தென்திருப்பேரை (மகரநெடுங்குழைக்காதர்). 12.7.2023
திவ்யதேசங்களில் ஒன்று, நவதிருப்பதிகளில் 7வது ஸ்தலம், நவகிரகங்களில் சுக்ரன் ஸ்தலம்.
மகரநெடுங்குழைநாதர், நிகரில் முகில் வண்ணன். திருப்பேரை நாச்சியார், குழைக்காது நாச்சியார். என்ற பெயர்களில் நமக்கு அருள்பாலிக்கின்றனர். தேவியர் இருவரும், பிருகு முனிவர் மற்றும் மார்கண்டேயர் இவர்களும் பெருமாளுக்கு இருமருங்கிலும் உள்ளனர்.
கருடன் சன்னதி.
வேதசப்தம், விழாக்கள், குழந்தைகளின் விளையாட்டு இவற்றை நம்பெருமான் கண்டுகளிப்தற்காக கருடன் சற்று விலகியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
ஸ்தலபுராணம்.
பூமாதேவியடமே பார்கடல் வாசன் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாக மிக மனம் வருந்தி துர்வாச முனிவரிடம் தன் மன வேதனையை பகிர்கிறார் ஸ்ரீதேவி தாயார். இதை தெரிவிக்க வைகுண்ட வாசனிடம் சென்ற போது, பூதேவி நாச்சியார் துர்வாச முனிவரை மதியாத காரணத்தால முனிவர் சாபமிடுகிறார். இந்த தல பெருமானை வழிபட்டு, தாமிரபரணியாற்றில் நீராடி, பங்குனிஉத்திரம் அன்று தாமிரபரணியாற்றில் கிடைத்த மீன்வடிவ பொன் குண்டலத்தை பெருமாளுக்கு அணிவித்து சாபவிமோசனம் பெற்றார் என்பது இத்தல வரலாறு.
நீர்முகில் வண்ணன்.
வருணன் சாபம் நீங்கிய இடம், நீர் தட்டுப்பாட்டை தீர்கவல்ல தெய்வம். இதன் காரணமாக நீர்முகில் வண்ணன் என்ற பெயரும் பெருமானுக்கு வந்தது.
No comments:
Post a Comment