ஸ்ரீவைகுண்டம். (திவ்யஷேத்ரம், நவதிருப்பதிகளுள் ஒன்று),

 ஸ்ரீவைகுண்டம். (திவ்யஷேத்ரம், நவதிருப்பதிகளுள் ஒன்று), (தரிசனநாள்-12.7.2023).


அமைவிடம்.

திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

வரலாறு.


கோமுகாசுரன்  படைப்பின் ரகசியத்தை பிரம்மாவிடம் இருந்து அபகரித்துவிடுகிறான். பூலோகத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீவைகுண்ட பெருமாளை வணங்கி, தவம் இருந்து மீண்டும் பிறப்பின் ரகசியங்களை பெறுகிறார் பிரும்மா என்பது இத்தல வரலாறு. 

மற்றொரு வரலாறு.


காலாதூஷகன் என்ற கள்வன், பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருக்கிறான். நாட்டு அரசனிடமே இந்த கள்வன் கொள்ளை அடித்து, பிடி படும் நேரத்தில் பெருமாளிடம் சரண்அடைகிறான். அரசன் கோவிலில் திருடன் இருப்பதை அறிந்து, அங்கு செல்கிறான். ஸ்ரீவைகுண்டநாதர் அரசனுக்கு தர்மத்தை எடுத்து கூறி பொருளை ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் பொருள் உதவுதலையும் போதிக்கிறார், என்கிறது மற்றொரு வரலாறு. 

“புளியங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து, ஸ்ரீவைகுண்டம் நின்றார், காணக்கண்கோடி வேண்டும் கள்ளர்பிரான் சோரநாதரை”- நம்மாழ்வார் பாசுரம்.

நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் பீடத்தில் நின்று காட்சி தருகிறார். 

நவகிரகத்தில் இது சூரியன் தலமாக உள்ளது.


110 அடி உயர ராஜகோபுரம்.


வேங்கடமுடையான் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக உள்ளது. 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...