ஆழ்வார் திருநகரி- என்ற- திருக்குருகூர்.
திவ்யதேசம் மற்றும் நவதிருப்திகளில் ஒன்று, நவகிரங்களில் குரு ஸ்தலம்.
பெயர்காரணம் - (திருக்குருகூர்)
“;ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம் பாடியாடிபணிந்து பல்படிகால் வழியேறிக் கண்டீர் கூடிவானவரேத்த நின்ற திருக்குரு கூரதனுள் ஆட்புட் கொடியாகி மூர்த்திக்கு அடிமை புகுவதே” (திருவாய்மொழி).
பிரும்மாவுக்கு குருவாக இருந்து அருள்புரிந்தமையால் திருக்குருகூர் என்ற பெயர் பெற்றது.
குருகன் என்ற அரசன் ஆட்சி புரிந்தமையால் குருகாபுரி என்ற பெயர் பெற்றது.
“குருகு” என்றால் “சங்கு” என்று பொருள். சங்குக்கு மோட்சம் கிடைத்தமையால் குருகூர் என்ற பெயர் பெற்றது.
பெயர்காரணம். (ஆழ்வார் திருநகரி)
நம்மாழ்வார் அவதாரத்திற்கு பிறகு அவர் மகிமை காரணமாக “ஆழ்வார் திருநகரி” என்ற சிறப்பு பெயர் பெற்றது.
நம்மாழ்வார் வரலாறு.
மாறன்காரி - உடையநங்கை என்ற தம்பதியினருக்கு, மகனாக அவதரித்தார். இந்த தம்பதியினர் திருக்குருகூர் ஆதிநாராயணபெருமானிடம் வரம் வேண்டினர். நானே மகனாக உங்களுக்கு அவதிரிப்பேன் என்று கனவில் கூறினார். கனவை பகிர்ந்த கொண்ட தம்பதியினர் பேரானந்தம் கொண்டனர். ஆனால் பிறந்த குழந்தை செயலற்று இருந்தது. இதை முறையிட ஆதிநாராயணிடம் சென்றனர். இந்த குழந்தை புளியமரப்பொந்தில் அமர்ந்து தியானிக்க தொடங்கியது.
( 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இந்த மரத்தை இன்றளவும் தரிசனம் செய்யமுடிகிறது.) 16 ஆண்டுகள் உணவு மற்றும் உறக்கம் இன்றி கழிந்தது. ஆனால் உடல் சீராக இருந்தது.
மதுரகவியாழ்வாருக்கு தெற்கில் ஒரு பேரொளி தோன்றியது, அதை பின்தொடர்ந்து வந்து திருக்குருங்குடி ஆதிநாராயணபெருமாள் கோவில் உள்ளே உள்ள புளியமரத்தடியில் உள்ள நம்மாழ்வாரிடம் வந்து அந்த ஒளி மறைந்தது. மதுரகவியாழ்வார் இவரே நமது குருநாதர் என்று அறிந்து கொண்டார். ஆழ்வார்களில் நம்மாழ்வாரே முதன்மையானவர். ஊன் உறக்கம் இன்றி இருப்பவரிடம், “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? “என்று வினா எழுப்புகிறார் மதுரகவியாழ்வார்;. “அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று விடையளிக்கிறார் நம்மாழ்வார்.
ஞானம் பெற என்ன வழி என்பது கேள்வி. பக்தி மார்கத்தில் ஈடுபட்டு இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பது நம்மாழிவார் பதில்.
நம்மாழ்வார் சிறப்பு.
4000 திவ்யபிரபந்தத்தில் 1200க்கு மேற்பட்ட பாசுரங்கள் (பாடல்கள்) பாடியவர்.
ஆழ்வார்களில் தலமையானவர்.
நான்கு வேதங்களை அடிப்படையாக கொண்டு, திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம். என்று நான்கு தலைப்புகளில் பாசுரங்கள் வழங்கியுள்ளார்.
ஏனைய ஆழ்வார்கள், பல பெருமாள் கோவில்களுக்கு சென்று பாடல்கள் பாடினர். ஆனால் நம்மாழ்வார் பாடலை கேட்க இறைவனே வந்ததாக கூறப்படுகிறது.
மாறன் சடகோபன், பராங்குசன் என்ற பெயர்களையும் உடையவர்.
கோவில் சிறப்புகள்.
5000 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள புளியமரம்.
ஊற்சவ சேவைக்காக யாழிகள் செதுக்கி உருவாக்கிய தூண்கள் கொண்ட மண்டபம்.
நம்மாழ்வாரின் பூதஉடலுக்கு மேல் கட்டப்பட்ட நம்மாழ்வார் சன்னதி.
நவதிருப்பதிபெருமாளும் எழுந்தருளும் கருடசேவை. (ஆழ்வார் ஜென்மநட்சத்திரத்தில்) என்று பலசிறப்புகளை உள்ளடக்கிய ஷேத்ரம் ஆழ்வார் திருநகரி.;
No comments:
Post a Comment