திருக்கோளுர். (ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்) (திவ்யதேசங்களில் ஒன்று, நவதிருப்பதிகளில் செவ்வாய் ஸ்தலம்).12.7.2023.
ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் சயனகோலம், இடதுகையை பார்த்தப்படி சயனித்திருப்பார். நாம் கையில் Calculator வைத்து பார்ப்பது போல், உள்ளங்கையில் கணக்கு வைத்து பார்கிறார். ஸ்ரீகுமுதவள்ளி தாயார், ஸ்ரீகோளுர்வள்ளி தாயார்.
மதுரகவியாழ்வார்.
மதுரகவியாழ்வார் அவதாரத்தலம். இவர் நம்மாழ்வாருக்கு முன் அவதரித்தவர். நம்மாழ்வாரை குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலத்திற்குப்பிறகும் வாழ்ந்தவர். பெருமானை போற்றிப்பாடாமல் ஆச்சாரியரான நம்மாழ்வாரை போற்றி பாசுரங்கள் எழுதியுள்ளார். மதுரமாக (இனிமையாக) பாசுரங்கள் பாடியமையால் இப்பெயர் பெற்றார்.
புராணக்கதை.
குபேரன் பார்வதிதேவியை தவறாக பார்த்தகாரணத்தால், தேவியின் சாபத்தை பெற்றான். குபேரனின் சம்பத்து (சொத்து)அனைத்தும் பறிபோயிற்று. நிதி, பெருமானிடம் சென்றமையால், வைத்தமாநிதிப் பொருமாள் என்ற பெயர் பெற்றார்.
திருக்கோளுர் பெண்பிள்ளை ரகசியம்
ராமானுஜர் இந்த ஸ்தலத்திற்கு வந்திருந்தபோது ஒரு பெண் இந்த ஊரை விட்டு குடி பெயருகிறார். ராமானுஜர் இதை பார்த்துவிட்டு, காரணம் கேட்கையில் தனக்கு இவ்வூரில் வாழத்தகுதியற்றவள் என்று கூறுகிறார். ராமானுஜர் காரணம் கேட்கையில் 81 காரணங்கள் கூறுகிறார்.
இந்த 81 வாக்கியங்களே பெண்பிள்ளை ரகசியம்.
உதாரணம்.
"அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியை போல."
"அவன் மேனியாளேனோ திருப்பானரை போல"
என்பவை போன்ற 81 வாக்கியங்கள்.
(குறிப்பு—ராமாயணம், மகாபாரதம், பாகவதம் தசாவதாரம்,…. போன்ற வைகளை நன்கு படித்தவர்கள் மட்டுமே இந்த 81 சொற்றொடர்களை அறிந்து (புரிந்து) கொள்ளமுடியும். )
இந்த வாக்கியங்களை ராமானுஜர், பெருமானை பற்றிய இவ்வளவு செய்தகளை அறிந்து கொண்ட பெண்னே, நீயே இந்த ஊரில் வாழ தகுதியுடைவர். என்று, பாராட்டி இவர் கையால் உணவருந்துகிறார்.
No comments:
Post a Comment