ஒன்டிமட்டி ( Ontimatti) கோதண்டராமஸ்வாமி கோவில்

 ஒன்டிமட்டிகோதண்டராமஸ்வாமி கோவில். (தரிசனநாள்-3.12.2023)





c








ஆந்தர மாநிலம் கடப்பா மாவட்டததில், 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரபேரரசால் கட்டப்பட்ட கோவிலாகும். 3 வாயில்களையும், 5நிலை ராஜ கோபுரத்தையும் கொண்டது இந்த ராமர் கோவில். அன்னமாச்சாரியார்,  இந்த ராமரை வணங்கி கீர்தனைகள் (பாடல்கள்) எழுதியுள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறது.


ஆந்ரா மாநிலத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா என்ற மாநிலம் பிரிந்த பின்பு, ஸ்ரீராமநவமி விழா இந்த கோவிலிலும், மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பு "பத்ராஜ்சலம்" ராமர் கோவிலில் ராமநவமி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணயதேவராயரின் லெஷ்மிநரசிம்மர் கோவில். (தரிசனநாள்2.12.2023)







அகோபிலத்தில் நாங்கள் கிருஷ்ணதேவராயர் சத்திரத்தில் தங்கி இருந்தோம். சத்திரத்திற்கு எதிரே 500 மீ. தூரத்தில் ஒருபெரிய பழமையான லெஷ்மிநரசிம்மர் கோவில் இருந்தது.  ஆந்தரபிரதேசத்தில், பல கோயில்கள் விஜயநகரபேரரசு காலதில் கட்டப்பட்டன. நல்ல நீண்ட, அகலமான சன்னதி தெருவில், 4 நிலை கோபுரத்துடன் அமைந்த கோவில். பெரிய மதில் சுவரை கொண்ட முதல் பிரகாரத்தில் பல மரங்களும், கோசாலையும், பெரியளவில் கலை நிகழ்ச்சிக்கான மேடையும் உள்ளது. உட்பிராகாரத்தில் ஸ்ரீநிவாசர் சன்னதி, ஆண்டாள் சன்னதி என்று சிறிய சன்னதிகள் உள்ளனர். மூலவர் லெஷ்மி நரசிம்மர், அதை தொடர்ந்து லெஷ்மிக்கு தனி சன்னதியுள்ளது. கோவிலுக்கு வெளியே பாஷ்ய சன்னதியுள்ளது.





No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...