மிச்ஜாங் புயல் (4.12.2023)
டிசம்பர் மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதி அகோபில தரிசனம் என்று முடிவு செய்து பயணத்தை முன் பதிவு செய்துவிட்டோம். புயல் பற்றிய செய்தியை கேட்டாலும், மனதில் புயல் பற்றிய எண்ணம் ஏற்பட்டாலும், நான் உடனே எங்கள் குலதெயவமான வெங்கடேசபெருமாளிடம் தடையில்லாத தரிசனம் கிடைக்க பிராததித்துக்கொள்வேன்.
டிசம்பர் 1 ஆம் தேதி 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து கடப்பாவுக்கு ரயில், கிளம்பி கொண்டிருக்கும் சமயம், சக பயணியர் 15 நபர்கள் அவர்கள் பயணத்தை ரத்து செய்வதாக வாட்சப் பயண குழுவில் பதிவிட்டவுடன் நான் அதிர்ந்தேன்.
பரகாலயாத்திரை அலுவலகம் , எக்காரணம் கொண்டும் பயணம் நிறுத்தபட மாட்டாது, என்று உடனே பதிவிட்டனர். இறைவனுக்கு நன்றி செலுத்தி பயணத்தை தொடர்ந்தோம்.
ரேனிகுண்டாவில் பயணிகள் பலர் திருப்பதி தரிசனம் முடித்து புகைவண்டியில் ஏறிய உடன் திருப்பதியில் மழை தொடங்கிவிட்டது என்று கூறிய செய்தியை கேட்டவுடன், “ஓம் நமோநாராயனா” என்று என்னையறியமால் மனது வழிபட துவங்கியது.
கடப்பாவில் இருந்து இரண்டு மணி நேரம் பயணித்து அகோபிலம் சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து கைபேசியை திறந்தால், வந்த முதல் செய்தி, “திருப்பதியில் கனமழை பக்தரிகள் தவிப்பு” என்பதுதான். “இறைவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான்” என்ற ரஜனி பட வசன நினைவுடனும், மறுநாள் நரசிம்மர் தரிசன நினைவுடனும், தூங்கச்சென்றேன்.
ஒன்பது நரசிம்மர்களில் அனுகிரகத்தால் நல்ல தரிசனம் கிடைத்து ஒன்டிமட்டா ராமர் தரிசனத்திற்காக கிளன்பினோம். வழிஎங்கும் மழைபெய்திருந்தது. ஆனால் நாங்கள் இருந்த 3 மணிநேரமும் ஒன்டிமட்டியில் மழை இல்லை, ராமரின் அனுகிரகத்தாலும் நல்ல தரிசனம் கிடைத்து கடப்பா ரயில் நிலையம் சென்றோம்.
4ஆம் தேதி, காலை 7 மணிக்கு வரவேண்டிய ரயில் மழைகாரணமாக 8 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில்லிருந்து, 6 கி;.மீ. தொலைவில்உள்ள எங்கள் வீட்டிற்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். காலை சிற்றுண்டி கிடைக்காமல், மதியம் கிழக்கு தாம்பரத்தில் உணவருந்தி, 7 மணி நேரத்திற்குமேல் ஈரத்துடன் தண்ணீரில் அதிக நேரம் நின்று சற்று சிரமத்தற்க்கு உள்ளானாலும், எந்த வித பக்கவிளைவுகள் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பது நரசிம்மரின் அருளே. ஜெய் நரசிம்மா!!!
No comments:
Post a Comment