ஒத்தாண்டேஸ்வரர் - திருமழிசை. (18.6.2023)
திருவள்ளுர் மாவட்டத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. திருமழிசை, பிரதான சாலையிலேயே உள்ள இந்த கோவில், 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஸ்ரீசீதளாம்பிகா சமேத மனோனுகூலேஸ்வர் என்ற பெயரிலும் ஈசன் அருள்பாலிக்கிறார்.
வரலாறு.
சோழ கரிகால பெருவளத்தான் என்ற மன்னன் அவ்வழியாக செல்லும் போது யானையின் கால் புதருக்குள் சிக்கியது. வாளால் புதரை வெட்டும் போது ரத்தம் பீறிட்டது, கொடியை விலக்கிவிட்டு பார்க்கும் போது சிவலிங்கம் காணப்பட்டது. இறைவனுக்கு பாவம் இழைத்துவிட்டோம் என்று அரசன் வருந்தி தனது வலக்கையை வெட்டிக் கொண்டான். ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் காட்சி கொடுத்து, மீண்டும் கை கொடுத்தார் என்பது வரலாறு. இதனால் “கைதந்தபிரான்” என்றும் அழைக்கப்படுகிறார்.
சிறப்பு.
மூலஸ்தானம் லிங்கத்திற்க்கு பின் பகுதியில் ஈசனும் அம்பிகையும் திருமணகோலத்தில் காட்சியளிக்கின்றனர்.
நடராஜரும் அம்பாளும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் உள்ளனர்.
என்னுடைய பார்வை.
திருமழிசையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமுல்லைவாசல், மாசிலாமணீஸ்வரர் வரலாறுடன், இந்த ஒத்தாண்டேஸ்வரர் வரலாறு, ஒத்து இருக்கிறது.
No comments:
Post a Comment