதை.

ஆத்மலிங்கத்தை (பிராணலிங்கம் (அ) அமிர்தலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது) ராவணனின் தாயார் இலங்கைமாநகர் நலன் வேண்டி பூஜித்துவந்தார். இதனால் பொறாமையடைந்த இந்திரன் இந்த லிங்கத்தை கடலில் வீசினான். இதன்காரணமாக அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு சிவனை பூஜிகலானார். தாயார் வருத்திகொண்டதை கான இயலாத மகன் ராவணன் கைலைக்கு சென்று கடும் தவம் (சிவதாண்டவம் ஸ்லோகம்) செய்து சிவனை உமையுடன் தரிசித்து, பிராணலிங்கத்தை பெற்றுக்கொண்டான். இதை இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொள்கையில்,  லிங்கத்தை இலங்கை கொண்டுசெல்லும் சமயம், அமிர்தலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும் என்றும், பூமியில் வைக்க கூடாது, அப்படி வைக்க நேரிட்டால், மீண்டும் எடுக்க முடியாது என்று ஈசன் கூறுகிறார். ராவணனின் அழிவில்லா அரசால், தீமை ஏற்படுமென்று தேவர்கள் விநாயகரை வேண்டி லிங்கபிரதிஷ்டையை தடுக்க வேண்டுகின்றனர். 

விநாயகர் ராவணனின் மடியில் நீர் சுரக்கசெய்து, மாடு மேய்க்கும் சிறுவனாக அவன் முன் தோன்றுகின்றார்.  ராவணன் இயற்கை உபாதை தாங்க முடியாமல், மாடு மேய்க்கும் சிறுவனை அணுகி சன்று நேரம் இந்த லிங்கத்தை வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார். ராவணன் வர காலதாமதம் ஏற்படுவதாலும், மாடுமேய்க்கும் சிறுவனால் அதிக நேரம் பளு தூக்கமுடியாமையாலும் கீழே  வைத்து விடுகிறான், மாடுமேய்க்கும் சிறுவனாக வந்த விநாயகர். இதை கண்ட ராவணனுக்கு கோபம் ஏற்பட மாடு மேய்க்கும் சிறுவனை விரட்டி சென்று இருதியாக ஒரு பசுமாட்டை கையில் பிடிக்கிறான் ராவணன், அது பூமிக்குள் புதைந்து, ராவணனின் கையில் காதுமட்டுமே பிடிபடுகிறது. இதன்காரணமாக இந்த இடம் கோகர்ணா என்ற பெயர் பெற்றது. (கோ என்றால் பசு- கர்ணம் என்றால் -காது) .

கோவில் சிறப்பு.


1. சிவலிங்கம், ஒரு கொட்டை பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியுள்ளது.

2.இத்தல வழக்கப்படி தொட்டு,  (மனதில் உணர்ந்து) நீராட்டி அனைவரும் மலர் சூட்டலாம்.

3.உள்ளங்கை அளவு உள்ள பள்ளத்தின் நடுவில், கொட்டைபாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் உள்ளது. 

4. 276 திருமுறைபாடல் (தேவாரப்பாடல்) பெற்ற திருதலத்தில் துளுவதேசத்தில் அமைந்துள்ள ஒரே தலம்.

5. நாவுக்கரசர்,  ஞானசம்மந்தரால் பாடப்பொற்ற தலம்.

6. அப்பர் அருளிய “அங்கமாலையில்” இந்த கோகர்ணகோவிலை சுற்றாத கால்களால் பயனென் என்று குறிப்பிடுகிறார்.

வரலாற்று குறிப்பு. 

கி.பி.345 முதல் 365 வரை ஆட்சி செய்யத மயூரசர்மா என்ற அரசர் இந்த கோவிலின் முதல் கட்டுமானம் செய்தார்.

4ஆம் நூற்றாண்டில் காளிதாசர் எழுதிய “ரகுவம்சம்”; என்ற நூலில் இந்த கோவில் பற்றிய குறிப்புள்ளது.

7ஆம் நூற்றாண்டில் அப்பர் மற்றும் சம்மந்தரால் இந்த தலம் பாடப்பட்டுள்ளது.

1336 முதல் 1646 வரை விஜயநகரபேரரசால், கட்டுமானம் வளர்ச்சியுற்றது.

17ஆம் நூற்றாண்டில் சிவாஜி கோகரணத்தில், இராணுவத்தை கலைத்து, மகாபலேஷ்வரை வழிபாடு செய்யதார். 

1676ல் பிரையர் என்ற ஆங்கிலேயர், கோகர்ணநாதரைபற்றிய ஆன்மீக கட்டுரை ஒன்று எழுதினார்.

சமகால தலங்கள். (பஞ்ச ஈஸ்வரஸ்தலங்கள்)

1.கோகர்ணா  2. முருடேஷ்வர்  3. குணவந்தேஷ்வர் 4. தாரேஷ்வர் 5. ஷெஜ்ஜேஷ்வர் என்ற இந்த ஐந்து தலங்களும் சமகால தலங்களாகவும் கோகர்ணா ஆத்மலிங்கத்தின் பகுதிகளாகவும் கருதப்படுகிறது.

முருடேஷ்வர். 








கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஸ்வரதலம். மிகவும்; பழமைவாய்ந்த இந்த சிவஸ்தலம் தற்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. ஆத்மலிங்கத்தின் அங்கமாக திகழும் இந்த ஆலயம் 2008-ல் கட்டப்பட்ட 20 நிலை கோபுரத்தாலும் மிக உயரமான சிவன் சிலையாலும் படகு சவாரி மற்றும் கடற்கரை சூழலாலும் தற்சமயம் சிறந்த சுற்றுலாதலமாக விளங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்துள்ளது.


குணவந்தேஷ்வர்



ஆத்மலிங்கத்தின் அங்கமான மற்றொரு சிவாலயம். தற்பொழுது கட்டுமானப்பணி நடந்துவருகிறது. சிவனையும்  நந்திகேஸ்வரரையுமே தரிசனம் செய்ய முடிந்தது. அம்மன் சிலை எங்குள்ளது என்பதே தெரியவில்லை. தைமாதம் அம்பிகை தரிசனம் கிடைக்காதது எனக்கு வருத்தமளித்தது. கோவில் குளம் மிக ரம்யமாக இருந்தது. கானொளி பதிவிடுகிறேன்.


ஷெஜ்ஜேஸ்வர்

ஆத்மலிங்கத்தின் அங்மான மற்றொரு சிவன்கோவில். 3மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். புகழ்வாய்ந்த சுற்றுலா இடமான   Goa அருகில் உள்ளது. 130கி.மீ க்கு குறைவாகதான் உள்ளது. இந்த ஸ்தலதரிசனம் எங்கள் அட்டவணையில் இல்லை. யாத்திரை ஒருங்கினைப்பாளர் மூலம் அறிந்த ஒரு புண்ணிய பூமி. இத்தல தரிசனம் கிடைக்க  சிவபெருமானை இறைஞ்சுகிறேன்.

தாரேஷ்வர்

ஆத்மலிங்கத்தின் மற்றொரு அங்க சிவாலயம். அட்டவனையில் இருந்தும் எங்களால் தரிசிக்கமுடியாமல் போன ஷேத்ரம்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...