கத்ரி மஞ்சுநாதர் (தரிசனநாள் 20.1.2024)
அமைவிடம்.
கர்நாடகா மாநிலம், மங்களுர் மாவட்டம், ஊர் பெயர்-கத்ரி.
வரலாறு
பரசுராமருக்கு ஷத்ரியர்கள் மேல் ஏற்பட்ட கோபம் காரணமாக, கண்ணில் தென்பட்ட ஷத்ரியர்களை கொன்று குவித்தார். பாவம் தீர சிவனை வணங்கிய நேரத்தில் சிவபெருமான் நானே மஞ்சுநாதராக கத்ரியில் வீற்றிருக்கிறேன். அதனால் கத்ரி சென்று தவம் செய்யுமாறு பணித்தார். இன்றளவும் பரசுராமர் கத்ரி தலத்தில் தவம் மேற்கொள்கிறார் என்ற நம்பிக்கையுள்ளது.
கோவில் சிறப்பு
மூவலர் திருவுருவம் உலோகத்தினாலானது. தென்னிந்திய ஆலயத்தில் உலோக மூர்த்தி கொண்ட மிகவும் பழமையான ஆலையமாகும். அபிஷேக நீரானது விக்ரகத்தின் மேல் தேங்காமல் வழிந்தோடும் தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. நீர்தேக்க தொட்டியாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. நீர்ருற்றும் உள்ளது, இந்த நீரை கொண்டு பக்கதர்கள் அருகில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மலை உச்சியில் பாண்டவர் குகை உள்ளது. பிரமீடு அமைப்புடன் மேற்கூறை அமைக்கப்பட்டடுள்ளது.
வரலாற்று சிறப்பு.
பத்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த கோவில், 14ஆம் நூற்றாண்டில் கருங்கல் கோவிலாக அமைக்கப்பட்டது. கி.பி. 968 ஆம் ஆண்டு குந்தவர்மபூபேந்திரன் என்ற மன்னனால் பஞ்சஉலோகத்தினால் ஆன திரிலோகேஷ்வர் விக்ரகம் உருவாக்கப்பட்டது. வாழைவனமாக விளங்கியதால் இந்த இடம் கதலி என்று அழைக்கப்பட்டு, தற்பொழுது கத்ரி என்று அழைக்கப்படுகிறது. விஜயநகரபேரரசர் காலத்தில் இந்த தலம் கதலி என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இக்கோவிலில் உயரமான தீபஸ்தம்பம் உள்ளது. லட்சதீபோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment